பயங்கரமாக டார்ச்சர் செய்த நயன்தாரா?.. பதிலடி கொடுத்த இயக்குநர்?.. அடுத்த பஞ்சாயத்து ஸ்டார்ட்
சென்னை: கோலிவுட்டில் சமீப காலமாக பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார் நயன்தாரா. தனுஷுடனான பஞ்சாயத்து, வலைப்பேச்சு டீமை தரக்குறைவாக விமர்சித்தது என தொடர்ந்து ஹெட்லைன்ஸாக இருக்கிறார். அவருக்கு எதிராக பலரும் தங்களது கண்டனத்தை பதிவு செய்துவருகின்றனர். ஆனால் அத்தனைக்கும் அமைதியாகவே இருக்கிறார் அவர். சூழல் இப்படி இருக்க இறைவன் பட ஷூட்டிங்கில் நயன்தாரா செய்ததாக ஒரு சம்பவம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
தமிழ் சினிமாவில் 20 வருடங்களுக்கும் மேலாக நடித்துவருகிறார் நயன்தாரா. நடிக்க வந்த புதிதில் சிம்புவுடனான காதல் தோல்வி, அதற்கு பிறகு பிரபுதேவாவுடனான காதல் தோல்வி என சர்ச்சைகளில் சிக்கினார். அதிலும் ஏற்கனவே திருமணமான பிரபுதேவாவுடனான அவர் காதலில் இருந்தது பெரும் பிரச்னையை ஏற்படுத்தியது. அவரது வீட்டுக்கு நேராக சென்று பிரபுதேவாவின் முதல் மனைவி ரமலத் நயனை கண்டபடி திட்டியதாகவும் அப்போது ஒரு தகவல் வெளியானது என்பது நினைவுகூரத்தக்கது.

விக்னேஷ் சிவனுடன் காதல்: அதற்கு பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நானும் ரௌடிதான் படத்தில் நடித்தபோது அவரை காதலித்தார் நயன்தாரா. இரண்டு பேரும் சில வருடங்கள் லிவிங் டூ கெதரில் இருந்துவிட்டு கடந்த 2022ஆம் ஆண்டு மகாபலிபுரத்தில் வைத்து திருமணம் செய்துகொண்டார்கள். அதற்கு பிறகு வாடகை தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளையும் பெற்றெடுத்தார்கள். அந்த விவகாரமும் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி பின்னர் அடங்கியது. மகன்களுக்கு உயிர், உலக் என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
மீண்டும் சர்ச்சையில்: திருமணத்துக்கு பிறகு சினிமாவில் பிஸியாக நடித்துவருகிறார் நயன். அந்தவகையில் ஹிந்தியில் ஜவான், தமிழில் அன்னபூரணி படங்களில் நடித்த அவர் அடுத்ததாக ராக்காயி, மண்ணாங்கட்டி, டாக்சிக் என பல படங்களில் கமிட்டாகியிருக்கிறார். இப்படி ஒருபக்கம் அவர் பிஸியாக இருக்க மறுபக்கம் தொடர்ந்து சர்ச்சைகளில் மீண்டும் சிக்க ஆரம்பித்திருக்கிறார். தன்னை பற்றிய ஆவணப் படத்தில் நானும் ரௌடிதான் பட காட்சிகளை தயாரிப்பாளர் தனுஷின் அனுமதியின்றி பயன்படுத்தினார். இதன் காரணமாக தனுஷ் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நயன் கொடுத்த பேட்டி: இந்தப் பிரச்னை ஓய்ந்த கையோடு அடுத்த பஞ்சாயத்தும் கிளம்பியது. தனியார் ஆங்கில யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், வலைப்பேச்சு குழுவினரை மூன்று குரங்குகள் என்று தரக்குறைவாக பேசினார். அது பெரும் விவாதத்தை கிளப்பியது. பலரும் நயனுக்கு எதிராக தங்களது காட்டமான கருத்தினை முன்வைத்தார்கள் . வலைப்பேச்சு டீமும் நாகரீகமாக தங்களது கண்டனத்தை முன்வைத்தார்கள். அதே பேட்டியில் சந்திரமுகி படத்தில் நடித்தபோது ரஜினிகாந்த் எவ்வளவு பெரிய ஸ்டார் என்பது தனக்கு தெரியாது என்றும் நயன் கூறியிருந்தார். இதனால் ரஜினியின் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற நடிகர்களின் ரசிகர்களும் கொதிப்படைந்தனர்.
புதிய பஞ்சாயத்து: இந்நிலையில் நயன்தாரா பற்றி வலைப்பேச்சு அந்தணன் புதிய தகவல் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அவர் வலைப்பேச்சில் பேசுகையில், "சமீபத்தில் ஒரு ரெஸ்டாரண்ட்டுக்கு சென்றிருந்தேன். அப்போது ஒரு நண்பர் வந்தார். அவர் நயன் நடித்த இறைவன் படத்தில் வேலை செய்தவர். அவர் என்னிடம், நயன்தாரா பற்றி பேசினீர்கள். ஆனால் இந்தத் தகவலை எப்படி விட்டீர்கள் என்று தெரியவில்லை என சொல்லி ஒரு விஷயத்தை கூறினார்.
என்ன விஷயம்?: அதாவது, இறைவன் படத்தில் நடிப்பதற்காக 15 நாட்கள் டேட்ஸ் கொடுத்த நயனுக்கு சம்பளம் எட்டு கோடி ரூபாய். அவரது அசிஸ்டெண்ட்டுகளுக்கு நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய். சூழல் இப்படி இருக்க இரண்டு நாட்கள் ஷூட்டிங் வந்த அவர், இயக்குநரை அழைத்து இனி என்னால் காலையில் ஷூட்டிங் வர முடியாது. மதியம் இரண்டு மணியிலிருந்து இரவு பத்து மணிவரை ஷூட்டிங்கை வைத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லியிருக்கிறார். ஆனால் படத்தில் பெரும்பாலும் பகலில் நடக்கும் காட்சிகள்தான்.
இதனை உதவி இயக்குநர் ஒருவர் நயனிடம் சொல்லியிருக்கிறார். அதற்கு அவரோ எனது சினிமா அனுபவம் என்ன உனது சினிமா அனுபவம் என்ன என்று அவ்வளவு சண்டை போட்டிருக்கிறார். வேறு வழியில்லாமல் இயக்குநரும் படத்தை முடித்துவிட்டார். ஷூட்டிங்கின் கடைசி நாளில் படக்குழுவுடன் ஃபோட்டோ எடுக்க நயன் விருப்பப்பட்டாராம். ஆனால் இயக்குநரோ நான் வரவில்லை அவங்களை ஃபோட்டோ எடுத்துக்கொண்டு கிளம்ப சொல்லுங்கள் என்று சொல்லியிருக்கிறார். ஆனால் நயனோ இல்லை அவர் வரும்வரை வெயிட் செய்கிறேன் என்று சொல்லி வெயிட் செய்து இயக்குநர் மற்றும் படக்குழுவுடன் புகைப்படம் எடுத்து சென்றாராம்" என்றார்.


Click it and Unblock the Notifications











