Vijay - திரிஷாவுக்கு வைர நெக்லஸ் வாங்கிக்கொடுத்த விஜய்?.. பத்திரிகையாளர் பாண்டியன் கிளப்பிய பரபரப்பு
சென்னை: நடிகை திரிஷா முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்துவருகிறார். விஜய்யுடன் இணைந்து அவர் கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி, லியோ உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இவர்கள் இருவருக்குமான கெமிஸ்ட்ரி எவர் க்ரீன் என்று ரசிகர்களால் சொல்லப்படுவதுண்டு. இந்த சூழலில் அவர்கள் பற்றி பத்திரிகையாளர் பாண்டியன் தெரிவித்திருக்கும் விஷயம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழ் சினிமாவில் ஃபேவரைட் ஜோடி என பெயர் எடுத்தவர்கள் விஜய்யும், த்ரிஷாவும். இருவரும் இணைந்து கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி உள்ளிட்ட படங்களில் நடித்தனர். இந்த நான்கு படங்களில் ஆதி, குருவியை தவிர்த்து மற்ற இரண்டு படங்களும் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகின. ஃப்ளாப்பான இரண்டு படங்களிலும்கூட இருவரது கெமிஸ்ட்ரி பயங்கரமாக ஒர்க் அவுட் ஆனதாகவும் ரசிகர்கள் மத்தியில் கருத்து நிலவியது.

குருவிக்கு பிறகு நோ: குருவி படம் கடந்த 2008ஆம் ஆண்டு வெளியானது.அதற்கு பிறகு இரண்டு பேரும் சேர்ந்து நடிக்கவில்லை. அதேசமயம் விஜய்யும், த்ரிஷாவும் இணைந்து நடித்தபோது இரண்டு பேரையும் இணைத்து பல ஆண்டுகள் கிசுகிசுக்கப்பட்டன. அந்த கிசுகிசுவுக்கு முற்றுப்புள்ளி வைக்கத்தான் பல வருடங்களாக இரண்டு பேரும் இணைந்து நடிக்கவே இல்லை என்ற பேச்சும் கோலிவுட்டில் ஓடியது.
லியோவில் இணைந்த ஜோடி: சூழல் இப்படி இருக்க லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் கமிட்டானார் விஜய். இதில் அவருக்கு ஜோடி யார் என்று பலராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சர்ப்ரைஸாக த்ரிஷா ஹீரோயினாக கமிட்டானார். இதனால்பல ஆண்டுகள் கழித்து தங்களது ஃபேவரைட் ஜோடியை திரையில் பார்ப்பதற்கு ஆவலோடு தியேட்டருக்கு சென்றனர் ரசிகர்கள். அவர்கள் எதிர்பார்த்தபடியே இருவருக்குமான கெமிஸ்ட்ரி லியோ படத்திலும் பக்காவாக செட் ஆனது.
லிப்லாக்: உச்சக்கட்ட ஆச்சரியமாக படத்தில் விஜய்க்கும், திரிஷாவுக்கும் இடையே லிப்லாக் காட்சியும் இருந்தது. இதுஒருபக்கம் இருக்க விஜய்யும், திரிஷாவும் இணைந்து நடித்ததாலும், லிப்லாக் செய்ததாலும் விஜய் மீது அவரது மனைவி சங்கீதா உச்சக்கட்ட கோபத்தில் இருப்பதாகவும் அதனால்தான் அவர் லண்டன் சென்றுவிட்டதாகவும் வேகமாக ஒரு தகவல் பரவியது குறிப்பிடத்தக்கது.
டேட்டிங்: அதுமட்டுமின்றி லியோ படத்தின் ஷூட்டிங் நடந்தபோது விஜய்யும் திரிஷாவும் வெளிநாட்டுக்கு டேட்டிங் சென்றதாகவும் பரபரப்பாக பேசப்பட்டது. ஏற்கனவே விஜய்யையும், திரிஷாவையும் இணைத்து பல வருடங்களுக்கு முன்பே கிசுகிசுக்கப்பட்டது. அது சில வருடங்கள் ஓய்ந்திருந்த சூழ்நிலையில் லியோ படத்தின் மூலம் மீண்டும் கிளம்பியது.
பாண்டியன் பேட்டி: இந்நிலையில் பத்திரிகையாளர் பாண்டியன் விஜய் - திரிஷா குறித்து அளித்த பேட்டியில் பேசியிருக்கும் விஷயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அவர் அளித்த பேட்டியில், "திரிஷா வீட்டில் ஒருமுறை ஐடி ரெய்டு நடந்தது. அப்போது வீட்டில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வைர நெக்லஸ் ஒன்று இருந்தது. அது எப்படி வந்தது என்று அதிகாரிகள் கேட்டபோது விஜய்தான் வாங்கிக்கொடுத்தார் என்று திரிஷா சொன்னார்"" என பாண்டியன் தெரிவித்தார். அந்தப் பேட்டியை பார்த்த ரசிகர்கள் இதெல்லாம் சுத்த பொய் என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











