சிகிச்சையிலிருந்து ஹெலிகாப்டர் வரை.. தயாரிப்பாளர் அவ்வளவு செய்தார்.. சிம்பு திருந்தல.. பிரபலம் விளாசல்

சென்னை: நடிகர் சிம்பு தற்போது கமல் ஹாசன் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தனது 48ஆவது படத்தில் நடித்துவருகிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானது. இரட்டை வேடங்களில் நடிக்கும் சிலம்பரசன் கண்டிப்பாக இந்தப் படத்தின் மூலம் மெகா ப்ளாக்பஸ்டரை கொடுப்பார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர். இந்தச் சூழலில் சிம்பு குறித்து பத்திரிகையாளர் அந்தணன் பல விஷயங்களை ஓபனாக பேசியிருப்பது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது.

எஸ்டிஆர், அட்மேன் என ரசிகர்களால் அழைக்கப்படும் சிம்பு சில காரணங்களால் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்தார். பிறகு உடல் எடையை குறைத்து எண்ணங்களை ஒருநிலைப்படுத்தி ஈஸ்வரன் படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார். ஆனால் படம் சரியாக போகவில்லை. அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்தார். அந்தப் படம் மெகா ப்ளாக்பஸ்டர் ஆனது. சிம்புவின் நடிப்பும், வெங்கட் பிரபுவின் மேக்கிங்கும் ரசிகர்களுக்கு ரொம்பவே பிடித்துப்போக படமானது நூறு கோடி ரூபாய் வசூலித்து கெத்து காட்டியது.

Journalist Anthanan Open Talks about Simbu And Isari Ganesh Issue

அடுத்தடுத்த ஹிட்: மாநாடு வெற்றிக்கு பிறகு சிம்பு வெந்து தணிந்தது காடு, பத்து தல ஆகிய படங்களில் நடித்தார். இவற்றில் வெந்து தணிந்தது காடு படம் சூப்பர் ஹிட்டானது. அதில் சிம்புவின் நடிப்பு பெரிதளவு பேசப்பட்டது. அடுத்து நடித்த பத்து தல திரைப்படம் சரியாக போகவில்லை. சூழல் இப்படி இருக்க கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தனது 48ஆவது படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார் சிலம்பரசன்.

எஸ்டிஆர் 48: இந்தப் படத்தை கமல் ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது. தேசிங்கு பெரியசாமி இயக்கம் என்பதால் கண்டிப்பாக இந்தப் படம் ஹிட்டாகும் என்ற நம்பிக்கை எஸ்டிஆர் ரசிகர்களிடம் இருக்கிறது. இப்படத்துக்காக சிம்பு செம ஃபிட்னெஸ்ஸோடு இருக்கிறார். அதுமட்டுமின்றி மார்ஷியல் ஆர்ட்ஸ் உள்ளிட்ட கலைகளையும் அவர் கற்றுக்கொண்டதாக தெரிகிறது. இதற்காக அவர் தாய்லாந்து, லண்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் கமலின் தக் லைஃப் படத்திலும் நடிக்கிறார் சிம்பு.

சிம்பு மீது புகார்: இதற்கிடையே கோகுல் இயக்கத்தில் ஐசரி கணேஷ் தயாரிப்பில் கொரோனா குமார் என்ற படத்தில் சிம்பு நடிக்கவிருந்தார். ஆனால் அந்தப் படம் டேக் ஆஃப் ஆகவில்லை. நிலைமை இப்படி இருக்க சிம்பு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் கொடுத்திருக்கிறார். இதனால் என்ன நடக்கும் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்திருக்கிறது.

அந்தணன் பேட்டி: இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பத்திரிகையாளர் அந்தணன் பேசுகையில், "பழையபடி இல்லாமல் சிம்பு இப்போது சரியான நேரத்துக்கு ஷூட்டிங் செல்கிறார். ஆனால் இன்னமும் ஐசரி கணேஷ் விவகாரத்தில் திருந்தாமல் இருப்பது சரியில்லை. சிம்புவின் தந்தை டி.ஆர் உடல்நலக்குறைவு காரணமாக வெளிநாட்டில் சிகிச்சைக்கு சென்றபோது அதற்கான அத்தனை ஏற்பாடுகளையும் செய்தது ஐசரி கணேஷ்தான்.

ஓடாத படம்: அதேபோல் சிம்புவுக்காக ஹெலிகாப்டர் வரவழைத்து மாஸ் காட்டினார். ஓடாத வெந்து தணிந்தது காடு படத்தை வெற்றி படம் என்று அறிவித்தார். சிம்புவுக்கு கார், கௌதம் மேனனுக்கு புல்லட் வாங்கிக்கொடுத்தார். சிம்புவை வைத்து அடுத்தடுத்து மூன்ரு படங்களை தயாரிக்கவும் முடிவு செய்திருந்தார். கொரோனா குமார் கதை பிடிக்கவில்லை என்றாலோ அல்லது அந்த இயக்குநரை மாற்ற வேண்டும் என்றாலோ அதுதொடர்பான ஐசரியிடம் சிம்பு பேச்சுவார்த்தை நடத்தியிருக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு அந்த கம்பெனியிலிருந்து தாவி தற்போது கமலின் நிறுவனத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தது ஏன்" என்று கேள்வி எழுப்பினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X