Vidaamuyarchi - ஓவர் செலவு.. விடாமுயற்சியால் விழி பிதுங்கி நிற்கும் லைகா நிறுவனம்?.. என்ன ஏகே இதெல்லாம்

சென்னை: அஜித்குமார் நடிப்பில் கடைசியாக துணிவு திரைப்படம் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. அந்தப் படத்தின் வெற்றிக்கு பிறகு அவர் இப்போது விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார். படத்தை மகிழ் திருமேனி இயக்குகிறார். அஜர்பைஜானில் நடந்து வந்த ஷூட்டிங் முடிந்த சூழலில் அடுத்தக்கட்ட ஷூட்டிங்கிற்கான லொக்கேஷன் தேடும் பணிகள் மும்முரமடைந்துள்ளன.

தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களில் ஒருவரான அஜித் இப்போது விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார். தற்கால இயக்குநர்களில் கவனத்தை ஈர்த்திருக்கும் மகிழ் திருமேனி இப்படத்தை இயக்கிவருகிறார். அவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான கலகத்தலைவன் படத்துக்கு நல்ல வரவேற்பே கிடைத்தது. இதன் காரணமாக விடாமுயற்சி படத்தை சிறந்த படமாக கொடுப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்க அனிருத் படத்துக்கு இசையமைக்கிறார்.

Jouranlist Cheyyaru Balu Talks about Ajith And Vidaamuyarchi

முடிந்த ஷூட்டிங்: படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டதிலிருந்து விடாமுயற்சி படத்திலிருந்து வேறு எந்த அப்டேட்டும் வரவில்லை. இதன் காரணமாக அஜித் ரசிகர்கள் கொஞ்சம் அப்செட் ஆனார்கள். ஆனால் பொங்கல் பண்டிகையையொட்டி ஒரு அப்டேட்டை வெளியிட்டது லைகா. அதன்படி படத்தின் ஓடிடி உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் வாங்கியிருப்பதாக கூறப்பட்டது. அதை பார்த்த ரசிகர்கள் இதெல்லாம் ஒரு அப்டேட்டா என நொந்துகொண்டனர். சூழல் இப்படி இருக்க அஜர்பைஜான் ஷெட்யூல் முடிந்துவிட்டதாக அஜித்தின் புகைப்படத்தை பகிர்ந்து அவரது மேனேஜர் சுரேஷ் சந்திரா தெரிவித்திருந்தார்.

அடுத்த லொக்கேஷன் எங்கே?: அதேபோல் அஜர்பைஜான் ஷெட்யூல் முடிந்ததைத் தொடர்ந்து அடுத்தக்கட்டமாக எங்கு ஷூட்டிங் நடக்கும் என்று கேள்வி எழுந்தது. அதன்படி ஒன்று சென்னையில் செட் போட்டு படமாக்குவார்கள் இல்லை ஹைதராபாத் ராமோஜி பிலிம் சிட்டிக்கு செல்வார்கள் என்று கூறப்படுகிறது. படத்தை ஏப்ரல் அல்லது மே மாதத்தில் திரைக்கு கொண்டு வர மகிழ் திருமேனி முழு மூச்சோடு வேலை செய்துவருவதாகவும் ஒரு பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது.

அடுத்த படம்: விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங்கே இன்னும் முடியாத சூழலில் அஜித்தின் அடுத்தப் படம் குறித்த தகவல் கடந்த சில வாரங்களாக பரவிவருகிறது. அதன்படி திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அடங்காதவன் அசராதவன், மார்க் ஆண்டனி ஆகிய படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்தின் 63ஆவது படத்தை இயக்குவார் என்று கூறப்பட்டது. அதுமட்டுமின்றி இந்தப் படத்துக்கான பூஜையும் சமீபத்தில் நடந்து முடிந்ததாகவும் திரைத்துறையில் முணுமுணுப்பு எழுந்தது.

செய்யாறு பாலு பேட்டி: இந்நிலையில் சினிமா பத்திரிகையாளரான செய்யாறு பாலு சமீபத்தில் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜானில் மட்டும் 10 ஷெட்யூல்கள்வரை கண்டிப்பாக நடந்திருக்கும். ஆனால் ஒரே வார்த்தையில் அஜர்பைஜான் ஷெட்யூல் முடிந்துவிட்டதாக அஜித் தரப்பு கூறியது ஆச்சரியமளிக்கிறது.

விழி பிதுங்கிய லைகா: லைகா நிறுவனம் இந்தப் படத்துக்காக போட்டு வைத்திருந்த பட்ஜெட்டைவிடவும் அதிகம் போகிறது போல் தெரிகிறது. இதனாலேயே அந்த நிறுவனம் விழி பிதுங்கி நிற்கிறது. உதாரணமாக ஒரு லைட் ஒன்றை துருக்கியில் வாங்கியிருக்கிறார்கள் படக்குழு. சீனியர் லைட் மேன் ஒருவரும் இப்படத்தில் பணியாற்றுகிறார். அவர் அந்த லைட்டின் விலையை கேட்டிருக்கிறார். விலையை தெரிந்து அதிர்ச்சியான அவர் இந்த விலைக்கு பாதி அவுட்டோர் யூனிட்டையே வாங்கியிருக்கலாம் என்று சொல்லியிருக்கிறார்.

ரசிகர்கள் யாருமே வராத இடத்தில்தான் ஷூட்டிங் நடத்த வேண்டும் என்று அஜித் கண்டிஷன் போட்டிருக்கிறார். அது ஏன் என்று தெரியவில்லை. திட்டமிட்ட காலத்துக்குள் படப்பிடிப்பை முடிக்க வாய்ப்பே இல்லை என்றுதான் கருதப்படுகிறது. ரஜினிகாந்த் எல்லாம் இப்போதும் டாப்பில் இருக்கிறார் என்றால் திட்டமிட்ட படப்பிடிப்பை நடத்துவதில் கவனமாக இருப்பார். பழைய அஜித்தை லைகா நிறுவனம் இப்போது தேடிக்கொண்டிருக்கிறது" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X