ரஜினி வீட்டில் விஜய்க்கு விருந்து.. தளபதி எல்லாத்துக்கும் தயாராகிட்டாரு போல - பிரபலம் ஓபன்
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் தளபதி விஜய்க்கு இடையில் நீண்ட காலமாகவே பனிப்போர் நடைபெற்று வருகின்றது. குறிப்பாக தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக விஜய் உள்ளார். மேலும் இவரது படங்களுக்கான ஓப்பனிங் என்பது மாஸாகவே உள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் மத்தியில் விஜய் தான் சூப்பர் ஸ்டார் என்ற வாதம் முன் வைக்கப்படுகின்றது. ரசிகர்களின் வாதத்திற்கு ஏற்றதைப்போல் விஜய்யின் நடவடிக்கைகளும் மேடைப்பேச்சுகளும் இருந்துள்ளது. இது ரசிகர்களுக்கு இடையிலான மோதலை அதிகரிக்கச் செய்தது. இப்படியான நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டிற்கு நடிகர் விஜய் விரைவில் செல்லவிருப்பதாக பத்திரிகையாளர் அந்தணன் கூறியுள்ளார்.
ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு குட்டிக் கதை சொன்னார். அந்தக் கதையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காக்கா எனக் குறிப்பிட்டது நடிகர் விஜய்யைத்தான் என பலரும் கூறினர். இது விஜய் ரசிகர்களை கொதிப்படையச் செய்தது. இதனால் ஏற்கனவே விஜய் மற்றும் ரஜினிகாந்த் ரசிகர்கள் இடையேயான மோதல் போக்கு இணையத்தில் அதிகமானது.

குறிப்பாக இருவரின் ரசிகர்களும் மிகவும் காட்டமாக விமர்சித்துக் கொண்டனர். சிலர் கடுஞ்சொற்கள் எல்லாம் பயன்படுத்தி நடிகர்களைத் திட்டினர். இணையத்தில் இவை மிகவும் ட்ரெண்ட் ஆனது. இப்படியான நிலையில் ஜெயிலர் படத்தின் ரிலீஸின்போது விஜய் ரசிகர்கள் இணையத்தில் ஜெயிலர் படத்தினை தோல்விப் படம் என ட்ரெண்ட் செய்தனர்.
மோதல் போக்கு: இதற்கு பதிலடி அளிக்கும் வகையில், சூப்பர் ஸ்டார் ரசிகர்கள், விஜய்யின் லியோ படத்தின் ரிலீஸின்போது லியோ படத்தினை தோல்விப் படம் என்று இணையத்தில் ட்ரெண்ட் செய்தனர். இது படத்தின் வசூலை பாதித்ததாக கூறப்பட்டது. இப்போது வரை தமிழ் சினிமாவில் அதிக வசூலைக் குவித்த படங்களின் வரிசையில், முதல் இரண்டு இடங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் படங்களான 2.0 மற்றும் ஜெயிலர் உள்ளது. அடுத்த இடத்தில் விஜய்யின் லியோ உள்ளது. லியோ முதல் இடத்திற்குச் செல்லவேண்டிய படம் என்றும் ஆனால் ரஜினி ரசிகர்கள் திட்டமிட்டே படத்தின் வசூலை பாதிக்கும் வகையில் நடந்து கொண்டதாகவும் பேச்சு எழுந்தது.

விருந்து: இந்த மோதல் போக்கு விஜய்யின் கோட், சூப்பர் ஸ்டாரின் வேட்டையன் வரை தொடர்ந்து நீடித்து வருகின்றது. விஜய் அரசியல் கட்சி தொடங்கியுள்ளார். ஆனால் விஜய் ரசிகர்கள் தொடர்ந்து ரஜினி ரசிகர்களிடம் மோதல் போக்கினையே கடைபிடித்து வருகின்றனர். இப்படியான நிலையில் பத்திரிகையாளர் அந்தணன் அளித்த ஒரு பேட்டியில், பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதில், விஜய் அரசியலுக்கு வந்துவிட்டார். வரும் காலங்களில் அவர் ரஜினி ரசிகர்களிடம் ஓட்டுக் கேட்டு போய்த்தான் ஆகவேண்டும். இதனால் ரஜினியுடனான மோதல் போக்கினை முடிவுக்கு கொண்டுவர விஜய் தயாராக இருப்பதாகவும், விரைவில் ரஜினி வீட்டிற்கு குடும்பமாகப் போய், விருந்து சாப்பிட்டுவிட்டு வர திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இணக்கம்: இவர்களின் சந்திப்பினால், ரசிகர்கள் மத்தியிலான மோதல் குறையும் என விஜய் யோசிக்கின்றார். ஆனால் அப்படி நடப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. காரணம் ஏற்கனவே ஒரு தேர்தலில் சூப்பர் ஸ்டார் ரசிகர்களும் பாமகவினரும் மோதிக்கொண்டனர். அவர்கள் இருவருக்கும் இடையில், இப்போதுவரை இணக்கமான சூழல் தொண்டர்கள் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் ஏற்படவில்லை. இதே நிலைதான் இங்கேயும் நீடிக்கும் என தோன்றுகின்றது" என பேசியுள்ளார்.



Click it and Unblock the Notifications











