Adhik Marriage - மகள் ஐஸ்வர்யா திருமணம்.. ஆசைப்பட்ட பிரபு குடும்பம்?.. கண்டிஷன் போட்ட ஆதிக் ரவிச்சந்திரன்?

சென்னை: Adhik Ravichandran Marriage (ஆதிக் ரவிச்சந்திரன் திருமணம்) பிரபு மகள் ஐஸ்வர்யாவுக்கும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் நடந்த திருமணம் குறித்து புதிய தகவல் வெளியாகியிருக்கிறது.

தமிழ் சினிமாவின் தவிர்க்கவே முடியாத ஒருவர் சிவாஜி கணேசனின் பேத்தி ஐஸ்வர்யா. பிரபுவின் மகளான இவர் முதலில் தனது அத்தையான தேன்குழலியின் மகன் குணாலை திருமணம் செய்துகொண்டார். எப்போது உறவுகளுக்கு பெண் எடுத்து கொடுக்கும் வழக்கமுடையது சிவாஜி கணேசனின் குடும்பம். அந்த அடிப்படையில்தான் குணாலுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் திருமணம் நடந்தது.

Jouranlist Cheyyaru Balu Opens up About Adhik And Aishwarya Marriage

பிரிவு: இருவருக்கும் சுமூகமாக போய்க்கொண்டிருந்த திருமண வாழ்க்கையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதற்கு காரணம் சொத்து பிரச்னைதான் என்று கூறப்படுகிறது. அதாவது சிவாஜியின் சொத்தை பிரபு தனது தங்கைக்கு ஒழுங்காக பிரித்துக்கொடுக்கவில்லை என்றும்; அதனால்தான் தாயின் பேச்சை கேட்டு குணால் ஐஸ்வர்யாவைவிட்டு பிரிந்துவிட்டதாகவும் ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது.

காதல்: சூழல் இப்படி இருக்க திரிஷா இல்லைனா நயன்தாரா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ஆதிக் ரவிச்சந்திரனுடன் ஐஸ்வர்யாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. அந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. அந்தக் காதலை பிரபுவிடம் ஐஸ்வர்யா சொல்ல ஆரம்பத்தில் தயக்கம் காண்பித்த பிரபு பின்னர் பச்சைக்கொடி காட்டினார். இதனால் அவர்களது திருமணம் 15ஆம் தேதி நடக்கும் என்று கூறப்பட்டது.

திருமணம்: அதன்படி சென்னையில் பிரபலமான 5 ஸ்டார் ஹோட்டலில் இருவருக்குமான திருமணம் நடந்தது. இதில் ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஷால், லெஜெண்ட் சரவணன் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். ஐஸ்வர்யாவுக்கு 42 வயது என்பது குறிப்பிடத்தக்கது. சீக்ரெட்டாக வைக்கப்பட்டு சிம்ப்பிளான முறையில் திருமணம் நடந்து முடிந்தது.

வரதட்சணை: திருமணம் சிம்ப்பிளாக முடிந்தாலும் வரதட்சணையில் எந்த குறையையும் பிரபு வைக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதாவது பல நூறு கோடி ரூபாயையும்; நகைகள், சொகுசு கார்கள், பங்களா என வரதட்சணையில் இளைய திலகம் பிரபு மெர்சல் செய்துவிட்டாராம். இந்நிலையில் அவர்களது திருமணம் எதற்காக சிம்ப்பிளாக நடந்தது என்று பத்திரிகையாளர் செய்யாறு பாலு தெரிவித்திருக்கிறார்.

செய்யாறு பாலு பேட்டி: அவர் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "ஆதிக் ரவிச்சந்திரனின் அப்பா சினிமாவில் இயக்குநராக வேண்டும் என்று ஆசையில் இருந்தவர். அவர் உதவி இயக்குநராகவும், இணை இயக்குநராகவும் பணியாற்றியிருக்கிறார். ஆனால் இயக்குநர் ஆகவில்லை. ஏகப்பட்ட அவமானங்களை சந்தித்திருக்கிறார்.

தன்னை அவமானப்படுத்திய சினிமாவில் தன்னுடைய மகனை இயக்குநராக களமிறக்க வேண்டும் என்று தீவிரமாக இருந்தார். அதன்படி ஆதிக்கும் இயக்குநராகிவிட்டார். இனி ஆதிக்கின் சினிமா வாழ்க்கையில் நல்லது நடக்கலாம். 500 கோடி ரூபாய்கூட பிரபு குடும்பம் ஆதிக்கிற்கு வரதட்சணையாக கொடுத்திருக்கலாம்.

ஏன் சிம்ப்பிள் திருமணம்: இந்தத் திருமணத்தை பெரிய மாநாடு போல பிரமாண்டமாகவே நடத்தியிருக்கலாம். அதைத்தான் பிரபு குடும்பமும் ஆசைப்பட்டது. ஆனால் ஆதிக் ரவிச்சந்திரன் தரப்பில் இந்தத் திருமணத்தை சிம்ப்பிளாக வைத்துக்கொள்ளலாம் என கூறியிருக்கின்றனர். மேலும் உங்கள் வெல் விஷர்ஸ், எங்கள் வெல் விஷர்ஸை மட்டும் திருமணத்துக்கு அழைத்தால் போதும் என்றும் அவர்கள் கூறியிருக்கிறார்கள். அதனால்தான் இந்தத் திருமணம் சிம்ப்பிளாக நடந்தது. இருந்தாலும் இது பேசப்படக்கூடிய திருமணமாக மாறிவிட்டது" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X