விஜய் நடிகைகள் பின் அலைபவரா?.. அந்த முயற்சி நடக்குது.. விளாசிய பிரபலம்
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கிறார் விஜய். 2026ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் அந்தக் கட்சி போட்டியிடவிருக்கிறது. முழுக்க முழுக்க அரசியலில் அவர் கவனம் செலுத்த ஆரம்பித்திருப்பதால் இன்னும் ஒரு படத்தில் மட்டுமே நடிக்கிறார். அந்தப் படத்துக்கு தளபதி 69 என இப்போதைக்கு பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. படத்தை ஹெச்.வினோத் இயக்கிவருகிறார். இந்தச் சூழலில் விஜய் குறித்து பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி பேசியிருக்கிறார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த GOAT படம் போதிய வரவேற்பை பெறவில்லை. அந்தப் படத்தில் கமிட்டானபோதே தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார் விஜய். கட்சியின் முதல் மாநில மாநாடு கடந்த வருடம் விக்கிரவாண்டியில் பிரமாண்டமாக நடைபெற்றது. அதில் பேசிய விஜய் தனது கட்சியின் கொள்கை என்ன?.. அரசியல் எதிரி யார் என்பது குறித்து பேசினார். அவரது பேச்சில் பெரும்பாலும் ஆளும் அரசான திமுகவிற்கு எதிரான கருத்துக்களே இடம்பெற்றிருந்தன.

விடாத விஜய்: முதல் மாநில மாநாட்டோடு அப்படிப்பட்ட பேச்சை விஜய் நிறுத்துவார் என்று பார்த்தால் அது தொடர்ந்துகொண்டே செல்கிறது. அதாவது எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் என்ற புத்தக வெளியீட்டில் திருமாவளவனால் கலந்துகொள்ள முடியவில்லை. விஜய் கலந்துகொண்டார். அப்போது பேசிய விஜய், இந்த புத்தக வெளியீட்டு விழாவுக்குக்கூட திருமாவளவனால் கலந்துகொள்ள முடியவில்லை. எனில் அவருக்கு கூட்டணி கட்சிகள் எவ்வளவு அழுத்தம் கொடுத்திருப்பார்கள் என்று மறைமுகமாக திமுகவை விளாசினார்.
திமுகவினரின் பதிலடி: விஜய் தொடர்ந்து திமுகவை தாக்கி பேசுவதை பார்த்த அக்கட்சியினர் தங்கள் பங்குக்கு பதிலடி கொடுக்க ஆரம்பித்தார்கள். ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களை தன்னுடைய பனையூர் அலுவலகத்துக்கு வரவழைத்து நிவாரண பொருட்களை வழங்கிய விஜய்யை, இவர் ஒர்க் ஃப்ரம் ஹோம் அரசியல் செய்கிறார் என்று கிண்டலடித்தனர். அதற்கு விஜய்யும் தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக பதிலடி கொடுத்திருந்தார். இப்படி விஜய்யின் அரசியல் பயணம் திமுகவை எதிர்த்தபடி சென்றுகொண்டிருக்கிறது.
கீர்த்தி சுரேஷ், விஜய்: இதற்கிடையே சமீபத்தில் நடந்த பொங்கல் நிகழ்ச்சி ஒன்றில் கீர்த்தி சுரேஷ் தனது கணவர் ஆண்டனி தட்டிலுடன் கலந்துகொண்டார். அதில் விஜய்யும் கலந்துகொண்டார். அதனை கவனித்த விஜய்யின் எதிர் தரப்பினர் பனையூர் அலுவலகத்திலிருந்து வெளியே வந்தால் நேராக கீர்த்தி சுரேஷைத்தான் விஜய் பார்க்க செல்வார் போல என்று பேசினார்கள். மேலும் நடிகை திரிஷாவையும் விஜய்யுடன் இணைத்து வைத்து தொடர்ந்து கிசுகிசுக்கள் பரவிவருகின்றன.
பிஸ்மி பேட்டி: இப்படி கிசுகிசு பரப்பி விஜய்யின் இமேஜை டேமேஜ் செய்ய ஒரு குரூப் இருப்பதாக விஜய்யின் ஆதரவாளர்கள் கூறுகிறார்கள். இந்நிலையில் பிரபல பத்திரிகையாளரான பிஸ்மி தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "விஜய்யின் மேனேஜர் ஜெகதீஷ் ரூட் என்ற நிறுவனத்தை நடத்திவருகிறார். அந்த நிறுவத்தில்தான் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அதில்தான் கீர்த்தி சுரேஷ் தனது கணவருடன் கலந்துகொண்டாரே ஒழிய அது அவரது தல பொங்கல் விழா கிடையாது.
விஜய் ஏன்?: ஜெகதீஷை விஜய் தன்னுடைய மேனேஜராக மட்டுமில்லாமல் உடன் பிறந்த சகோதரராகவே பார்க்கிறார். அவரது வீட்டுக்கு பக்கத்தில்தான் அந்த ரூட் நிறுவனம் இருக்கிறது. அதன் காரணமாகத்தான் அந்த பொங்கல் விழாவில் கலந்துகொண்டார். உடனே கீர்த்தி சுரேஷுடன் இணைத்து வைத்து பேசுகிறார்கள். அதேபோல் திரிஷாவுடனும் இணைத்து பேசுகிறார்கள். விஜய்யின் அரசியல் வருகையையும், வளர்ச்சியையும் திமுகவினரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. விஜயகாந்த்தை எப்படி குடிகாரர் இமேஜ் குத்தி காலி செய்தார்களோ அதேபோல் விஜய்க்கு பெண் பித்தர், நடிகைகளுக்கு பின் அலைபவர் என்று பிம்பம் குத்த ஒரு கூட்டம் தொடர்ந்து முயன்றுகொண்டே இருக்கிறது என்றார்.


Click it and Unblock the Notifications











