Vikram - நெருக்கமாக நடிக்க பயந்த விக்ரம்.. தைரியம் கொடுத்த ஐஸ்வர்யா ராய்.. செய்யாறு பாலு ஷேரிங்ஸ்
சென்னை: Vikram (விக்ரம்) நெருக்கமாக நடிக்க பயந்த விக்ரமுக்கு ஐஸ்வர்யா ராய் தைரியம் கொடுத்ததாக செய்யாறு பாலு கூறியிருக்கிறார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார் விக்ரம். ரொம்பவே கஷ்டப்பட்டு இந்த இடத்துக்கு வந்திருக்கும் அவரை பெரும்பாலானோருக்கு பிடிக்கும். ஏனெனில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரத்துக்கு முழுதாக தன்னை ஒப்படைத்துக்கொள்பவர் அவர். எனவே அவரை யாருக்குமே வெறுக்க மனது வரவில்லை.

தங்கலான்: இப்படி பலரை சம்பாத்தித்திருக்கும் விக்ரமுக்கு கடந்த சில வருடங்களாக ஹிட் படமே இல்லை. பொன்னியின் செல்வனின் இரண்டு பாகங்களும் ஹிட் என கூறப்பட்டாலும் அது ஒரு மல்டி ஸ்டாரர் படம் என்பதால் அந்த வெற்றியின் பங்கு முழுக்க முழுக்க விக்ரமுக்கு மட்டுமே போய் சேராது. அதன் காரணமாக சோலோ ஹிட் கொடுக்க காத்திருக்கிறார்.
தங்கலான் ஹிட்தான்: அதற்காக இயக்குநர் பா.இரஞ்சித்துடன் கைகோர்த்திருக்கிறார் அவர். தங்கலான் படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது. இறுதிக்கட்ட பணிகள் ஆரம்பித்திருக்கின்றன. கோலார் தங்க வயலில் தமிழர்கள் பட்ட இன்னல்களை பற்றி படம் பேசுகிறது. இதன் டீசர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. படம் ஜனவரி மாதம் ரிலீஸாகவிருக்கிறது. மேலும் இந்தப் படத்தை ஆஸ்கருக்கு அனுப்பும் திட்டத்திலும் படக்குழு இருக்கிறது.
சிறந்த நடிகர்: குறிப்பாக விக்ரம் என்ற மிகச்சிறந்த நடிகனை இன்னும் தமிழ் சினிமா முழுவதுமாக கொண்டாடவில்லை. அதனால் அவருக்கு ஒரு மெகா ஹிட் படம் அமைய வேண்டும் என்பதுதான் ரசிகர்கள் அனைவரது விருப்பம். அது தங்கலான் படத்தின் மூலம் நிறைவேறும் என்றும் விக்ரமின் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
செய்யாறு பாலு பேட்டி: இந்நிலையில் பத்திரிகையாளர் செய்யாறு சமீபத்தில் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், “விக்ரமும் அபிஷேக் பச்சனும் நெருங்கிய நண்பர்கள். விக்ரம் பற்றி அமிதாப் பச்சனிடம் நிறைய சொல்லியிருக்கிறார் அபிஷேக் பச்சன். அதனை ஒரு விழாவில் விக்ரமிடம் அமிதாப் பச்சனும் விக்ரமிடம் தெரிவித்தார்.
நிலைமை இப்படி இருக்க ராவணன் படத்தில் விக்ரமும், ஐஸ்வர்யா ராயும் சேர்ந்து நடித்தார்கள். அப்போது இருவரும் ஏறக்குறைய நெருக்கமாக நடிக்க வேண்டிய காட்சி ஒன்று இருந்தது. ஆனால் அமிதாப்பின் மருமகள், அபிஷேக்கின் மனைவி ஐஸ்வர்யா ராய். அவருடன் எப்படி நெருக்கமாக நடிப்பது என்ற பதற்றம் விக்ரமுக்கு இருந்தது. அதை புரிந்துகொண்ட ஐஸ்வர்யா ராய், விக்ரமிடம் வந்து அதெல்லாம் ஒன்றும் இல்லை. நான் ஒரு நடிகைதான். இந்த கேரக்டருக்கு தேவைப்படுகிறது. அதனால் எந்தப் பதற்றமும் இல்லாமல் நடியுங்கள் என தைரியம் சொன்னார்" என்றார்.


Click it and Unblock the Notifications











