இந்தியன் 2வால் லைகாவுக்கு நஷ்டமா?.. அதெல்லாம் இல்லை லாபம்தான்.. புது கணக்கு சொல்லும் பிஸ்மி
சென்னை: ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தியன் 2 படம் கலவையான விமர்சனங்களையே பெற்றிருக்கிறது. விமர்சன ரீதியாக அடி ஒரு பக்கம் விழ, வசூல் ரீதியாகவும் படம் திணறிக்கொண்டிருப்பதாக ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது. படத்திலிருந்து பல நிமிட காட்சிகள் ட்ரிம் செய்யப்பட்டும் சேனாபதி தாத்தா தத்தளித்துக்கொண்டிருப்பதாக பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கும் சூழலில்; பத்திரிகையாளர் பிஸ்மி இந்தியன் 2 படம் லாபம்தான் கொடுத்திருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
தமிழ் சினிமாவில் ஷங்கர் இயக்கிய படங்களுக்கென்று தனி மவுசு இருக்கிறது. அப்படி அவர் இயக்கிய படங்களில் இந்தியன் படத்துக்கு இப்போதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். அந்தப் படத்தின் இரண்டாவது பாகத்தை இப்போது எடுத்திருக்கிறார் அவர். கமல் ஹாசன், எஸ்.ஜே.சூர்யா, சித்தார்த், ப்ரியா பவானி சங்கர், ஜெகன், தம்பி ராமைய்யா, சமுத்திக்கனி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். படமானது கடந்த 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. லைகா நிறுவனம் தயாரித்திருக்கிறது.

பிரமாண்ட பட்ஜெட்: கோலிவுட்டில் இப்போது அதிக செலவிலான படங்களை தயாரிப்பதில் லைகா நிறுவனம்தான் முன்னணியில் இருக்கிறது. இந்தியன் 2வுக்கு மட்டும் அந்த நிறுவனம் 500 கோடி ரூபாய்வரை செலவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இயக்குநர் ஷங்கர் 50 கோடி ரூபாய்வரை இந்தப் படத்துக்கு சம்பளமாக பெற்றிருக்கிறார் என்றும் ஒரு தகவல் ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
பலத்த அடி: இப்படி பிரமாண்ட பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட இந்தியன் 2வுக்கு கலவையான விமர்சனங்களே கிடைத்துவருகின்றன. ஷங்கரின் மேக்கிங், ஸ்க்ரீன் ப்ளே, ஜெயமோகன் மற்றும் கபிலன் வைரமுத்துவின் வசனங்கள், அனிருத்தின் இசை என எதுவுமே படத்துக்கு செட் ஆகவில்லை என்று படம் பார்த்த ரசிகர்கள் ஓபனாகவே கூறினார்கள். விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் படம் தத்தளிப்பதாகவே சொல்லப்படுகிறது. படம் வெளியாகி ஒருவாரம் முடிவடையும் சூழலிலும் இதுவரை 100 கோடி ரூபாயைக்கூட வசூலிக்கவில்லை என்று ஒருதரப்பினர் சொல்கிறார்கள்.
பிஸ்மி பேட்டி: இந்நிலையில் பத்திரிகையாளர் பிஸ்மி இந்தியன் 2 படத்தின் வியாபாரம் குறித்து பேசியிருக்கிறார். அவர் சமீபத்தில் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 படங்களின் மொத்த பட்ஜெட் 500 கோடி ரூபாய். இதில் ஒரு பார்ட்டுக்கு மட்டும் 250 கோடி ரூபாய் என்று வைத்துக்கொள்வோம். அந்த 250 கோடி ரூபாயில் 90 சதவீடஹ்ம் தயாரிப்பு நிறுவனம் ஏற்கனவே எடுத்துவிட்டது. ஓடிடி உரிமம் 125 கோடி ரூபாய்க்கும், சாட்டிலைட் உரிமம் 68 கோடி ரூபாய்க்கும் விற்றிருக்கிறது.
200 கோடி ரூபாய்: இந்த இரண்டு உரிமங்கள் மூலம் மட்டும் 200 கோடி ரூபாய்வரை தயாரிப்பு நிறுவனம் எடுத்துவிட்டது. இதற்கு பிறகு தயாரிப்பு நிறுவனத்துக்கு இந்தியன் 2 படத்தால் வர வேண்டியது 50 கோடி ரூபாய் மட்டும்தான். இதில் கர்நாடக உரிமை மட்டும் 15 கோடி ரூபாய்க்கு விற்பனை ஆகியிருக்கிறது. அதையும் கழித்துவிட்டு பார்த்தால் லைகா நிறுவனத்துக்கு 35 கோடி ரூபாய் மட்டும்தான் வரவேண்டும்.
லாபமான படம்தான்: இதிலும் தமிழ்நாடு , கேரளா, ஆந்திரா உரிமைகள், ஹிந்தி டப்பிங் உரிமை, வெளிநாட்டு உரிமை, ஆடியோ ரைட்ஸ் என பல இருக்கின்றன. இதையெல்லாம் வைத்து கணக்கு போட்டு பார்த்தால் இந்தியன் 2 படம் லைகா நிறுவனத்துக்கு ரொம்பவே லாபம் கொடுத்த படம்தானே ஒழிய நஷ்டத்தை கொடுக்கவில்லை. இதில் நமக்கு எந்த சந்தேகமும் தேவையில்லை" என்றார்.


Click it and Unblock the Notifications











