ஜெயம் ரவி - பாடகி நெருக்கமான உறவு உண்மைதான்.. ஆர்த்தி மனநிலை என்ன?.. குஷ்பூ எங்கே?.. பிரபலம் கேள்வி

சென்னை: கோலிவுட்டில் கடந்த சில வாரங்களாக ஓயாத புயலாக வீசிக்கொண்டிருக்கிறது ஜெயம் ரவி - ஆர்த்தி விவகாரம். விவாகரத்து மனுவை தாக்கல் செய்திருக்கும் ஜெயம் ரவி; தன்னுடன் இன்னொரு பெண்ணை தொடர்புப்படுத்தி பேசுவது எல்லாம் தேவையற்ற ஒன்று என்று தெரிவித்திருக்கிறார். அதேபோல் பாடகி கெனிஷாவும் நேற்று இன்ஸ்டாகிராமில் காட்டமாக பதிவு ஒன்றை போட்டிருந்தார். இந்தச் சூழலில் பிரபல பத்திரிகையாளர் அந்தணன் இவ்விவகாரம் குறித்து பேசியிருக்கிறார்.

ஆர்த்தியை பிரிவதாக அறிவித்து விவாகரத்து மனுவையும் தாக்கல் செய்திருக்கிறார் ஜெயம் ரவி. ஆனால் ரவி எடுத்த முடிவு தனக்கு தெரியாது என்று கூறினார் ஆர்த்தி. இதனையடுத்து தவறு யார் பக்கம் இருக்கிறது என்பது தொடர்பாக பலரும் பலவாறு பேச ஆரம்பித்தார்கள். விவாகரத்து முடிவை அறிவித்த நாளிலிருந்து அமைதியாக இருந்த ஜெயம் ரவி; பிரதர் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு முன்பும் பின்பும் செய்தியாளர்களிடம் தன் தரப்பு விளக்கத்தை அளித்தார்.

jayam ravi aarti anthanan

பாடகியுடன் தொடர்பு: இதற்கிடையே பாடகி கெனிஷாவுடன் ஜெயம் ரவிக்கு ஏற்பட்ட தொடர்புதான் இந்தப் பிரச்னையின் மையக்கரு என்று பலரும் இஷ்டத்துக்கு பேசினார்கள். ஆனால் ரவியோ, கெனிஷா ஆதரவற்ற பெண். பலரை காப்பாற்றியிருக்கிறார்கள். அவரையும், என்னையும் இணைத்து பேசுவது தேவையற்ற ஒன்று என்று பேசி முற்றுப்புள்ளி வைத்தார். ஆனால் கோவாவில் ஜெயம் ரவியின் கார் எப்படி கெனிஷாவிடம் சென்றது என்ற கேள்வியை பலரும் இன்னமும் எழுப்பிவருகிறார்கள்.

கெனிஷா காட்டம்: ரவி செய்தியாளர்களிடம் விளக்கமளித்த சில மணிநேரங்களிலேயே கெனிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உங்களுக்கு கொஞ்சமாவது நாகரீகம் உள்ளதா? இப்போ ஜெயம் ரவி என்ன மாதிரியான பதிலடி கொடுத்திருக்கிறார். இனியாவது உங்கள் மனதை அமைதியாக வைத்துக்கொள்ளுங்கள் என்று போஸ்ட் போட்டிருந்தார். அந்தப் போஸ்ட்டில் ரசிகர் ஒருவர், ஜெயம் ரவி உங்கள் கட்டுப்பாட்டில் பாதுகாப்பாக இருக்கிறாரா என்று கேள்வி கேட்டார். அதற்கும் சரியான பதிலடி கொடுத்திருந்தார் கெனிஷா.

ஆர்த்தி டார்ச்சர்: கெனிஷாவின் இந்தப் போஸ்ட் பல கேள்விகளை ரசிகர்களிடம் எழுப்பியது. அதாவது, கெனிஷா - ரவி நட்போடுதான் பழகினார்களா? எனில் ஆர்த்திதான் அவர்களை சந்தேகப்பட்டதா போன்று கேள்விகளை முன்வைத்தனர். அதுமட்டுமின்றி ரவி காரில் கெனிஷா சென்ற விஷயத்தை ஆர்த்தி தரப்புதான் லீக் செய்ததாகவும் ஒரு தகவல் அரசல் புரசலாக ஓடியது. சூழல் இப்படி இருக்க இந்த விவகாரம் குறித்து பிரபல பத்திரிகையாளர் அந்தணன் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.

அந்தணன் பேட்டி: அவர் அளித்த பேட்டியில், “ரவி - கெனிஷா இணைந்திருக்கும் புகைப்படத்தை வைத்து கிளம்பிய கிசுகிசுவை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. அதேநேரத்தில் இதுதொடர்பாக அவர்களுக்கு நெருக்கமானவர்களிடம் விசாரித்தபோது அதில் ஓரளவுக்கு உண்மை இருப்பதாகத்தான் சொல்கிறார்கள். முதலில் இந்த விவகாரத்தில் ஆர்த்திதான் டார்ச்சர் செய்தார். அதனால் ரவி வெளியே வந்துவிட்டார் என்று நானே சொல்லியிருக்கிறேன். ஆனால் இப்போது விசாரிக்கும்போது அந்தப் பாடகியுடன் ரவிக்கு நெருக்கமான உறவு இருக்கிறது. இரண்டு பேருமே கோவாவுக்கு சென்று தங்கியிருந்ததாக சொல்கிறார்கள்.

ஆர்த்தி தரப்பு; குஷ்பூ எங்கே?: ரவியின் காரை கோவாவில் கெனிஷா பயன்படுத்தியதை ஆர்த்தி தரப்பு வெளியிட்டிருக்கிறார்கள் என்று எல்லோரும் சொல்கிறார்கள். அது நிச்சயமாக இருக்குமில்லையா. ஏனெனில் முழு காரணம் ஆர்த்திதான் என்று சொல்லப்படும்போது; நான் மட்டும் காரணமில்லை ரவி தரப்பிலும் தவறு இருக்கிறது என்பதை ஆர்த்தி பொதுவெளிக்கு கொண்டு வருகிறார். இதில் குஷ்பூவின் ரோல் முக்கியமானது. ஏனெனில் ஆர்த்தி - ரவி காதலுக்கும், திருமணத்துக்கும் அவர்தான் காரணம். அவர் கீழே இறங்கிவந்து இரண்டு தரப்பிடமும் பேச வேண்டும். அவர் இப்போ எங்கே என்று தெரியவில்லை” என்றார்.

ஆனால் இதனைப் பார்த்த ரசிகர்களோ என்ன எல்லோரும் இஷ்டத்துக்கு பேசுகிறார்கள். ரவிக்கும், கெனிஷாவுக்கும் உறவு உண்மை என்று சொன்ன நெருக்கமானவர்கள் என்பதையும் அந்தணன் விளக்க வேண்டும். ரவி தெளிவாக இந்த விஷயத்தில் முற்றுப்புள்ளி வைத்த பிறகும் ஏன் இதனை நோண்டிக்கொண்டே இருக்கிறார்கள். இது ஒருவேளை பொய்யாக இருந்தால் அந்தப் பெண்ணின் மனநிலை என்னவாக இருக்கும். இப்படியெல்லாம் பேசுவது முற்றிலும் தவறு என்று ரசிகர்கள் காட்டமாக பதிவிட்டுவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X