அதை யோசிக்கல.. ஜெயம் ரவி -ஆர்த்தி டைவர்ஸ் உண்மையாம்.. விரைவில் வெளியே வருமாம்.. பிரபலம் கொடுத்த ஷாக்
சென்னை: கோலிவுட்டில் கடந்த சில நாட்களாகவே ஹாட் டாபிக்காக ஓடிக்கொண்டிருப்பது ஜெயம் ரவி - ஆர்த்தி விவகாரம்தான். இருவருக்கும் சமீபமாக பிரச்னை ஓடிக்கொண்டிருக்கிறது. எனவே இருவரும் விரைவில் விவாகரத்து செய்யவிருக்கிறார்கள் என்று தொடர்ந்து பேசப்படுகிறது. ஆனால் இருவரும் அமைதியாக இருக்கிறார்கள். சூழல் இப்படி இருக்க இந்த விவகாரம் குறித்து பிரபல சினிமா பத்திரிகையாளர் அந்தணன் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருக்கிறார்.
தமிழ் சினிமாவில் எந்த கிசுகிசுவிலும் சிக்காமல் இருந்தவர் ஜெயம் ரவி. தான் உண்டு, தனது குடும்பம் உண்டு, வேலை உண்டு என்று இருப்பவர். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான சைரன் திரைப்படம் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது. அவரது மாமியார் தயாரித்திருந்த அந்தப் படம் முதலுக்கு மோசமில்லை என்ற நிலையில் கடந்து சென்றது. பெரிய ஹிட் இல்லாவிட்டாலும்; நஷ்டம் எதுவும் இல்லை என்ற நிம்மதியோடு இருந்தார்கள் ஜெயம் ரவியும், அவரது மாமியாரும்.

ஆர்த்தியுடன் சண்டை?: சூழல் இப்படி இருக்க கடந்த சில நாட்களாகவே ஒரு பிரச்னை பேசப்படுகிறது. அதாவது ஜெயம் ரவிக்கும் அவரது மனைவி ஆர்த்திக்கும் வாக்குவாதமாக ஆரம்பித்த மனஸ்தாபம் இப்போது பெரும் சண்டையில் வந்து நிற்கிறது என்றும்; கூடிய சீக்கிரமே இரண்டு பேரும் விவாகரத்து முடிவை அறிவிக்கவிருக்கிறார்கள் என்றும் தகவல் வெளியாகி ரசிகர்களை ஷாக் ஆக்கியது. ஆனால் சம்பந்தப்பட்ட இரண்டு பேருமே இதுவரை அமைதியாகத்தான் இருக்கிறார்கள்.
என்ன காரணம்: ஆனால் இருவருக்குமான சண்டைக்கு இதுதான் காரணம் என பல யூகங்கள் பலரால் கிளப்பிவிடப்படுகின்றன. அதன்படி, அடுத்த படத்துக்கு தனது மாமியாரிடம் 25 கோடி ரூபாய் சம்பளமாக ஜெயம் ரவி கேட்டதாகவும்; ஆனால் அதற்கு சுஜாதா (ரவியின் மாமியார்) ஒத்துக்கொள்ளவில்லை; அதனால் சண்டை என ஒருதரப்பினரும்; சுஜாதா ஒரு மகனை வளர்த்துவருகிறார். அவருக்கும் ரவிக்கும் ஆரம்பித்த ஈகோ பிரச்னை இப்போது ரவி - ஆர்த்தி சண்டையாக மாறியிருக்கிறது என்று ஒருதரப்பினரும் தொடர்ந்து கூறுகிறார்கள்.
தனுஷ் காரணம்: அதேபோல் இருவருக்குமான சண்டைக்கு முக்கிய காரணமே தனுஷ்தான் என்று இன்னொரு தரப்பினர் பற்ற வைக்கிறார்கள். ஆனால் அப்படி இருக்க வாய்ப்பே இல்லை. ஏனெனில் அவரே தனது மனைவியிடமிருந்து விவாகரத்து கோரியிருக்கிறார். அவரது நிலைமை இப்படி இருக்க அவர் ஏன் இன்னொரு ஜோடி விவாகரத்துக்கு காரணமாக இருக்கப்போகிறார் என்று ஆதரவு குரல்கள் எழுந்திருக்கின்றன. இந்நிலையில் பிரபல சினிமா பத்திரிகையாளர் அந்தணன் ஜெயம் ரவி - ஆர்த்தி விஷயம் குறித்து தனியார் யூட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பேசியிருக்கிறார்.
அந்தணன் பேட்டி: அவர் அளித்த பேட்டியில், "நாங்கள் விசாரித்தவரைக்கும் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்திக்கும் இடையே சண்டை இருப்பது உண்மைதான் என்று சொல்கிறார்கள். விரைவில் இதுதொடர்பான ஆதாரப்பூர்வமான செய்திகள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. அதேசமயம் இரண்டு குடும்பத்தினரும் சேர்ந்து அவர்களை சமாதானப்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளும் மறுபக்கம் போய்க்கொண்டுதான் இருக்கின்றன. இரண்டு பேருக்கும் பிரச்னை இருப்பதும், விவாகரத்து முடிவுக்கு வந்ததெல்லாம் உண்மைதான். இருவரும் சேர்ந்துவிட்டால் நல்லதுதான்.
தனுஷ் எல்லாம் காரணம் இல்லை: அதேபோல் இந்த விவாகரத்துக்கு தனுஷ்தான் காரணம் என்று சிலர் கிளப்பிவிடுகிறார்கள். அதெல்லாம் உண்மை இல்லை. கணவன், மனைவிக்குள் சண்டை வருவதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கின்றன. ஆனால் தனுஷ்தான் காரணம் என்று சொல்வதில் நியாயமில்லை. சம்பந்தப்பட்ட இருவரில் ஒருவர் பெண். அவருக்கென்று ஒரு குடும்பம் இருக்கிறது. எதிர்காலம் இருக்கிறது. ஆனால் அதையெல்லாம் யோசிக்காமல் இதில் தனுஷை இழுத்துவிடுவது சரியில்லை. இதெல்லாம் அவர் மீது தவறான இமேஜ் குத்துவதற்கு செய்கிறார்கள்" என்றார்.


Click it and Unblock the Notifications











