சிவகார்த்திகேயனின் நைட் பார்ட்டி?.. மனைவியை அனுப்பிய டி.இமான்?.. பத்திரிகையாளர் சொன்ன ஷாக் நியூஸ்

சென்னை: Sivakarthikeyan Imman Controversy (சிவகார்த்திகேயன் டி.இமான் சர்ச்சை) சிவகார்த்திகேயன் வைத்த நைட் பார்ட்டிக்கு டி.இமான் தனது முதல் மனைவி மோனிகாவை அனுப்பியதாக பத்திரிகையாளர் பாண்டியன் ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

Jouranlist Pandian Reveals Shocking information about sivakarthikeyan d imman issue

சிவகார்த்திகேயனின் ஆரம்பகட்ட வளர்ச்சியில் டி.இமானின் பங்கு ரொம்பவே முக்கியமானது. அவருடைய படங்களுக்கு டி.இமான் கொடுத்த பாடல்கள் பட்டித்தொட்டியெங்கும் ஒலித்து சிவாவை பலரிடம் கொண்டுபோய் சேர்த்தது. அதன் காரணமாக இரண்டு பேருமே நெருங்கிய நண்பர்களாக மாறினர். குறிப்பாக சிவகார்த்திகேயனை இமான் தனது உடன் பிறந்த தம்பியாகவே பார்த்தார் என்று பலரும் கூறுவதுண்டு.

டி. இமான் பேட்டி: சூழல் இப்படி இருக்க கடந்த சில வருடங்களாகவே இருவரும் இணையாமல் இருந்தனர். எல்லோரும் அதற்கான காரணத்தை தேடிக்கொண்டிருக்க டி.இமான் சமீபத்தில் ஒரு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், "சிவகார்த்திகேயன் எனக்கு மிகப்பெரிய துரோகத்தை செய்துவிட்டார். அதை எனது வாழ்நாள் முழுவதும் மறக்கமாட்டேன். அவருடன் இணைவது இந்த ஜென்மத்தில் நடக்காது. குழந்தைகளின் எதிர்கால நலனுக்காக அதை நான் வெளியில் சொல்லமாட்டேன்" என்று பல விஷயங்களை பேசினார்.

விவாகரத்துக்கு காரணம்?: இமானின் இந்தக் குற்றச்சாட்டை அடுத்து அவருக்கும் அவரது முதல் மனைவி மோனிகாவுக்கும் நடந்த விவாகரத்துக்கு காரணமே சிவகார்த்திகேயன் என பலர் பேச ஆரம்பித்தனர். ஆனால் அதனை தீவிரமாக மறுத்த மோனிகா, "இமானின் விவாகரத்து முடிவுக்கு சிவகார்த்திகேயன் சப்போர்ட் செய்யவில்லை. அதைத்தான் அவர் துரோகம் என்கிறார் என்பதை நான் புரிந்துகொள்கிறேன். ஆனால் வெளியில் தவறாக புரிந்துகொள்கிறார்கள்" என்று கூறினார்.

ஓபனாக சொல்லுங்கள்: மோனிகாவின் இந்த விளக்கத்துக்கு பிறகு ஒருதரப்பினர் சிவகார்த்திகேயனுக்கு சப்போர்ட் செய்ய ஆரம்பித்தனர். அதேசமயம் சிவா ஏன் இதில் மௌனம் காக்க வேண்டும். என்ன நடந்தது என்பதை ஓபனாக அவர் சொல்ல வேண்டியதுதானே என மற்றொரு தரப்பினர் கூறிவருகின்றனர். மேலும் சிவகார்த்திகேயனின் வளர்ச்சியை பிடிக்காமல்தான் அவர் மேல் இப்படி கல் எறிகிறார்கள் என்று எஸ்கேவின் ரசிகர்களும் கோதாவில் குதித்தனர்.

நைட் பார்ட்டி: இந்நிலையில் பத்திரிகையாளர் பாண்டியன் தனியார் யூட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் டி.இமான் - சிவகார்த்திகேயன் விவகாரம் குறித்து பேசியிருக்கும் விஷயங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றன. அந்தப் பேட்டியில் பேசிய அவர், "சிவகார்த்திகேயன் ஒரு நைட் பார்ட்டி வைத்தார். அந்தப் பார்ட்டிக்கு இமானைத்தான் சிவகார்த்திகேயன் அழைத்திருந்தார்.

Jouranlist Pandian Reveals Shocking information about sivakarthikeyan d imman issue

மனைவியை அனுப்பிய இமான்: ஆனால் இமான் அந்த நேரத்தில் இசையமைப்பதில் பிஸியாக இருந்ததால் தன்னால் வரமுடியாது என்று கூறி மோனிகாவை அனுப்பி வைத்தார். சினிமாவில் இருப்பவருக்கு இரவு விருந்தில் என்ன நடக்கும் என்பது தெரியாதா?.. அப்படி தெரிந்தும் எதற்காக தன்னுடைய மனைவியை அனுப்பி வைக்க வேண்டும். அந்த நைட் பார்ட்டிக்கு போன இமானின் மனைவி அங்கு காணாமல் போய்விட்டார். குதிரை ஓடிய பிறகு லாயம் போட்டு என்ன பிரயோஜனம் என்பது போல் இமான் இப்போது பேசி என்ன பிரயோஜனம்" என தெரிவித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X