Rajinikanth - இஸ்லாமியர் கதாபாத்திரத்தில் குவியும் ரஜினியின் கவனம்.. காரணம் பாஜகவா?

சென்னை: Rajinikanth (ரஜினிகாந்த்) அடுத்தடுத்த படங்களில் இஸ்லாமியர் கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடிப்பதற்கான காரணம் குறித்து பத்திரிகையாளர் அந்தணன் பேசியிருக்கிறார்.

ரஜினிகாந்த் கடைசியாக சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்தார். தர்பார் கொடுத்த அடிக்கு அண்ணாத்த மருந்தாக இருக்கும் என எதிர்பார்த்த அவருக்கு அண்ணாத்தயும் பலத்த அடியையே கொடுத்தது. இதனால் உடனடியாக ஒரு சூப்பர் டூப்பர் ஹிட் படத்தை கொடுத்துவிட வேண்டும் என்பதில் தீவிர முனைப்போடு இருக்கிறார் ரஜினிகாந்த்.

Journalist Andhanan has spoken about Rajinikanths reason for playing the role of a Muslim

ஜெயிலர் நெல்சன்: இதனையடுத்து கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்துவருகிறார் ரஜினிகாந்த். இதில் அவருடன் மோகன் லால், சிவராஜ்குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப் என நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. இப்படம் பான் இந்தியா படமாக உருவாகிவருகிறது. பீஸ்ட் தோல்வியடைந்தாலும் நெல்சன் சிறந்த இயக்குநர் என்பதால் ஜெயிலர் கண்டிப்பாக ஹிட்டாகும் என்ற நம்பிக்கை ரஜினிக்கு நிறையவே இருக்கிறது. இதில் முத்துவேல் பாண்டியன் என்ற ஜெயிலர் கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

லால் சலாம்: ஜெயிலர் படம் நடித்துக்கொண்டிருக்கும்போதே தனது மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார் ரஜினி. இதில் ஏறத்தாழ ஒரு மணி நேரம் அவர் நடிக்கிறார் என கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். லால் சலாமில் இஸ்லாமியர் கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார் என்ற தகவல் ஒன்றும் பரவியிருக்கிறது.

ஜெய்பீம் இயக்குநருடன்: ஜெயிலர் மற்றும் லால் சலாமை முடித்துவிட்டு ரஜினிகாந்த் ஜெய் பீம் படத்தை இயக்கிய த.செ.ஞானவேல் இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். லைகா நிறுவன படத்தை தயாரிக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில்தான் வெளியானது. ஜெய் பீம் உண்மை கதையை வைத்து எடுக்கப்பட்டதால் இப்படமும் உண்மை கதையை தழுவி எடுக்கப்படவே வாய்ப்புகள் அதிகம் என கருதப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்தப் படத்தில் இஸ்லாமிய காவல் துறை அதிகாரியாக ரஜினி நடிக்கிறார் எனவும் பேசப்படுகிறது.

Journalist Andhanan has spoken about Rajinikanths reason for playing the role of a Muslim

காரணம் என்ன?: லால் சலாம் மற்றும் த.செ.ஞானவேல் படங்களில் இஸ்லாமிய கதாபாத்திரத்தில் ரஜினி நடிப்பதற்கான காரணம் என்ன என்பது குறித்து பத்திரிகையாளர் அந்தணன் பேசியிருக்கிறார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், "ரஜினி இரண்டு படங்களிலும் இஸ்லாமிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. அவர் மீது பாஜகக்காரர் என்ற முத்திரை குத்தப்பட்டிருப்பதால் அதை நீக்குவதற்காகத்தான் அவர் இஸ்லாமிய கேரக்டரில் நடிப்பதற்கு கவனம் செலுத்துகிறாரோ என தோன்றுகிறது" என்று தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், "ரஜினிகாந்த்துடன் லோகேஷ் கனகராஜ் இணைவது பற்றிய பேச்சுவார்த்தை போய்க்கொண்டிருக்கிறது. தனது கடைசிப் படமாக லோகேஷ் கனகராஜ் இயக்கும் படமாகத்தான் இருக்க வேண்டும் என ரஜினி ஆவலோடு இருக்கிறார்" எனவும் அந்தணன் கூறினர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X