850 கோடி ரூபாய்க்கு அதிபதி.. சரத்குமாரைவிட பெரிய ஆள்.. வரலட்சுமி திருமணம் பற்றி பிரபலம் ஓபன் டாக்
சென்னை: நடிகர் சரத்குமாரின் முதல் மனைவி சாயாவுக்கு பிறந்தவர் வரலட்சுமி. கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் ஃபேமஸான நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கும் அவர் நிக்கோலாய் என்பவரை காதலித்துவந்தார். இருவருக்கும் தாய்லாந்தில் கடந்த இரண்டாம் தேதி திருமணம் நடந்தது அதனையடுத்து திருமண வரவேற்பு சென்னையில் நடந்தது. இந்தச் சூழலில் நிக்கோலாய் குறித்து பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு பல விஷயங்களை பேசியிருக்கிறார்.
கோலிவுட்டின் சீனியர் நடிகர்களில் ஒருவரான சரத்குமாருக்கு மொத்தம் இரண்டு மனைவிகள். முதல் மனைவியை பிரிந்த அவர் அடுத்ததாக ராதிகாவை திருமணம் செய்துகொண்டார். இவர்களில் முதல் மனைவிக்கு பிறந்தவர் வரலட்சுமி. வெளிநாட்டில் படிப்பை முடித்துவிட்டு வந்த வரலட்சுமிக்கு சினிமாவில் நடிக்க ஆசை இருந்தாலும்; சரத்குமார் ஒத்துக்கொள்ளவில்லை. இதன் காரணமாக பாய்ஸ் உள்ளிட்ட பல படங்களை வரலட்சுமி தவறவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

போடா போடி: ஒருவழியாக சரத்குமாரின் மனம் மாறியதை அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிம்பு ஹீரோவாக நடித்த போடா போடி படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார் வரு. அந்தப் படம் ஓரளவுதான் வரவேற்பை பெற்றாலும் வரலட்சுமியின் நடிப்பு பலரையும் கவர்ந்தது. நடிப்பு, நடனம் என அனைத்திலும் அந்தப் படத்தில் கலக்கினார். அதன் காரணமாக அடுத்தடுத்து சொல்லிக்கொள்ளும்படியான பட வாய்ப்புகள் அவருக்கு கிடைக்க ஆரம்பித்தன.
தாரை தப்பட்டை: அவரது கரியரில் முக்கியமான படங்களில் ஒன்று தாரை தப்பட்டை. இயக்குநர் பாலா இயக்கிய அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தாலும்; வரலட்சுமிக்குள் இருக்கும் மிகச்சிறந்த நடிகை அந்தப் படத்தில் வெளியே வந்தார். அந்தப் படத்துக்கு பிறகு கண்டிப்பாக வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்தவருக்கு; நினைத்தபடி சரளமாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இருந்தாலும் பட வாய்ப்புகள் கோலிவுட்டிலும், டோலிவுட்டிலும் வந்துகொண்டிருக்கின்றன. ஆனால் படங்கள் பெரிய ஹிட்டாகவில்லை.
காதல்: இதற்கிடையே நடிகர் விஷாலை வரலட்சுமி காதலித்துவந்ததாக கூறப்பட்டது. பிறகு நிக்கோலாய் என்பவரை காதலிக்க ஆரம்பித்தார். நிக்கோலாய் மும்பையில் ஆர்ட் கேலரி ஒன்றை வைத்திருக்கிறார். அவருக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து நடந்துவிட்டது. மேலும் அவருக்கு டீன் ஏஜில் ஒரு மகளும் இருக்கிறார். சூழல் இப்படி இருக்க இவர்களது காதலுக்கு சரத்குமார் பச்சைக்கொடி காண்பிக்க திருமண வேலைகள் மும்முரமடைந்தன.
தாய்லாந்தில் திருமணம்: அதன்படி அவர்களது திருமணம் தாய்லாந்திலும், திருமண வரவேற்பு சென்னை லீலா பேலஸ் ஹோட்டலிலும் நடந்தது. கடந்த சில நாட்களாகவே வரலட்சுமியின் திருமணம்தான் ஹாட் டாபிக்காக ஓடிக்கொண்டிருக்கிறது. முக்கியமாக நிக்கோலாயின் சொத்து மதிப்பு குறித்தும், அவர் எவ்வளவு பெரிய பணக்காரர் என்பது தொடர்பாகவும் பலரும் பலவிதமாக பேசிவருகிறார்கள். அந்த வகையில் பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு நிக்கோலாய் குறித்து பேசியிருக்கிறார்.
சரத்குமாரைவிட பெரிய ஆள்: தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேசிய பாலு, "மும்பையில் ஆர்ட் கேலரி வைத்திருக்கும் நிக்கோலாய், மாதத்துக்கு சில ஓவியங்கள் விற்றால் போதும் கால் ஆட்டிக்கொண்டு அமரலாம். அவரது மொத்த சொத்து மதிப்பு மொத்தம் 850 கோடி ரூபாய்வரை இருப்பதாக சொல்கிறார்கள். அப்படி பார்க்கையில் சரத்குமாரைவிடவும் பணத்தில் நிக்கோலாய்தான் பெரிய ஆள். இந்தத் திருமணத்தில் அழைப்பிதழ் கொடுத்ததிலிருந்து, அதை ப்ரூஃப் பார்த்தது, தாய்லாந்து பாலி தீவில் நடந்த திருமணம், சென்னையில் நடந்த வரவேற்புவரை அத்தனையையும் பார்த்து பார்த்து செய்தது நிக்கோலாய்தான். மேலும் அவ்வளவு செலவு செய்திருக்கிறார்" என்றார். முன்னதாக வரலட்சுமிக்கு நிக்கோலாய் தங்கத்தில் செருப்பு வாங்கிக்கொடுத்ததாக ஒரு தகவல் ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











