A.R.Rahman - மகளின் திருமணம் ஏ.ஆர்.ரஹ்மானின் அந்தஸ்த்துக்கு ஈடு இல்லை.. பத்திரிகையாளர் ஷேரிங்ஸ்
சென்னை: உலக அளவில் பிரபலமான இசையமைப்பாளராக திகழ்பவர் ஏ.ஆர்.ரஹ்மான். இரண்டு ஆஸ்கர்கள், கோல்டன் குளோப் விருதுகளை வென்றிருக்கிறார். கடைசியாக அவரது இசையமைப்பில் அயலான் திரைப்படம் வெளியானது. அடுத்ததாக பிப்ரவரி மாதம் ஒன்பதாம் தேதி ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிப்பில் லால் சலாம் திரைப்படம் வெளியாகவுள்ளது.
இளையராஜாவிடம் உதவியாளராக இருந்து பல விளம்பர படங்களுக்கு இசையமைத்து ரோஜா படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏ.ஆர். ரஹ்மான். தான் இசையமைத்த முதல் படத்திலேயே அனைவரது வரவேற்பையும் பெற்று தேசிய விருதையும் பெற்றார். அதன் பிறகு ரஹ்மான் போட்ட மெட்டெல்லாம் ஹிட்டாக பாலிவுட்டுக்கு சென்று அங்கும் தனது கொடியை பறக்கவைத்தார். இதனால் இந்தியா முழுவதும் அறியப்படும் இசையமைப்பாளராக மாறினார்.

இரண்டு ஆஸ்கர்களை அள்ளிவந்த தமிழன்: பாலிவுட்டில் இசையமைத்துக்கொண்டிருந்த ஏ.ஆர். ரஹ்மான் ஸ்லம்டாக் மில்லியனர் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமானார். இந்தியாவில் எப்படி அறிமுகமான முதல் படத்திலேயே தேசிய விருதை வென்றாரோ அதேபோல் ஹாலிவுட்டிலும் தான் அறிமுகமான முதல் படத்திலேயே கோல்டன் க்ளோப் விருதுகளையும், இரண்டு ஆஸ்கர் விருதுகளையும் பெற்று அசத்தினார்.
மாமன்னன் ரஹ்மான்: பொதுவாக ஏ.ஆர்.ரஹ்மான் மீது ஒரு அடையாளம் இருக்கிறது. ஷங்கர், மணிரத்னம் போன்ற பெரிய இயக்குநர்களின் படங்களுக்குத்தான் இசையமைப்பார் என்பதுதான் அது. ஆனால் மாமன்னன் படத்துக்கு இசையமைத்ததன் மூலம் தனக்குள் அப்படி எந்த பாகுபாடும் இல்லை என்பதை உணர்த்தியிருக்கிறார். அந்தப் படத்துக்கு சிறப்பான இசையை கொடுத்திருந்தார். அவரது இசையமைப்பில் கடைசியாக அயலான் திரைப்படம் வெளியானது. அடுத்ததாக லால் சலாம் திரைப்படம் வெளியாகவிருக்கிறது. மேலும் கமல் ஹாசன், மணிரத்னம் இணைந்திருக்கும் தக் லைஃப் படத்துக்கும் இசையமைத்திருக்கிறார்.
தக் லைஃப் ஏ.ஆர்.ரஹ்மான்: பார்ப்பதற்கு அமைதியாக இருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் தனது பதில்களால் அதிரவைப்பவர். ஒரு செய்தியாளர் சந்திப்பின்போது இப்போதைய பாடல்களில் வரிகள் ஒழுங்காக கேட்க மாட்டேங்குது என செய்தியாளர் கூற நல்ல குவாலிட்டியில் ஹெட்ஃபோன் வாங்கி போட்டு கேட்டு பாருங்க என அதிரடியாக கூறியிருந்தார். அதேபோல் தனது மனைவி ஹிந்தியில் பேசியபோது தமிழில் பேசுங்க ப்ளீஸ் என சொல்லி அரங்கத்தை அதிரவைத்தார். குறிப்பாக எந்த ஈகோவும் இல்லாமல் அவர் பழகக்கூடியவர் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் சொல்வதுண்டு.
கம்பீரன் பேட்டி: ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் இருக்கிறார்கள். அவர்களில் கதீஜாவுக்கு சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த சூழலில் அந்தத் திருமணம் குறித்து பத்திரிகையாளர் கம்பீரன் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "ஏ.ஆர்.ரஹ்மான் அவரது குழந்தைகளுக்கு முழு சுதந்திரத்தை கொடுத்திருக்கிறார். தான் சொல்வதைத்தான் அவர்கள் கேட்க வேண்டும்; செய்ய வேண்டும் என்று என்றைக்குமே ஆதிக்கம் செலுத்தியதில்லை.
சவுண்ட் இன்ஜினியருக்கு திருமணம்: அவருடைய மகள் கதீஜாவை தன்னிடம் சவுண்ட் இன்ஜினியராக பணியாற்றியவருக்குத்தான் திருமணம் செய்து கொடுத்திருக்கிறார். கதிஜாவின் திருமணம் ஏ.ஆர்.ரஹ்மானின் தற்போதைய அந்தஸ்துக்கான திருமணமா என்று கேட்டால் நிச்சயமாக இல்லை என்பதே பதிலாக இருக்கும். ஆனால் அவர் அந்தப் பையனுடைய கேரக்டரைத்தான் பார்த்தார். அந்தப் பையன் ரொம்பவே நல்ல கேரக்டர் என்று தெரிந்தது. உடனே அவர்களது திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்துவிட்டார்" என்றார்.


Click it and Unblock the Notifications











