ஜிவி பிரகாஷை சைந்தவி யூஸ் செய்தாராம்.. நிறைய பணம் வாங்கினாராம்.. கொளுத்திப்போட்ட பத்திரிகையாளர்
சென்னை: கோலிவுட்டின் பிரபல இசையமைப்பாளரான ஜிவி பிரகாஷ் பள்ளியில் படிக்கும்போதே தனது ஜூனியர் சைந்தவியை காதலித்தார். பிறகு கடந்த 2013ஆம் ஆண்டு இரு வீட்டார் சம்மதத்துடன் இரண்டு பேருக்கும் திருமணம் நடைபெற்றது. 2020ஆம் ஆண்டு இருவருக்கும் அன்வி என்ற பெண் குழந்தை பிறந்தார். சூழல் இப்படி இருக்க சமீபத்தில் தாங்கள் விவாகரத்து செய்யப்போவதாக இருவருமே அறிவித்தனர். இது கோலிவுட்டில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி மகனும், இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் கோலிவுட்டின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர். இவர் சைந்தவியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவரும் பள்ளி காலத்திலிருந்தே காதலித்துவந்தனர். சைந்தவியும் திரைத்துறையில் பின்னணி பாடகியாக கவனம் ஈர்த்தவர். ஜிவி பிரகாஷின் இசையில் ஏராளமான ஹிட் பாடல்களை பாடியிருக்கிறார். இவர்களுக்கு அன்வி என்ற பெண் குழந்தை இருக்கிறார். இருவரும் கோலிவுட்டில் க்யூட் ஜோடியாக வலம் வந்துகொண்டிருந்தனர்.

விவாகரத்து: ஆனால் யார் கண்பட்டதோ தெரியவில்லை சமீபத்தில் இருவரும் தங்களது விவாகரத்தை அறிவித்தனர். இது ரசிகர்களிடையேயும், திரைத்துறையினரிடமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர்களது பிரிவுக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டன. ஆனால் எங்களது பிரைவேசிக்கு மரியாதை கொடுங்கள். எந்த கதையையும் எழுதாதீர்கள் என்று ஓபனாகவே சைந்தவி கொந்தளித்துவிட்டார். இருந்தாலும் அவர்களது விவாகரத்துக்கான காரணத்தை பலரும் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
நடிகர் ஜிவி பிரகாஷ்: இவர்கள் டைவர்ஸ் செய்ததற்கு ஜிவி பிரகாஷ் நடிக்க வந்ததுதான் காரணம் என்ற கருத்து பலமாக எழுந்திருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான், விஜ உள்ளிட்டோர் தலையிட்டு பஞ்சாயத்து செய்தும் இருவரும் விவாகரத்தில் உறுதியாக இருந்தார்கள் என்றும் சொல்லப்படுகிறது. இந்தச் சூழலில் பத்திரிகையாளர் உமாபதி இவர்கள் விவாகரத்து விவகாரம் தொடர்பாக தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியிருக்கும் விஷயங்கள் அதிர்ச்சி தரும்வகையில் இருக்கின்றன.
உமாபதி பேட்டி: அவர் அளித்த பேட்டியில், "சைந்தவி போன்ற பெண்கள் எதற்கும் ஆகமாட்டார்கள். ஒருவரின் வளர்ச்சியை வைத்து அவர்கள் வளர்ந்துவிடுவார்கள். கடைசியில் அவரை பிடிக்கவில்லை; என்னுடைய வாழ்க்கை போய்விட்டது. சுதந்திரம் போய்விட்டது என்று சொல்வார்கள். பிரபலமாக இருக்கும்போது யூஸ் செய்து வாழ்ந்துவிட்டு கடைசியில் சுதந்திரம் கிடைக்கவில்லை என்று சொல்லிவிடுவார்கள். சுதந்திரம் வேண்டுமென்றால் மற்றவர்களின் பணத்தை பயன்படுத்தக்கூடாது.
பணத்தை வாங்கிவிட்டார்: பிரபலங்களை திருமணம் செய்துகொண்டு சொகுசான வாழ்க்கையை வாழ்ந்துவிட்டு கடைசியில் தனியாக சென்றுவிடுவார்கள். ஜிவி பிரகாஷை பள்ளி பருவத்திலிருந்தே காதலித்தேன் என்று சைந்தவி பல பேட்டிகளில் செய்திருக்கிறார். ஆனால் இப்போது பிரிந்துவிட்டார். ஜிவியை பிரிந்த பிறகு சைந்தவி நிறைய பணம் வாங்கிவிட்டார். இவ்வளவு நாள் வாழ்ந்துவிட்டு எவ்வளவோ சொத்துக்களை அடித்துவிட்டு வந்தாச்சு" என்று இஷ்டத்துக்கு பேசியிருக்கிறார். அவரது இந்தப் பேட்டியை பார்த்த பலரும் இதெல்லாம் என்ன மாதிரியான பேச்சு; விவாகரத்து என்பது இருவரது தனிப்பட்ட விஷயம். அதில் தலையிட்டு இப்படி கதை கட்டுவது வேண்டாத வேலை என்று பத்திரிகையாளரும் கண்டனங்களும் வலுக்க தொடங்கியிருக்கின்றன.


Click it and Unblock the Notifications











