பாக்யராஜ் மகள் அந்த நடிகரைத்தான் காதலித்தாரா?..அய்யய்யோ புது பஞ்சாயத்தை கிளப்பி ஷாக் கொடுத்த பிரபலம்

சென்னை: இந்திய சினிமாவில் திரைக்கதை மன்னன் என்று புகழப்படுபவர் பாக்யராஜ். அவரது ஒவ்வொரு படமும் இப்போது பார்த்தாலும் ரசிகர்களுடன் கனெக்ட் ஆகும் சிறப்புடையவை. காமெடி, எமோஷன் என பக்காவாக அவர் ஒரு படத்தை உருவாக்கியதால்தான் அதிக வெள்ளிவிழா கண்ட இயக்குநர்களில் ஒருவராக திகழ்ந்துகொண்டிருக்கிறார். அவருக்கு சாந்தனு என்ற மகனும், சரண்யா என்ற மகளும் இருக்கிறார்கள். சரண்யா பாரிஜாதம் படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவர் குறித்து பிரபல பத்திரிகையாளர் சபிதா ஜோசப் பேசியிருக்கும் விஷயம் ஷாக்கை கொடுத்திருக்கிறது.

இந்திய திரையுலகில் திரைக்கதை மன்னன் என்று புகழப்படுபவர் பாக்யராஜ். அவரது திரைப்படங்களை பார்க்கையில் ஒரு காட்சியில்கூட சலிப்பு தட்டாமல் மொத்த ரசிகர்களும் அந்த கதைக்குள் சென்றுவிடும் மாயத்தை தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் விடாமல் செய்துகொண்டே வந்தவர் அவர். அதனால் அவருக்கென்று இன்றுவரை பலரும் ரசிகர்களாக இருக்கிறாகள் என்பது குறிப்பிடத்தக்கது. இ ப்போதும் அவரது படங்களை டிவியில் போட்டால் பலரும் அமர்ந்து ரசிப்பார்கள்.

சலிக்கவே சலிக்காத படங்கள்: பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக இருந்து அவரது பல படங்களுக்கு தூணாக இருந்திருக்கிறார் பாக்யராஜ். பாரதிராஜா இயக்கி சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள் உள்ளிட்ட படங்களுக்கு கதையையும் எழுதியிருக்கிறார் அவர். இதனையடுத்து சுவரில்லாத சித்திரங்கள் படத்த்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அவர் முதல் படத்திலேயே தனது கதையாலும் திரைக்கதையாலும் கவனிக்கப்படும் இயக்குநராக மாறினார்.

வரிசையாக ஹிட்டுகள் கொடுத்த பாக்யராஜ்: சுவரில்லாத சித்திரங்கள் படத்துக்கு பிறகு அவர் இயக்கிய ஒரு கை ஒரு ஓசை, மௌன கீதங்கள், இன்று போய் நாளை வா, விடியும்வரை காத்திரு, அந்த ஏழு நாட்கள், தூறல் நின்னு போச்சு, முந்தானை முடிச்சு, தாவணி கனவுகள், சுந்தரகாண்டம், ராசுக்குட்டி என அவர் இயக்கிய அத்தனை படங்களுமே ஹிட்டடித்தன. அவரது ஸ்பெஷாலிட்டி என்னவென்றால் ஏ சென்ட்டர், பி சென்ட்டர், சி சென்ட்டர் என அத்தனை செண்டர்களிலும் பாக்யராஜுக்கென்று ரசிகர்கள் இருந்தனர்.

பாக்யராஜின் குடும்பம்: இதற்கிடையே பாக்யராஜின் முதல் மனைவி உடல்நல குறைவால் உயிரிழந்துவிட்டார். அதனையடுத்து நடிகை பூர்ணிமாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார் பாக்யராஜ். அவர்களுக்கு சாந்தனு என்ற மகனும், சரண்யா என்ற மகளும் இருக்கிறார்கள். சாந்தனு தமிழ் சினிமாவில் அடையாளப்பட்ட நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். சரண்யாவோ பாரிஜாதம் என்ற படத்தில் மட்டும் நடித்திருந்தார்.

Jouranlist Sabitha Joseph Talks about Bhagyaraj Daughter Saranya

அதிர்ச்சி கொடுத்த சரண்யா: சூழல் இப்படி இருக்க தனக்கு ஒரு ஆண் குழந்தை இருப்பதாக ஒரு பேட்டியில் சரண்யா கூறினார். ஆனால் கணவர் யார் என்று சொல்லவில்லை. அதேசமயம் அவரை அவரது கணவர் ஏமாற்றிவிட்டார் என்றெல்லாம் பல தகவல்கள் வட்டமடித்துக்கொண்டிருந்தன. அதுமட்டுமின்றி மூன்று முறை தற்கொலை முயற்சி செய்ததாகவும் ஒரு தகவல் ஓடியது. ஆனால் அதில் எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. இந்நிலையில் பாக்யராஜின் மகள் குறித்து பிரபல பத்திரிகையாளர் சபிதா ஜோசப் பல விஷயங்களை பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.

சபிதா ஜோசப் பேட்டி: அவர் அளித்த அந்தப் பேட்டியில், "இந்தத் தலைமுறையில் சிறு வயதிலேயே எல்லோரும் காதலிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். அதுவும் எட்டாம் வகுப்பு படிக்கும்போதே காதலிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். பத்தாவது படிக்கும்போதே பிரேக் அப் என்கிறார்கள். அவர்களை அவர்களுடைய நண்பர்கள் சேர்த்து வைக்க முயற்சியும் செய்கிறார்கள் என்ற நிலைமையெல்லாம் இருக்கிறது. அந்த அளவுக்கு இன்றைய தலைமுறை வந்து நிற்கிறது.

பாரிஜாதம் சொந்த கதை: பாக்யராஜ் தனது மகள் சரண்யாவை வைத்து பாரிஜாதம் திரைப்படத்தை இயக்கினார். இயக்கம் மட்டுமின்றி அதனை தயாரிக்கவும் செய்தார். அதில் ஹீரோவாக பிருத்விராஜ் நடித்திருந்தார். பிருத்விராஜ் சிறந்த நடிகர். பாக்யராஜ் மீது இருக்கும் மரியாதையால் அந்தப் படத்தில் பிருத்விராஜ் நடித்தார். ஆனால் அந்தப் படம் எதிர்பார்த்தபடி பெரிய அளவுக்கு போகவில்லை. பெரிதாக மட்டும் அந்தப் படம் போயிருந்தால் பாக்யராஜின் மகள் தமிழ் சினிமாவில் பெரிய ரவுண்டு வந்திருப்பார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது நடக்கவில்லை. பிருத்விராஜுக்கு ஏற்கனவே திரைத்துறையில் அனுபவம் இருக்கிறது. ஆனால் சரண்யாவுக்கு அப்படி இல்லை.

உண்மையான காதல் என்று நினைத்துவிட்டார்: அதன் காரணமாக படத்தில் பிருத்விராஜை காதலிப்பது போல் நடித்த பாக்யராஜின் மகள் நிஜமாகவே அவரை காதலிக்க ஆரம்பித்துவிட்டதாகத்தான் கேள்விப்பட்டேன். அதாவது பிருத்விராஜை காதலித்து திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று சரண்யா அவராகவே நினைத்துக்கொண்டார்.சினிமாவில் இதெல்லாம் சகஜம். ஆனால் இதனை பிருத்விராஜ் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஏனெனில் அவரைப் பொறுத்தவரை அடுத்தடுத்த கட்டங்களுக்கு செல்ல வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார். தமிழில் பண்ண வேண்டும், மலையாளத்தில் பண்ண வேண்டும் போன்ற நினைப்புகள் அவரிடம் இருந்தன.

தாய், தந்தை சொல்வதை கேட்பார்: பிருத்விராஜ் ஒரு மலையாளி. அவர்களை பொறுத்தவரை திருமணத்துக்கு என்று சில விஷயங்களை பார்ப்பார்கள். அதுமட்டுமின்றி தாய், தந்தை சொல்வதைத்தான் கேட்பார்கள். மேலும் தமிழ்நாட்டுக்கு அவர் நடிக்க மட்டும்தான் வந்திருந்தார். அவருக்கு கேரளாவில் ரசிகர்கள் அதிகம். வாய்ப்புகளும் வந்துகொண்டிருந்தன. அந்த சமயத்தில் தமிழில் வந்து ஒன்றிரண்டு படங்கள் செய்துவிட்டு இதுமாதிரி மீண்டும் அங்கு செல்லும்போது சிக்கல்கள் எழலாம். மலையாளிகள் எப்போதும் மலையாளிகளைத்தான் விரும்புவார்கள். அஜித் - ஷாலினியைகூட எடுத்துக்கொள்ளுங்கள். அஜித் ஓரளவுக்கு மலையாளி. ஷாலினி பக்காவான மலையாளிதானே.

பிருத்விராஜ் பயந்துவிட்டார்: ஒருவேளை பாக்யராஜின் மகளை திருமணம் செய்துகொண்டு தமிழ்நாட்டிலேயே செட்டிலாகியிருந்தால் பிருத்விராஜ் மலையாள திரையுலகில் அடுத்தக்கட்டத்துக்கு சென்றிருக்க முடியாது. அதனால் அவர் பயந்துவிட்டார். ஏன் எம்புரான் மாதிரியான பான் இந்தியா படம்கூட அவரால் கொடுத்திருக்க முடியாது. ஒரு குடும்பத்துக்குள்ளேயே சிக்கியிருப்பார். ஒரு நடிகராக, இயக்குநராக வெல்ல வேண்டும் என்ற நினைப்பில் இருந்தவர் அவர். அப்படி மாற வேண்டுமென்றால் அவர் ஒருவட்டத்துக்குள் சிக்கியிருக்கக்கூடாது என்று நினைத்தவர். அதனால்தான் அந்தக் காதல் வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டார் என நினைக்கிறேன்.

தற்கொலை முயற்சி: தற்கொலை முயற்சி செய்யும் அளவுக்கு சரண்யா பிருத்விராஜை காதலித்தார். ஆனால் பிருத்விராஜுக்கு ஆரம்பத்திலிருந்தே அந்தக் காதலில் பெரிய ஈடுபாடு இல்லை.இருப்பினும் சில பேர் அதை புரிந்துகொள்ளாமால் தான் நினைத்ததுதான் என்று இருப்பார்கள். அந்த சமயத்தில் பாக்யராஜ் வயது ரீதியாகவும் ரொம்ப சின்ன பொண்ணாகவே இருந்தார். அப்போது நீங்கள் இன்னும் படங்கள் செய்ய வேண்டியிருக்கிறது. அடுத்தடுத்த இடத்துக்கு போக வேண்டும் என்று வீட்டில் சொன்னார்கள். அவரும் ஒருகட்டத்தில் இதிலிருந்து மெல்ல மெல்ல வெளியே வர ஆரம்பித்தார். மகளின் ஆசையை நிறைவேற்றதான் ஒவ்வொரு தந்தையும் விரும்புவார். அப்படித்தான் பாக்யராஜும் விரும்பியிருப்பார். இந்த விவாகரத்தின்போது அவரும் செம பிஸியாக இருந்தார். ஒருபக்கம் தொழில் மறுபக்கம் இந்தப் பிரச்னை என்று பாக்யராஜ் இருந்தார்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X