சொத்துக்காகத்தான் கல்யாணமாம்.. யப்பா 200 கோடி ரூபாயா?.. நெப்போலியன் மகன் திருமணம் பற்றி பிரபலம் ஓபன்
சென்னை: நெப்போலியனின் மகன் தனுஷுக்கு முதலில் அமெரிக்காவில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் அங்கு நடந்தால் குடியுரிமை பிரச்னை வரும் என்பதால் மகனின் திருமணத்தை ஜப்பானில் நடத்த திட்டமிட்டு அதனையொட்டி கப்பலில் தனது குடும்பத்தினருடன் அங்கு சென்ற சூழலில்; ஜப்பானில் அவர்களது திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. சூழல் இப்படி இருக்க யூட்யூப் சேனல்களுக்கு பேட்டி கொடுத்து பிரபலமடைந்த தமிழா தமிழா பாண்டியன் சில விஷயங்களை பேசியிருக்கிறார்.
பாரதிராஜாவின் இயக்கத்தில் ஹீரோவாக ஆறிமுகமானவர் நெப்போலியன். தொடர்ந்து ஹீரோ, வில்லன் என பல பாத்திரங்களில் நடித்த அவர் அரசியலிலும் தனது தடத்தை பதித்து இணை அமைச்சராகவும் இருந்தார். அவருக்கு தனுஷ், குணால் என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். அவர்களில் தனுஷுக்கு சிறு வயதிலேயே தசை சிதைவு நோய் வந்தது. முதலில் இந்தியாவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் இங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை திருப்தி அளிக்காததால் அமெரிக்காவில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

அமெரிக்காவில் செட்டில்: மகனின் சிகிச்சையை முன்னிட்டு குடும்பத்துடன் அமெரிக்காவுக்கு சென்று செட்டிலானார். அங்கு ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியையும் தொடங்கி அதனை தனுஷின் பொறுப்பில் கொடுத்தார். தனுஷும் அதனை திறம்பட கையாண்டுவருகிறார். குறிப்பாக நெப்போலியனின் நிறுவனத்தில் தமிழர்கள் அதிகம் பணியாற்றி வருகிறார்கள். இதற்கிடையே நெப்போலியன் அவ்வப்போது இந்தியாவுக்கு வந்து செல்கிறார். சினிமாவிலிருந்து ஏறத்தாழ முழுவதுமாக ஒதுங்கியும்விட்டார் அவர்.
மகனுக்கு திருமணம்: சூழல் இப்படி இருக்க தனது மகன் தனுஷுக்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுத்து அக்ஷயா என்ற பெண்ணை பார்த்தார். தனுஷ் - அக்ஷயா நிச்சயதார்த்தம் சில மாதங்களுக்கு முன்பு நடந்தது. தனுஷால் விமானத்தில் பயணப்பட்டு இந்தியாவுக்கு வர முடியாது என்பதால் வீடியோ காலில் கலந்துகொண்டார் தனுஷ். அவரது திருமணம் அமெரிக்காவில் நடந்தால் சில சிக்கல்கள் வரும் என்பதால் ஜப்பானில் நடத்த திட்டமிட்டார்.
குவிந்த பிரபலங்கள்: அதனையடுத்து தனது குடும்பத்துடன் அமெரிக்காவிலிருந்து ஜப்பானுக்கு கப்பலில் சென்றார். திருமண ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்த சூழலில் அத்திருமணத்தில் கலந்துகொள்வதற்காக குஷ்பூ, ராதிகா, மீனா, கலா மாஸ்டர், சரத்குமார், பாண்டியராஜன் என பல பிரபலங்கள் ஜப்பானுக்கு படையெடுத்தனர். கடந்த ஏழாம் தேதி ஜப்பானில் அவர்களது திருமணம் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்தச் சூழலில் பிரபல பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் இந்தத் திருமணம் குறித்து பேசியிருக்கிறார்.

பாண்டியன் பேட்டி: தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், “நெப்போலியனின் மகன் தனுஷ் ஒரு சிறப்பு குழந்தை. அவரால் மற்ற ஆண்கள் போல் செயலாற்ற முடியாது. அவரது சிகிச்சைக்காகத்தான் அமெரிக்காவுக்கு சென்று செட்டில் ஆனார் நெப்போலியன். அங்கு கிட்டத்தட்ட 500 ஏக்கர் அவருக்கு சொந்தமாக இருக்கிறது. இதெல்லாம் அவர் மத்திய அமைச்சராக இருந்தபோது சம்பாதித்த பணம்.
சொத்துக்காகத்தான்: தனது காலத்துக்கு பிறகு தன்னுடைய மகனை பார்த்துக்கொள்ள ஒருவர் வேண்டுமென்பதற்காக ஒரு பெண்ணை பார்த்தார். அந்தப் பெண்ணை பொறுத்தவரை அவர் ஒரு தாதி. ஒரு நர்ஸ் எப்படி ஒருவரை பார்த்துக்கொள்வாரோ அப்படித்தான் அவர் தனுஷை பார்த்துக்கொள்ள வேண்டும். இன்னும் சொல்லப்போனால் தனுஷுக்கு ஒரு தாதியாகவும்; நெப்போலியனின் மொத்த சொத்துக்களுக்கும் ஒரு பாதுகாவலராகவும்தான் அக்ஷயா இருப்பார். அதுதான் உண்மை. அவர் தனது வாழ்க்கையையே தியாகம் செய்திருக்கிறார். அதேபோல் திருமணத்துக்கு 200 கோடி ரூபாய் என்றெல்லாம் சொல்கிறார்கள். அவ்வளவெல்லாம் இல்லை. மிஞ்சிப்போனால் 20 கோடி ரூபாய்வரைதான் செலவாகும்" என்றார்.


Click it and Unblock the Notifications











