லைட்டை ஆஃப் பண்ணிடுங்க சார்.. வெற்றிமாறனிடம் அப்படி சொன்னாரா நடிகை?.. கிளப்பிவிடும் பிரபலம்
சென்னை: வெற்றிமாறன் இந்திய அளவில் முக்கியமான இயக்குநர்களில் ஒருவராக இருக்கிறார். அவர் இப்போது சூர்யாவை வைத்து வாடிவாசல் படத்தின் பணிகளை தொடங்கும் வேலைகளில் இருக்கிறார். ஷூட்டிங் விரைவில் ஆரம்பிக்கவிருக்கிறது. நிச்சயம் இந்தப் படம் கோலிவுட்டின் பெஞ்ச் மார்க்காக இருக்கும் என்று அவரது ரசிகர்கள் ஆரூடம் கூற ஆரம்பித்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் வெற்றிமாறன் குறித்து பயில்வான் ரங்கநாதன் சில விஷயங்களை பேசியிருக்கிறார்.
பாலுமகேந்திரா மற்றும் கதிர் ஆகியோரிடம் உதவி இயக்குநராக இருந்த வெற்றிமாறன் பொல்லாதவன் திரைப்படத்தில் இயக்குநராக அறிமுகமானார். கமர்ஷியல் ஜானரில் உருவாகியிருந்த அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தொடர்ந்து தனுஷை வைத்து அவர் இயக்கிய ஆடுகளம் திரைப்படம் ஐந்து தேசிய விருதுகள்வரை அள்ளியது. அதன் காரணமாக இந்திய அளவில் முக்கியமான இயக்குநர்களில் ஒருவராக மாறினார்.
வரிசையாக ஹிட்டுகள்தான்: தன்னுடைய முதல் இரண்டு படங்களை ஹிட் படங்களாக கொடுத்த வெற்றிமாறன்; அடுத்ததாக இயக்கிய வடசென்னை, விசாரணை, அசுரன் உள்ளிட்ட படங்களில் வேறு மாதிரியான கதை களத்தை கையில் எடுத்தார். விசாரணை படத்தில் காவல் துறை அதிகாரிகளின் அட்டூழியத்தை தோலுரித்த அவர்; அசுரன் படத்தில் பஞ்சமி நிலம், ஆதிக்க சாதியினரின் அத்துமீறல் என சாட்டையடியாக கொடுத்தார். இரண்டு படங்களுமே பெரிதாக கவனம் ஈர்த்தன.

விடுதலை 1, 2: சூழல் இப்படி இருக்க காமெடி ஆக்டராக இருந்த சூரியை கதையின் நாயகனாக வைத்து விடுதலை படத்தின் முதல் பாகத்தை இயக்கினார். அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. தொடர்ந்து இரண்டாவது பாகத்தை அவர் இயக்கினாலும்; இரண்டாவது பாகமோ சுமாரான வரவேற்பையே பெற்றது. குறிப்பாக படம் முழுக்க பிரசார நெடி ஹெவியாக அடித்தது என்று ரசிகர்கள் ஓபனாகவே கூறினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வாடிவாசல்: இதற்கிடையே சி.சு.செல்லப்பா எழுதிய வாடிவாசல் என்ற குறுநாவலை படமாக்க முடிவு செய்தார். அதில் ஹீரோவாக சூர்யாவை ஃபிக்ஸ் செய்தார். இப்போது தொடங்கும் அப்போது தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட அந்தப் படத்தின் ஷூட்டிங் இன்னமும் தொடங்காமல் இருக்கிறது. விடுதலை படத்தின் பணிகள் நீண்டுவிட்டதால்தான் வாடிவாசல் திறப்பதில் கொஞ்சம் தாமதம் ஆகிவிட்டதாக படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தெரிவித்தார்.
விரைவில் ஷூட்டிங்: எப்போதுதான் அந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என்று ஆவலோடு காத்திருந்த ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. அதன்படி சூர்யா - வெற்றிமாறன் - தாணு ஆகியோர் சந்தித்த புகைப்படங்கள் வந்தன. மேலும் படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கிவிடும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் வெற்றிமாறன் குறித்து பிரபல பத்திரிகையாளரான பயில்வான் ரங்கநாதன் ஒரு பேட்டி கொடுத்திருக்கிறார்.
என்ன பேட்டி?: அவர் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், "சின்னத்திரை நடிகை தேவி ப்ரியா சர்ச்சையாக பேச வேண்டும் என்று நினைத்துவிட்டார் போல. வடசென்னை படத்தில் காண்பிக்கப்பட்டதுபோல்தான் அந்தப் பகுதி மக்கள் பேசுவார்கள். படம் வாழ்வியலோடு இருக்க வேண்டும் என்பதற்காக அந்த மாதிரியான கெட்ட வார்த்தைகள் கொண்ட டயலாக்குகளை வெற்றிமாறன் வைத்திருந்தார். படத்தில் தேவி ப்ரியாவைத்தான் டப்பிங் பேச வைத்திருந்தார்கள். இந்த மாதிரியான வசனங்களை பார்த்து ஷாக்கான தேவியோ, 'என்ன இந்த வசனங்கள் எல்லாம் இவ்வளவு அசிங்கமாகவும், மோசமாகவும் இருக்கிறதே. எப்படி பேசுவது' என கேட்டார். அதற்கு வெற்றிமாறனோ, ' படத்தில் உங்கள் முகம் வராது; குரல் மட்டும்தான் வரும். அதற்கான பணத்தையும் கொடுக்கிறோம். பேசுவதில் என்ன பிரச்னை' என்று கேட்டார் வெற்றிமாறன். உடனே தேவி ப்ரியாவோ, சரி சார் டப்பிங் ஸ்டூடியோவில் இருக்கும் விளக்குகளை எல்லாம் அணைத்துவிடுங்கள் என சொல்லி பிறகுதான் டப்பிங் பேசினார்" என்றார்.


Click it and Unblock the Notifications











