Dhanush - யாருங்க அவன் நாக்குப்பூச்சி மாதிரி.. தனுஷ் - ஐஸ்வர்யா திருமணத்தால் கோபமான சரத்குமார், நெப்போலியன்?
சென்னை: நடிகர் தனுஷ் ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். சுமூகமாக போய்க்கொண்டிருந்த அவர்களது திருமண வாழ்க்கை தற்போது பிரிவில் நிற்கிறது. இந்தச் சூழலில் பத்திரிகையாளர் செய்யாறு பாலு பேசியிருக்கும் விஷயம் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.
துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான தனுஷ் பல விமர்சனங்களை கடந்து இன்று மிகச்சிறந்த நடிகர் என்ற இடத்தில் இருக்கிறார். தமிழ் சினிமாவில் இவர் எல்லாம் நிலைக்கவே மாட்டார் என்று பலரும் கூறினர். ஆனால் அவர்களின் கணிப்பை தவிடுபொடியாக்கி கோலிவுட்டிலிருந்து ஹாலிவுட்வரை சென்றிருக்கிறார் தனுஷ். எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் ரொம்பவே அசால்ட்டாக ஸ்கோர் செய்துவிடும் அவர் ஆடுகளம், அசுரன் படங்களுக்காக தேசிய விருதையும் வாங்கியிருக்கிறார்.

கேப்டன் மில்லர்: அவரது நடிப்பில் கடைசியாக கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியானது. ராக்கி, சாணிக்காயிதம் ஆகிய படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் படத்தை இயக்கியிருந்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் ரிலீஸான அந்தப் படம் சுமாரான வரவேற்பையே பெற்றது. மேலும் எழுத்தாளர் வேல ராமமூர்த்தியும் படத்தின் கதை தனது பட்டத்து யானை நாவலின் கதை என்றும் கூறி பரபரப்பை கிளப்பினார். அடுத்ததாக தனுஷ் சேகர் கம்முல்லா படத்தில் நடித்துவருகிறார். ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்துவருகிறது.
இயக்குநர் தனுஷ்: தனுஷ் நடிகராக மட்டுமின்றி இயக்குநராகவும் ஜொலித்துவருகிறார். ராஜ்கிரண் உள்ளிட்டோரை வைத்து அவர் இயக்கிய பவர்பாண்டி படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. தனது 50ஆவது படத்தையும் அவரே இயக்குகிறார். அதுதொடர்பான வேலைகள் முடிந்துவிட்டன. கண்டிப்பாக பவர் பாண்டி படம் போல இந்தப் படமும் சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்கும் என்று அவரது ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.
பிரிந்த தனுஷ்: இதற்கிடையே தனுஷ் கடந்த 2004ஆம் ஆண்டு ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். சுமூகமாக போய்க்கொண்டிருந்த திருமண வாழ்க்கை சில வருடங்களுக்கு பிரிவில் நின்றது. இருவரும் பிரிந்தாலும் இதுவரை இரண்டு பேரும் விவாகரத்து பெறவில்லை. அவர்களை சேர்த்து வைக்க குடும்பத்தினர் முயன்றுவருவதாக கூறப்படுகிறது.
செய்யாறு பாலு பேச்சு: இந்நிலையில் பத்திரிகையாளர் செய்யாறு பாலு வெளியிட்டிருக்கும் ஒரு வீடியோவில், "தனுஷுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் கடந்த 2004ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. ஐஸ்வர்யாவை காதலிப்பதற்காகவே அப்போது போயஸ் கார்டனில் ஒரு ஃப்ளாட்டை வாடகைக்கு எடுத்து தனுஷ் தங்கியிருந்தார் என்றெல்லாம் சொல்வார்கள். ரஜினியின் மகளை தனுஷ் திருமணம் செய்துகொண்டது பலருக்கும் ஆச்சரியத்தையே கொடுத்தது.
அவர்களது திருமணம் நடந்த சமயத்தில் ஐயா படத்தின் ஷூட்டிங் தென்காசியில் நடந்துகொண்டிருந்தது. அங்கு பத்திரிகையாளர் என்ற முறையில் சென்றிருந்தேன். அப்போது நெப்போலியன் என்னிடம், 'என்னங்க எல்லா மீடியாக்காரங்களும் போயஸ் கார்டனிலேயே போய் நின்னுட்டீங்களே' என நொந்துகொண்டார். அதேபோல் சரத்குமார் என்னிடம் பேசுகையில், 'யாருங்க அவன் (தனுஷ்) ஒல்லியா நாக்கு பூச்சி மாதிரி ஒருத்தன் வந்திருக்கான். அவன் ரஜினி வீட்ல பொண்ணு எடுத்துருக்கான்.
நீங்களும் அங்கேயே போய் கெடக்கீங்க. நாட்ல எவ்வளவு பிரச்னை இருக்கு. அதையெல்லாம் விட்டுட்டீங்களே எங்களுக்கு ரொம்பவே வருத்தம்' என்று அவரது ஆதங்கத்தை கொட்டினார். இப்படித்தான் பலரும் தனுஷ் - ஐஸ்வர்யா திருமணம் குறித்து பேசினார்கள். அது பொறாமையாகக்கூட இருந்திருக்கலாம்" என்று பேசியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











