Ameer - அமீருக்கு எதிராக பேச சொல்லி பேரம் பேசினார்கள்.. பிஸ்மி கொடுத்த ஷாக் நியூஸ்
சென்னை: Ameer (அமீர்) அமீருக்கு எதிராக பேச வேண்டும் என தன்னிடம் பேரம் பேசியதாக பத்திரிகையாளர் பிஸ்மி தெரிவித்திருக்கிறார்.
அமீர் இயக்கிய பருத்திவீரன் திரைப்படம் மெகா ஹிட்டானது. கார்த்தி, ப்ரியாமணி உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் இன்றுவரை கல்ட் க்ளாசிக்காக கொண்டாடப்படுகிறது. ஆனால் அந்தப் படத்துக்கு பணம் முதலீடு செய்யப்பட்ட விஷயத்தில் அமீருக்கும் ஞானவேல் ராஜாவுக்கும் பிரச்னையை உண்டு பண்ணியது.

ஞானவேல் ராஜா சூர்யா குடும்பத்துக்கு நெருக்கம் என்பதால் அது அமீர் Vs சூர்யா தரப்பு என்ற நிலைக்கு நகர்த்தி நீதிமன்றம்வரை சென்றிருக்கிறது.
மீண்டும் ஆரம்பித்த பிரச்னை: சூழல் இப்படி இருக்க கார்த்தி 25 நிகழ்ச்சிக்கு அமீர் தனக்கு முறையான அழைப்பு இல்லை என கூறினார். அதனையடுத்து ஞானவேல் ராஜா அளித்த பேட்டியில் அமீரை திருடன் என்றும் பொய் கணக்கு எழுதுபவர் என்று பலவாறு வசைபாடினார். இதற்கு அமீரும் கடுமையான எதிர்வினை ஆற்றி பதிலடி கொடுத்திருந்தார்.
அமீர் படை: அமீரின் பதிலடியை அடுத்து சசிகுமார், சமுத்திரகனி, பொன்வண்ணன்,சினேகன், கரு.பழனியப்பன், பாரதிராஜா, கஞ்சா கருப்பு, சேரன் என பலரும் ஞானவேல் ராஜாவுக்கு எதிராக கருத்து தெரிவித்தனர். கரு.பழனியப்பனோ ஒருபடி மேலே சென்று தன்னுடைய கண்டன அறிக்கையில் சிவக்குமாரையும் உள்ளே இழுத்தார். இதனால் விவகாரம் சூடுபிடித்தது.
வருத்தம் தெரிவித்த ஞானவேல் ராஜா: சிவக்குமார் பெயர் உள்ளே வந்தது பதறியடித்த ஞானவேல் வருத்தம் தெரிவித்தார். சிவக்குமார்தான் ஞானவேல் ராஜாவை அழைத்து கண்டித்து மன்னிப்பு கேட்கும்படி உத்தரவிட்டதாகவும் ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறத். இருந்தாலும் சூர்யாவும், கார்த்தியும் இதுவரை வாய் திறக்காதது பலரிடம் கண்டனத்தை எழுப்பியிருக்கிறது.
பிஸ்மி பேட்டி: இந்நிலையில் பத்திரிகையாளர் பிஸ்மி இந்த விவகாரம் குறித்து புதிய விஷயத்தை சொல்லியிருக்கிறார். அவர் அளித்த பேட்டி ஒன்றில், “ஞானவேல் ராஜாவை சிவக்குமார் அழைத்து கண்டித்து வருத்தம் தெரிவிக்கும்படி சொன்னார். இருந்தாலும் அமீரை எப்படியாவது இந்த விஷயத்தில் காலி செய்துவிட ஞானவேல் தரப்பு மும்முரமாக இருக்கிறது.
என்னிடம்கூட ஒரு பி.ஆர்.ஓ வந்து உங்களை ஞானவேல் ராஜா, எஸ்.ஆர்.பிரபு உள்ளிட்டோர் சந்தித்து நடந்தவற்றை சொல்கிறோம் என்கிறார்கள். அதை வைத்து நீங்கள் அமீருக்கு எதிராக வீடியோ போடலாம் என்று பேரம் பேசினார்கள். ஆனால் இந்த விஷயத்தில் அமீர் பக்கம்தான் நியாயம் இருப்பதால் அவர் பக்கம்தான் நான் நிற்பேன் என்று சொல்லி அவர்களை சந்திக்க மறுத்துவிட்டேன்” என்றார்.


Click it and Unblock the Notifications











