ரஜினி படத்திலிருந்து தூக்கப்பட்டாரா ரத்னகுமார்?.. லியோ பார்த்து எடுத்த முடிவு?.. அந்தணன் ஷேரிங்ஸ்

சென்னை: Rathnakumar (ரத்னகுமார்) ரஜினிகாந்த்தின் 171ஆவது படத்திலிருந்து ரத்னகுமார் தூக்கப்பட்டார் என்று பத்திரிகையாளர் அந்தணன் தெரிவித்திருக்கிறார்.

லியோ படம் கடந்த 19ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அதேசமயம் வசூல் ரீதியாக நல்ல ரெஸ்பான்ஸை பெற்றிருக்கிறது. இதுவரை மொத்தம் 540 கோடி ரூபாய்க்கும் மேல் படம் வசூல் செய்திருக்கிறது. இந்த சூழலில் படத்தின் சக்சஸ் மீட் சில நாட்களுக்கு முன்பு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடந்தது.

Journalist Anthanan has reported that Ratnakumar not in Thalaivar 171

விஜய் பேச்சு: இதில் பலரும் எதிர்பார்த்தபடியே விஜய் குட்டி ஸ்டோரி ஒன்றை சொன்னார். அதேபோல் நா ரெடிதான் பாடலின் வரிகள் சந்தித்த சர்ச்சை குறித்தும் பேசினார். அதுதொடர்பாக பேசிய விஜய், "நா ரெடிதான் பாடலின் சில வரிகள் பிரச்னையை சந்தித்தன. விரல் இடுக்குல தீ பந்தம் என்ற வரி பிரச்னை ஆனது. அது ஏன் சிகரெட்டாகத்தான் இருக்க வேண்டுமா?.. பேனாவாகக்கூட இருக்கலாமே. சினிமாவை சினிமாவாக பார்க்க வேண்டும்.

பள்ளி, கல்லூரி அருகில்கூடத்தான் மதுக்கடை இருக்கிறது. அதற்காக தினமும் இரண்டு ரவுண்டு அடித்துவிட்டா பள்ளி, கல்லூரிகளுக்கு செல்கிறார்கள் என பேசியிருந்தார். அதேபோல், அப்பாவின் சட்டை பெரிதாக இருந்தாலும் அதை பையன் போட்டு பார்ப்பான். அப்பாவின் வாட்சை எடுத்து கட்டி பார்ப்பான். அப்பாவின் நாற்காலியில் அமர்ந்து பார்ப்பான் என்றும் பேசியிருந்தார். அவரது இந்த அப்பா - மகன் பேச்சு ரஜினியையும் தன்னையும் மனதில் வைத்துதான் பேசுகிறார் என்றும் ஒரு கருத்து எழுந்திருக்கிறது.

ரத்னகுமார் பேச்சு: லியோ சக்சஸ் மீட்டில் அனைத்துமே நன்றாக போனாலும் ஒரே ஒரு விஷயம் மட்டும்தான் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது மேடையில் பேசிய லோகேஷ் கனகராஜின் நண்பரும், இயக்குநருமான ரத்னகுமார், "பருந்து எவ்வளவு உயரமாக பறந்தாலும் பசித்தால் கீழே வந்துதான் ஆக வேண்டும்" என குறிப்பிட்டிருந்தார். ரஜினிகாந்த் ஏற்கனவே பருந்து - காக்கா கதையை கூறியிருந்த சூழலில் ரத்னகுமாரின் இந்தப் பேச்சு மூலம் ரஜினியை அவர் நேரடியாக சீண்டிவிட்டார் என்ற சர்ச்சை எழுந்துள்ளது.

அந்தணன் பேட்டி: இந்த சூழலில் பிரபல பத்திரிகையாளர் அந்தணன் சமீபத்தில் அளித்த பேட்டியில், "லியோ சக்சஸ் மீட்டில் ரத்னகுமாரின் அந்தப் பேச்சு தேவையில்லாத ஒன்று. அவருக்கெல்லாம் ரஜினியை விமர்சனம் செய்ய என்ன தகுதி இருக்கிறது. ரஜினி செய்த சாதனையில் ஒரு புள்ளி அளவுக்கூட ரத்னகுமார் செய்யவில்லை. அப்படி இருக்கும்போது இப்படி பேசலாமா?

Journalist Anthanan has reported that Ratnakumar not in Thalaivar 171

ரத்னாவுக்கு நோ: குறிப்பாக தனது நண்பர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக ரஜினியை வைத்துதான் படம் எடுக்கப்போகிறார். உண்மையில் நண்பர் மீது அக்கறை இருந்திருந்தால் இப்படி பேசியிருப்பாரா. லியோ படம் 19ஆம் தேதி ரிலீஸானது. 18ஆம் தேதியே ரஜினிகாந்த் லியோவை பார்த்துவிட்டார். ஆனால் படத்துக்கு எந்தப் பாராட்டையும் கொடுக்கவில்லை.

படத்தை பார்த்த அவர் லோகேஷ் கனகராஜுடன் யார் யார் பணியாற்றியிருக்கிறார்கள் என்று விசாரித்திருப்பார். அதில் ரத்னகுமாரின் பெயரும் சொல்லப்பட்டிருக்கும். லியோ படம் சொதப்பலாக இருந்ததால் கண்டிப்பாக தன்னுடைய 171ஆவது படத்திலிருந்து ரத்னாவை தூக்க சொல்லியிருப்பார்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X