Sivakarthikeyan - ஆதாரத்தை கண்ணில் பார்த்தேன்.. இமான் - சிவகார்த்திகேயன் விவகாரத்தில் பகீர் கிளப்பிய பிஸ்மி

சென்னை: Sivakarthikeyan (சிவகார்த்திகேயன்) இசையமைப்பாளர் டி.இமான் சில மாதங்களுக்கு முன்பு அளித்த பேட்டி ஒன்றில் சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் செய்துவிட்டதாக தெரிவித்திருந்தார். அந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சூழலில் தற்போது அதுதொடர்பான ஆதாரத்தை கண்ணில் பார்த்ததாக பிஸ்மி தெரிவித்திருக்கிறார்.

சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் டாப் 10 ஹீரோக்களில் ஒருவர். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான மாவீரன் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. தற்போது அவர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனது 21ஆவது படத்தில் நடித்துவருகிறார். அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்திலும் நடிக்க கமிட்டாகியிருக்கிறார்.

Jouranlist Bismi Talks about Sivakarthikeyan Imman Controversy

இப்படி பிஸியாக இருக்கும் சிவகார்த்திகேயனுக்கு கோலிவுட்டில் க்ளீன் பாய் என்ற இமேஜ் இருந்தது. மது, புகை போன்ற எந்த பழக்கமும் இல்லாமல் எந்த சர்ச்சையிலும் சிக்காமல் இருந்தார். ஆனால் இசையமைப்பாளர் டி.இமான் சில மாதங்களுக்கு முன்பு அளித்த பேட்டி ஒன்றின் மூலம் சிவகார்த்திகேயனுக்கு இருந்த க்ளீன் பாய் இமேஜை டேமேஜ் செய்தார்.

துரோகம்: அவர் அளித்த பேட்டியில், "சிவகார்த்திகேயன் எனக்கு மிகப்பெரிய துரோகத்தை செய்துவிட்டார். அவருடன் இந்த ஜென்மத்தில் மீண்டும் இணைந்து பணியாற்றமாட்டேன். குழந்தைகளின் எதிர்கால நலனுக்காக அந்த துரோகத்தை வெளியே சொல்லமாட்டேன்" என்று குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து சிவகார்த்திகேயன் செய்த துரோகம் என்னவாக இருக்கும் என்று பலரும் தங்களது யூகங்களை சொல்ல ஆரம்பித்தனர். முக்கியமாக இமானின் முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்ததற்கு சிவாதான் காரணம் என்ற பேச்சும் பலமாக அடிபட்டது.

புகைப்படம்: இமான் வைத்த குற்றச்சாட்டுக்கு சிவகார்த்திகேயன் இதுவரை எந்த பதிலும் கொடுக்கவில்லை. சூழல் இப்படி இருக்க சமீபத்தில் அவர் தனது மனைவி ஆர்த்தி மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார். ஆனால் தன்னுடைய குடும்பத்தில் எந்த பிரச்னையும் இல்லை என்பதை காட்டிக்கொள்வதற்காகவே அந்த புகைப்படத்தை வெளியிட்டதாக சிலர் கூறினர்.

பிஸ்மி பேட்டி: இந்த விவகாரம் குறித்து சிவகார்த்திகேயன் இதுவரை வாய் திறக்காமல் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பத்திரிகையாளர் பிஸ்மி அளித்திருந்த ஒரு பேட்டியில், "டி.இமான் குடும்பத்தில் சிவகார்த்திகேயன் செய்த துரோகத்தை முதலில் நான் தான் பொதுவெளிக்கு கொண்டு வந்தேன். இமான் சொல்வதை பொய் என்றே வைத்துக்கொள்வோம். ஆனால் அதனை சிவகார்த்திகேயன் ஏன் இன்னும் மறுக்கவில்லை. சிவகார்த்திகேயன் - இமான் விவகாரத்தில் ஆதாரத்தை நானே கண்ணால் பார்த்திருக்கிறேன்"" என்றார். இதனை பார்த்த ரசிகர்கள் என்ன ஆதாரமாக இருக்கும் என கேள்வி எழுப்பிவருகின்றனர்.

இமான் மனைவி: இதற்கிடையே இமான் - சிவகார்த்திகேயன் விவகாரம் குறித்து இமானின் முதல் மனைவி மோனிகா அளித்திருந்த பேட்டியில், ""எங்களுடைய குடும்ப நண்பர் சிவகார்த்திகேயன். அவர் ரொம்பவே நாகரீகமான மனிதர். இமானுக்கும் அவருக்கும் நல்ல நட்பு உண்டு. நண்பர் என்ற முறையில் எங்கள் குடும்பத்தின் மேல் அக்கறையாகவே இருப்பார். என்னுடைய மகள்களுக்கும் அவரை பிடிக்கும்.

எனக்கும் இமானுக்கும் விவாகரத்து நடக்கக்கூடாது என்று எங்கள் இருவருக்குமிடையே பஞ்சாயத்து செய்து வைக்க வந்தார். நாங்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டுமென்று சாமதான முயற்சிகளை எடுத்தார். இமானுடைய விவாகரத்து முடிவுக்கு சிவகார்த்திகேயன் சப்போர்ட் செய்யவே இல்லை. நியாயத்து பக்கம் நின்றார். சிவகார்த்திகேயன் அப்படி செய்தது இமானுக்கு பிடிக்கவில்லை"

சிவகார்த்திகேயன் தனக்கு சப்போர்ட் செய்யவில்லை என்பதைத்தான் இமான் துரோகம் என்று சொல்கிறார் என்பது எனக்கு புரிகிறது. ஆனால் அதை வெளியில் வேறு மாதிரி புரிந்துகொள்கிறார்கள். இதில் பாதிக்கப்பட்டது இப்போது சிவகார்த்திகேயன்தான். இதற்காக நான் வருத்தப்படுகிறேன். பாவம் அவர்" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X