Vettaiyan Box Office: வேட்டையன் வசூலில் சொதப்ப சூப்பர் ஸ்டார்தான் ஒரே காரணம் - பிரபலம் நெத்தியடி

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 10ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் வேட்டையன். ஜெய் பீம் படத்தினை இயக்கிய த.செ. ஞானவேல் இந்தப் படத்தினை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் என்கவுன்ட்டர் முறைக்கு எதிராகவும் மற்றும் நீட் தேர்வுக்கு எதிராகவும், நீட் தேர்விற்கு கோச்சிங் கொடுக்கின்றேன் என கோச்சிங் சென்டர்கள் மூலம் நடைபெறும் நிறுவனக் கொலைகள் குறித்தும் பேசப்பட்டுள்ளது. காலா படத்திற்குப் பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நேரடியாக அரசியல் கருத்தினை முன்வைத்து வந்துள்ள படம் வேட்டையன். படம் பொதுமக்களிடம் பாராட்டுகளைப் பெற்றிருந்தாலும் வசூலில் திணறி வருகின்றது. இது குறித்து பத்திரிகையாளர் அந்தணன் பேசியது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

இது தொடர்பாக அந்தணன் அளித்த பேட்டியில், வேட்டையன் படம் உண்மையிலேயே நல்ல படம். இந்தப் படத்தின் முதல் பாதி சிறப்பாக உள்ளது. இரண்டாம் பாதியில் படம் கொஞ்சம் தொய்வு இருந்தாலும், படம் முழுவதுமாக ஒரு நல்ல படம். சூப்பர் ஸ்டார் போன்ற உச்ச நடிகர் இது போன்ற கதைகளில் நடிப்பது பாராட்டுக்குரியது.

andhanan rajinikanth vettaiyan box office

படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதுமட்டும் இல்லாமல், படம் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற வேண்டிய படம். ஆனால் படத்தினை விஜய் ரசிகர்கள் காலி செய்ய நினைத்ததற்கு முக்கிய காரணமே சூப்பர் ஸ்டார்தான். இந்தப் பிரச்னையை இருவருமே அதாவது விஜய் மற்றும் ரஜினி என இருவருமே முடிவுக்கு கொண்டு வரலாம். ஆனால் இருவரும் அதை செய்யாமல் விட்டதன் விளைவு, கோட் படத்தின் வசூலும், வேட்டையன் படத்தின் வசூலும் பாதிக்கப்பட்டுள்ளது.

andhanan rajinikanth vettaiyan box office

காரணம்: ஆனால் இவை அனைத்திகும் காரணம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஏன் அவ்வாறு பேசவேண்டும். அங்கிருந்து தொடங்கியதுதான், இப்போதுவரை நீடிக்கின்றது. விஜய் ரசிகர்கள் இதனால்தான் வேட்டையன் படத்தின் வசூலை பாதிக்கும் வகையில் நடந்து கொண்டனர். விஜய் இப்போது அரசியல் கட்சி தொடங்கிவிட்டதால் இது அவருக்கு எதிர்காலத்தில் வசூல் பிரச்னையைக் கொண்டுவராது. ஆனால் சூப்பர் ஸ்டாருக்கு இந்தப் பிரச்னை தொடரும்.

andhanan rajinikanth vettaiyan box office

ப்ளான்: விஜய்க்கு எதிராக சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் தேர்தலில் வேண்டுமானால் வேலை செய்யலாம், ஆனால் இந்தப் பிரச்னைக்கு முடிவுகட்ட விஜய் தயாராகவே உள்ளார். அதற்கான முயற்சிகளிலும் அவர் ஈடுபட்டு வருகின்றார். விரைவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டிற்கு விஜய் குடும்பத்துடன் சென்று விருந்து சாப்பிட்டுவிட்டு வர திட்டமிட்டு வருகின்றார்" என பேசியுள்ளார்.

andhanan rajinikanth vettaiyan box office

வசூல்: படம் முதல் நான்கு நாட்களில் ரூபாய் 240 கோடிகளை வசூல் செய்ததாக லைகா நிறுவனமே அதிகாரப்புர்வமாக அறிவித்தது. வேட்டையன் படம் 10 நாளில் ரூபாய் 310 கோடிகள் வரை வசூல் செய்திருக்கும் என பாக்ஸ் ஆஃபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் டிவிட்டரில் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் #Vettaiyan300CroreBOHunt என ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இன்று வார இறுதி நாட்கள் என்பதால் படத்தின் வசூல் இன்று அதிகமாக இருக்கும் என படக்குழு நம்புகின்றது.

andhanan rajinikanth vettaiyan box office

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X