கவர்ச்சி நடிகை வீட்டில் வேலை செய்தவர்தான் விக்னேஷ் சிவனாம்.. பிரபலம் என்ன இப்படி பேசுறாரு?

சென்னை: போடா போடி படத்தில் இயக்குநராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். அந்தப் படம் சுமாரான வரவேற்பை பெற்றாலும் அவர் அடுத்ததாக இயக்கிய நானும் ரௌடிதான் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்தப் படத்தின்போதுதான் நடிகை நயன்தாராவை காதலித்தார். பிறகு இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள். சூழல் இப்படி இருக்க சமீப நாட்களாக அவர்கள் இரண்டு பேருமே தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிவருகிறார்கள். இந்நிலையில் விக்னேஷ் சிவன் குறித்து பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி பேசியிருக்கிறார்.

போடா போடி படத்தில் இயக்குநராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். சிம்பு, வரலட்சுமி, ஷோபனா, விடிவி கணேஷ் என பலர் நடித்திருந்த அந்தப் படம் நல்ல கதையம்சத்துடன் வந்தாலும் போட்டியாக களமிறங்கிய துப்பாக்கி படத்தினால் இருக்கும் இடம் தெரியாமல் போனது போடா போடி திரைப்படம். அந்தப் படத்துக்கு பிறகு விக்னேஷ் சிவனுக்கு படம் இயக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே போஸ்டர் டிசைன், பாடல்கள் எழுதுவது என தன்னை சினிமாவில் வைத்துக்கொண்டார். அப்படி அவர் என்னை அறிந்தால் படத்திலும் ஒரு பாடலை எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.

nayanthara vignesh shivan bismi

நயன்தாராவுடன் திருமணம்: அதனையடுத்து நானும் ரௌடிதான் படத்தை இயக்கினார். அந்தப் படத்தில்தான் விக்னேஷ் சிவனும், நயனும் காதலிக்க தொடங்கினர். பல வருடங்கள் லிவிங் டுகெதரில் இருந்தவர்கள் கடந்த 2022ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு உயிர், உலக் என இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

எல்ஐகே: அஜித்தின் 62ஆவது படத்தை இயக்குவதாக இருந்த விக்னேஷ் சிவன் அதிலிருந்து வெளியேறி; இப்போது எல்ஐகே என்ற படத்தை இயக்கிவருகிறார். முதலில் அந்தப் படத்துக்கு எல்ஐசி என்று பெயர் வைக்கப்பட்டிருந்தது. லலித் படத்தை தயாரிக்க இதில் பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே.சூர்யா, கீர்த்தி ஷெட்டி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் இதில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தினை விக்னேஷ் சிவன் ரொம்பவே எதிர்பார்த்திருக்கிறார்.

nayanthara vignesh shivan bismi

சர்ச்சையில் விக்னேஷ் சிவன்: சூழல் இப்படி இருக்க சமீப நாட்களாக நயனும், விக்னேஷ் சிவனும் சர்ச்சையில் சிக்கிவருகின்றனர். தனுஷுடன் அவர்களுக்கு ஏற்பட்ட மோதலை அடுத்து; நயன் ஒரு பேட்டி கொடுத்தார். அந்தப் பேட்டியில் வலைப்பேச்சு குழுவினரை மூன்று குரங்குகள் என்று கூறினார். நயனின் அந்தப் பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தார்கள். முக்கியமாக உயர்ந்த இடத்தில் இருக்கும் நயன் இப்படியா தரம் தாழ்ந்து பேசுவது என்றும் ஓபனாகவே கேட்க ஆரம்பித்தார்கள்.

பிஸ்மி பதிலடி: இதற்கிடையே புதுச்சேரி அரசுக்கு சொந்தமான ஹோட்டலை விக்னேஷ் சிவன் விலைக்கு கேட்டதாக கூறப்பட்டது. ஆனால் அதனை மறுத்து விக்கி விளக்கமளித்திருந்தார். இந்நிலையில் வலைப்பேச்சு பிஸ்மி சமீபத்தில் ஒரு பேட்டி கொடுத்தார். தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த அந்தப் பேட்டியில் விக்னேஷ் சிவன் குறித்து பேசிய அவர், "கவர்ச்சி நடிகை சோனா வீட்டில் வேலை செய்தவர்தான் விக்னேஷ் சிவன். பல மாதங்கள் அவரது வீட்டில்தான் விக்னேஷ் சிவன் தங்கியிருந்தார்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X