Kamal Haasan: கமல்ஹாசனுக்கு தொத்திக் கொண்ட கெட்ட பழக்கம்.. காரணம் சிவகார்த்திகேயனா?.. அந்தணன் அட்டாக்

சென்னை: தமிழ் சினிமாவின் முகமாக இருக்கும் கமல்ஹாசன், நடிகராக, திரைக்கதை ஆசிரியராக, இயக்குநராக, பாடகராக, பாடல் ஆசிரியராக, நடன இயக்குநராக என பல பரிமாணங்களில் தமிழ் சினிமாவிற்கு தொடர்ந்து பங்காற்றி வருகிறார். இவரது தயாரிப்பில் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான அமரன் படம் மாபெரும் வெற்றி பெற்றது. படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு தொடர்பாக, கமல்ஹாசனுக்கு கெட்ட பழக்கம் வந்துவிட்டது என பத்திரிகையாளர் அந்தணன் கூறியுள்ளார்.

Andhanan Kamal Haasan Amaran Sivakarthikeyan

சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி கடந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் ஆன படம் அமரன். இந்த படம் வீர மரணம் அடைந்த இந்திய ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கினார். ஜி.வி. பிரகாஷ் இசை அமைத்த இந்தப் படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் சோனி பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்தது.

Andhanan Kamal Haasan Amaran Sivakarthikeyan

படம் வெளியாகி பெரும் வெற்றிப் படமாக மாறியது. வீரமரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு படம் உருவாக்கப்பட்டதால், இந்திய ராணுவத் தளவாடங்களுக்கு நேரடியாகச் சென்று படப்பிடிப்பு நடத்தப்பட்டது. படம் வெளியாகி வசூல் ரீதியாக பெரும் வெற்றிப் படமாக மாறியது. அதே நேரத்தில் விமர்சன ரீதியாக ஒரு தரப்பில் அதிகப்படியான பாராட்டுக்களும் ஒரு தரப்பில் கடும் கண்டனங்களையும் எதிர்கொண்டது.

Andhanan Kamal Haasan Amaran Sivakarthikeyan

கண்டனம்: படத்தில் காஷ்மீரி இன விடுதலைக்கு போராடும் போராட்டக்காரர்களை படம் கலவரக்காரர்களாக சித்தரிக்கிறது என கண்டனங்கள் எழுந்தன. படத்தில் சாய் பல்லவியின் நடிப்பினை பலரும் பாராட்டினர். இந்தப் படத்திற்காக அவருக்கு தேசிய விருது கிடைத்தாலும் கிடைக்கும் என கூறப்படுகிறது. அமரன் படம் பாக்ஸ் ஆபிஸில் உலகம் முழுவதும் ரூபாய் 350 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது.

Andhanan Kamal Haasan Amaran Sivakarthikeyan

கெட்ட பழக்கம்: இந்நிலையில் படத்தின் வெற்றி விழா நேற்று அதாவது பிப்ரவரி 14ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. இதில் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இது தொடர்பாக வலைப்பேச்சு யூடியூப் தளத்தில் அந்தணன் பேசும்போது, கமல்ஹாசன் எப்போதும் பத்திரிகையாளர்களுடன் நல்ல உறவைப் பேணுவதைத்தான் விரும்புவார். அப்படித்தான் கடந்த காலங்களில் எல்லாம் இருந்துள்ளார். ஆனால் இந்த நிகழ்ச்சியில் ஏன் இப்படி ஒரு முடிவை எடுத்தார் எனத் தெரியவில்லை.

Andhanan Kamal Haasan Amaran Sivakarthikeyan

சிவகார்த்திகேயன்: யார் சொல்லிக் கொடுத்து இந்த கெட்ட பழக்கம் அவரைத் தொத்திக் கொண்டது எனத் தெரியவில்லை. இந்த நிகழ்ச்சி எதாவது ஓடிடி தளத்தில் விற்றிருந்தால், பத்திரிகையாளர்களை கேமரா இல்லாமல் வரச் சொல்லி இருக்கலாம். அமரன் படத்தின் வெற்றியில் பத்திரிகையாளர்களின் பங்கு மிக முக்கியமானதுதானே" என பேசினார். அவரது பேச்சைக் கேட்ட ரசிகர்கள் கமல்ஹாசன் சிவகார்த்திகேயன் பேச்சைக் கேட்டுக் கொண்டு இவ்வாறு செய்து விட்டாரா என கேள்வி எழுப்புகிறார்கள். அமரன் படத்தின் ப்ரோமோஷன்களிலும் கூட சிவகார்த்திகேயன் பத்திரிகையாளர்களைச் சந்திக்காமல் தவிர்த்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Andhanan Kamal Haasan Amaran Sivakarthikeyan

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X