Vijay - நீங்கள்தான் அடுத்த எம்ஜிஆரா விஜய்?.. த்ரிஷா விஷயத்தில் இதை செய்யுங்கள்.. பத்திரிகையாளர் அட்வைஸ்

சென்னை: Vijay (விஜய்) த்ரிஷா பற்றி மன்சூர் அலிகான் ஆபாசமாக பேசிய விவகாரத்தில் விஜய் ஒரு விஷயத்தை செய்ய வேண்டும் என பத்திரிகையாளர் அந்தணன் தெரிவித்திருக்கிறார்

விஜய் தற்போது கோலிவுட்டின் டாப் ஹீரோ. அவர் நடிப்பில் கடைசியாக வெளியான மூன்று படங்கள் (பீஸ்ட், வாரிசு, லியோ) பல கோடி ரூபாயை வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் விஜய்யின் ரசிகர்களும் அவர் அரசியலுக்கு வர வேண்டும் என பல காலமாக சொல்லிவருகின்றனர். அவரும் தன்னுடைய செயல்பாடுகள் மூலம் தான் அரசியலுக்கு வருவது உறுதி என்பதை நிரூபித்திருக்கிறார்.

Journalist Anthanan Gave Advice To Vijay In Trisha Mansoor Alikhan Controversy

மன்சூர் அலிகானின் ஆபாச பேச்சு: சூழல் இப்படி இருக்க லியோ படத்தில் நடித்த மன்சூர் அலிகான் த்ரிஷா குறித்து சில வாரங்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் ஆபாசமாக பேசியிருந்தார். அந்தப் பேச்சு த்ரிஷாவின் கவனத்துக்கு செல்ல அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் மன்சூர் அலிகானுக்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்து காட்டமாக பேசியிருந்தார்.

விஜய்யின் மௌனம்: த்ரிஷா மட்டுமின்றி மன்சூர் அலிகானின் பேச்சுக்கு லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்புராஜ், குஷ்பூ உள்ளிட்டோரும் தென்னிந்திய நடிகர் சங்கமும் கண்டனத்தை பதிவு செய்திருக்கிறது. ஆனால் லியோ படத்தின் ஹீரோவான விஜய்யோ இதுவரை அந்த சம்பவத்துக்கு எந்த கண்டனமும் தெரிவிக்காமல் மௌனம் காத்துவருகிறார். இதுவும் திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிரது.

Journalist Anthanan Gave Advice To Vijay In Trisha Mansoor Alikhan Controversy

விஜய்க்கும் கண்டனம்: விஜய்யின் இந்த மௌனத்தை பெரும்பாலானோர் விரும்பவில்லை என்பதே எதார்த்தமாக இருக்கிறது. தன்னுடன் நடித்த நடிகைக்கு ஒரு அநீதி நிகழ்ந்தாலே அமைதியாக இருக்கும் விஜய் அரசியலுக்கு வந்து என்ன பிரயோஜனம் என்ற குரல்கள் எழ ஆரமித்திருக்கின்றனர். இந்ந்லையில் இந்த விவகாரத்தில் விஜய்யின் நிலைப்பாடு குறித்து பத்திரிகையாளர் அந்தணன் காட்டமாக பேசியிருக்கிறார்.

அந்தணன் பேச்சு: அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில், "த்ரிஷா பற்றி மன்சூர் அலிகான் ஆபாசமாக பேசியதற்கு விஜய் ஏன் மௌனமாக இருக்கிறார் என்று தெரியவில்லை. தான் அடுத்த எம்ஜிஆர் என்று விஜய் நினைத்துக்கொண்டிருக்கிறார். ஆனால் தன்னுடன் நடித்த நடிகைகளுக்கு ஒரு பிரச்னை என்றால் எம்ஜிஆர் இப்படி அமைதியாக இருக்கமாட்டார். இருந்ததுமில்லை.

ஜெயலலிதா விவகாரம்: அதிமுகவின் கொள்கை பரப்பு செயலாளராக ஜெயலலிதா இருந்தபோது சேலத்துக்கு சென்றார். அங்கிருந்து சென்னை திரும்புவதற்காக ரயிலில் ஏறினார். அப்போது அவர் தடுமாறி கீழே விழுந்தபோது சேலம் மாவட்ட செயலாளர் தவறான நோக்கத்தில் ஜெயலலிதாவை தொட்டார். அதனை ஜெவும் உணர்ந்துகொண்டு செனனிக்கு வந்து எம்ஜிஆரிடம் முறையிட்டார்.

இதையாவது செய்யுங்கள் விஜய்: உடனடியாக அந்த மாவட்ட செயலாளரை ராமாவரம் தோட்டத்துக்கு அழைத்து எம்ஜிஆர் என்ன செய்தார் என்று பெரும்பாலானோருக்கு தெரியும். விஜய் அப்படியெல்லாம் செய்ய வேண்டாம். தான் ஹீரோவாக நடித்த படத்தில் தன்னுடன் நடித்த ஹீரோயினுக்கு இப்படி நடக்கும்போது எம்ஜிஆர் போல் மன்சூர் அலிகானை நேரில் அழைத்தெல்லாம் கண்டிக்க வேண்டாம்.

மாறாக ஒரு கண்டன அறிக்கையை வெளியிடலாம். அப்படி அவர் வெளியிடும்பட்சத்தில் மன்சூர் மட்டுமின்றி அவர் போன்று எண்ணத்தில் இருக்கும் பலரும்; இப்படி பேசினால் விஜய் படத்தில் நடிக்க முடியாதோ என்று பயப்படுவார்கள். முக்கியமாக அப்படி பேசினால் விஜய் என்ற பெரிய ஹீரோ குரல் கொடுப்பார் என்ற எண்ணமும் வரும். அதனால் இதுபோன்ற நிகழ்வுகள் நடப்பது குறையும்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X