மகள் மீது அளவு கடந்த பாசம்.. பாதி சொத்தையே வரதட்சணையாக கொடுத்தாரா அர்ஜுன்?.. பிரபலம் சொன்ன சீக்ரெட்
சென்னை: அர்ஜுனின் மூத்த மகள் ஐஸ்வர்யாவும், தம்பி ராமையாவின் மகன் உமாபதியும் கடந்த சில வருடங்களாக காதலித்துவந்தார்கள். அவர்களது திருமணத்துக்கு இரண்டு வீட்டார்களும் சம்மதம் தந்ததையடுத்து இருவரும் கடந்த 10ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர். திருமணம் சிம்ப்பிளாக நடந்தாலும் அவர்களது திருமண வரவேற்பு பிரமாண்டமாக நடந்தது. அதில் ரஜினிகாந்த் உள்ளிட்ட திரை பிரபலங்கள் கலந்துகொண்டனர். இந்தச் சூழலில் அர்ஜுன் கொடுத்த வரதட்சணை குறித்து பத்திரிகையாளர் செய்யாறு பாலு பேசியிருக்கிறார்.
ஆக்ஷன் கிங் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் அர்ஜுன். நடிகராக மட்டுமின்றி இயக்குநராகவும் தமிழ் சினிமாவில் ஜொலித்தவர். இவரிடம்தான் நடிகர் விஷால் உதவி இயக்குநராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. வயதானதை அடுத்து ஹீரோவாக நடிப்பதிலிருந்து ஒதுங்கிய அர்ஜுன், இப்போது வில்லன் கதாபாத்திரம், குணச்சித்திர வேடங்களில் நடித்துவருகிறார். இந்த ஜானரிலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்திவருகிறார் ஆக்ஷன் கிங். கடைசியாக லியோ படத்தில் நடித்திருந்த இவர், இப்போது விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார்.

அர்ஜுன் மகள்: அர்ஜுனுக்கு மொத்தம் இரண்டு மகள்கள். அவர்களில் மூத்த மகள் ஐஸ்வர்யா பட்டத்து யானை படத்தில் அறிமுகமானார். அதற்கு பிறகு சில படங்களில் நடித்த அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இதனையடுத்து சினிமாவிலிருந்து ஒதுங்கிய அவர்; தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடந்த ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்டார். அந்த ஷோவை தொகுத்து வழங்கியது அர்ஜுன் என்பது குறிப்பிடத்தக்கது.
காதல்: அந்த ரியாலிட்டி ஷோவில் நடிகரும், இயக்குநருமான தம்பி ராமையாவின் மகன் உமாபதியும் கலந்துகொண்டார். உமாபதியும் ஒருசில படங்களில் நடித்திருக்கிறார். ரியாலிட்டி ஷோவில் இரண்டு பேருக்கும் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. தங்களது காதலை இரண்டு பேருமே வலுவாக்கிய பிறகு தங்களது வீடுகளில் ஓபனாக கூறிவிட்டனர். இரண்டு வீடுகளிலும் தங்களது வாரிசின் காதலுக்கு எந்த வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் பச்சைக் கொடி காட்டிவிட்டனர்.
திருமணம்: அதனையடுத்து கடந்த 10ஆம் தேதி இரண்டு பேரும் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்துக்கு நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தார்கள். அதனையடுத்து நடந்த திருமண வரவேற்பில் ரஜினிகாந்த் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த அரஜுன், தனக்கு உமாபதி மருமகனாக வருவார் என்று கனவில்கூட நினைத்து பார்த்ததில்லை. அவர் மிகச்சிறந்த பையன் என்று புகழ்ந்திருந்தார்.
வரதட்சணை: சூழல் இப்படி இருக்க அர்ஜுன் தனது மகள் கல்யாணத்துக்கு 500 கோடி ரூபாய் வரதட்சணை வழங்கியதாக தகவல்கள் வந்தன. இந்நிலையில் பத்திரிகையாளர் செய்யாறு பாலு இந்த விவகாரம் குறித்து அளித்த பேட்டியில், "சென்னை போரூரில் அர்ஜுனுக்கென்று நிறைய இடங்கள் இருக்கின்றன. ஏன் ஒரு கிராமத்தையே அவர் வைத்திருக்கிறார். தனி அப்பார்ட்மெண்ட் எல்லாம் அவரது சொத்தாக இருக்கிறது.
சொத்து எல்லாமே: அர்ஜுன் 500 கோடி ரூபாய், 1000 கோடி ரூபாய் வரதட்சணை கொடுத்ததாக சமூக வலைதளங்களில் சொல்கிறார்கள். மேலும் 1000 வகையான சாப்பாடு இருந்தது என்றெல்லாம் சொல்கிறார்கள். ஆனால் அதெல்லாம் சும்மா. இணையத்தில் வரக்கூடிய தகவல். அர்ஜுனுக்கு ஆண் வாரிசு இல்லை. எனவே அவர் வைத்திருக்கும் சொத்துக்கள் எல்லாமே அவரது இரண்டு மகள்களுக்குத்தான்" என்றார். இதனைப் பார்த்த ரசிகர்கள், சொத்துக்கள் மகள்களுக்கு என்றால்; ஐஸ்வர்யாவுக்கு தனது பாதி சொத்தை வரதட்சணையாக கொடுத்துவிட்டாரோ என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











