விஜய் மேனேஜர் தாவூத் இப்ராஹிம் தம்பியா?.. என்னங்க இப்படி சொல்றீங்க?.. போட்டு தாக்கிய பிரபலம்

சென்னை: விஜய்யிடம் மேனேஜராக இருப்பவர் ஜெகதீஷ் பழனிசாமி. இவரது ரூட் கம்பெனிதான் இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய் வெற்றி பெற அத்தனை ரூட்டையும் போட்டுக்கொடுத்ததாகவும் ஒரு பேச்சு உண்டு. பலரும் அவருக்கு எதிரான கருத்துக்களையே சொல்லிவருகிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் பிரபல பத்திரிகையாளர் அந்தணன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ஜெகதீஷ் குறித்து பேசியிருக்கும் விஷயம் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.

நடிகராக இருந்த விஜய் இப்போது தமிழ்நாட்டின் முதலமைச்சர். திரைத்துறையில் எப்படி பல சாதனைகளை செய்தாரோ அதே அளவுக்கு அரசியலிலும் செய்வார் என்பது அவரது ரசிகர்களின் நம்பிக்கை. கட்சி ஆரம்பித்து சில வருடங்களிலேயே அதுவும் சந்தித்த முதல் தேர்தலிலேயே இவ்வளவு பெரிய வெற்றியை விஜய் பெற்றிருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில்தான் ஆழ்த்தியிருக்கிறது இந்த வெற்றி உண்மையால் வந்த வெற்றி இல்லை; பல போலித்தனங்களை செய்து பெறப்பட்ட வெற்றி என்பது எதிர்க்கட்சியினரின் வாதம்.

Journalist Anthanan Defends Vijay s Manager Jagadish Palanisamy Amid Root Controversy
Photo Credit:

காரணம் ரூட் கம்பெனியா?: இதற்கு முழு முக்கிய காரணமும் விஜய்யின் மேனேஜர் ஜெகதீஷ் பழனிசாமிதான். அவர்தான் பெரிய டீம் ஒன்றையே உருவாக்கி ரூட் என்ற கம்பெனியையும் தொடங்கி; பல வாட்ஸ் அப் குழுக்கள், ரீல்ஸ்கள் என டிஜிட்டல் மீடியாவில் ஒவ்வொரு அடியையும் இடி மாதிரி இறக்கினார். அவரது பிளான்படி வெளியான ரீல்ஸ்கள் மூலம் விஜய்யை தேவதூதன் போல் சித்தரித்து வெற்றி பெற செய்துவிட்டார் என்றும் தொடர்ந்து விமர்சனங்களும், குற்றச்சாட்டுக்களும் எழுகின்றன.

Also Read
சிங்கப்பூரையே மிஞ்சும் தமிழ்நாடு... முதல்வர் விஜயை புகழ்ந்த சஞ்சீவ்!
சிங்கப்பூரையே மிஞ்சும் தமிழ்நாடு... முதல்வர் விஜயை புகழ்ந்த சஞ்சீவ்!

மற்றவர்கள் மத்தியில்: எதிர்க்கட்சியினர் மட்டுமின்றி பொதுவான சிலரும் இதே மாதிரியான ஒரு கருத்தைத்தான் சொல்கிறார்கள். அதுவும் திரைத்துறையில் இருக்கும் சிலரோ ஜெகதீஷ் பற்றி சொல்லும் விஷயங்கள் எல்லாம் அதிர்ச்சியையே கொடுக்கின்றன. அதிலும் நடிகைகள் விஷயத்தில் ஜெகதீஷின் ரூட் மாஃபியா உச்சக்கட்ட அக்கிரமங்களை செய்யும் என்றும் கூறுகிறார்கள். சமீபத்தில்கூட நடிகை ஓவியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 'ரூட் மாஃபியாவை வெளிச்சத்துக்கு கொண்டு வர வேண்டும்' என தெரிவித்திருந்தார்.

பிரியங்கா மோகன் மீது டார்கெட்?: மேலும் நடிகை பிரியங்கா மோகன் சில வருடங்களுக்கு முன்பு சோஷியல் மீடியாவில் சகட்டுமேனிக்கு ட்ரோல் செய்யப்பட்டார். அதற்கு பின்னணியில் இருந்ததே ஜெகதீஷும், ரூட் கம்பெனியும்தான் என்பது ஒருதரப்பினரின் வாதம். இதுகுறித்து பிரியங்கா ஜெகதீஷ் பெயரையோ, ரூட் பெயரையோ வெளியே சொல்லவில்லை என்றாலும்; அவரும் மறைமுகமாக சில பேட்டிகளில் பேசியிருப்பதாக ரசிகர்கள் மேற்கோள் காட்டியதும் நினைவுகூரத்தக்கது. இப்படி ஜெகதீஷ் பழனிசாமி குறித்து ஏகப்பட்ட விஷயங்கள் மர்மமாகவே இருக்கின்றன.

அந்தணன் பேட்டி: இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் அந்தணன் சமீபத்தில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் ஜெகதீஷ் பற்றி பேசிய அவர், "விஜய்யின் பக்கத்தில் ரூட் அமைப்பின் தலைவர் ஜெகதீஷ் இருக்கிறார். அவருக்கும், விஜய்க்கும் இடையே இருக்கும் நட்பை உடைத்துவிட சிலர் முயற்சிக்கிறார்கள். இவர்கள் சொல்வதை கேட்டால் நல்ல பிரதமரை உருவாக்குவதற்கே ரூட் தேவை என தோன்றுகிறது. விட்டால் இவரை டெல்லிக்கு அழைத்து சென்றுவிடுவார்கள் போல. அவர் ஒரு சாதாரணமான மனிதர். அவருடைய வேலையில் அவர் சரியாக இருந்தார் விஜய்க்கு பிடித்துவிட்டது. ஏதோ அவர் தாவூத் இப்ராஹிமின் தம்பி மாதிரி பில்ட் அப் செய்கிறார்கள்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X