வாங்கிய கடனை திருப்பி தராத மகள்.. ரவுடிகள் செய்த அட்டூழியம்.. ஜட்டியோடு உட்கார வைத்த ரஜினிகாந்த்
சென்னை: ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்துவருகிறார். அடுத்ததாக கமல்ஹாசன் தயாரிப்பில் தலைவர் 173 படத்தில் நடிக்கவும் கமிட்டாகியிருக்கிறார். அந்தப் படத்தின் இயக்குநர் யார் என்பது இன்னும் தெரியவில்லை. இது ஒருபக்கம் இருக்க இன்று அவர் தனது 75ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துவரும் சூழலில் பிரபல பத்திரிகையாளர் அந்தணன் பேசியிருக்கும் விஷயம் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த கூலி படம் குழியில் விழுந்ததால் அவரது ரசிகர்கள் ரொம்பவே அப்செட். இந்தப் படத்துக்கு பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்துவருகிறார். இப்போது அப்படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் நடந்துவருகிறது. இப்படத்தை முடித்துவிட்டு தலைவர் 173 படத்தில் கமல் தயாரிப்பில் நடிக்கிறார். முதலில் இப்படத்தை சுந்தர். சி இயக்குவதாக இருந்து பிறகு அவர் வெளியேறியதால் புதிய இயக்குநரை தேடும் பணி நடந்துவருகிறது.
ரஜினியின் 75ஆவது பிறந்தநாள்: இது ஒருபக்கம் இருக்க ரஜினிகாந்த் இன்று தனது 75ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். அவருக்கு பிரதமர் முதல் சாமானியர்கள்வரை தங்களது வாழ்த்தை தெரிவித்தார்கள். அதுமட்டுமின்றி படையப்பா படத்தையும் இன்று ரீ ரிலீஸ் செய்தார்கள். அதற்கும் ரசிகர்கள் தங்களது பெரிய வரவேற்பை கொடுத்தார்கள். தியேட்டருக்கு சென்று திருவிழா போல் கொண்டாடியதை பார்த்து; இத்தனை வருடங்கள் கழித்து ரீ ரிலீஸ் ஆகும் படத்துக்கே இவ்வளவு மாஸா என்று திரைத்துறையில் ஆச்சரியம்தான் எழுந்திருக்கிறது.

அந்தணன் வீடியோ: இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் அந்தணன் தனது யூடியூப் சேனலில் வெளியிட்டிருக்கும் வீடியோவில், "படையப்பா படம் இன்று ரீ ரிலீஸாகியிருக்கிறது. ரெஸ்பான்ஸ் எல்லாம் எப்படி இருக்கிறது என்று தேனப்பனிடம் இன்று பேசினேன். அவர் ரொம்பவே மகிழ்ச்சியாக இருக்கிறார். அதுமட்டுமின்றி ரஜினி சாரும் ஹேப்பியாக இருக்கிறார். காலை ஃபோன் செய்து படையப்பா ரீ ரிலீஸுக்கு ரெஸ்பான்ஸ் எப்படி இருக்கிறது என்று கேட்டார். அதிரி புதிரி ரெஸ்பான்ஸ் என்று சொன்னதாக கூறினார்.
மகள் வாங்கிய கடன்: இந்த நேரத்தில் ரஜினியின் வாழ்க்கையில் நடந்ததை சொல்கிறேன். அதாவது ரஜினியின் இளைய மகள் சுல்தான் தி வாரியர் என்ற படம் எடுப்பதற்காக ஒரு பைனான்சியரிடம் கடன் வாங்கினார். ஆனால் கடனை வாங்கிவிட்டு தொடர்பு எல்லைக்கு அப்பால் சென்றுவிட்டார். கடன் கொடுத்தவர் ஃபோன் செய்தாலும் எடுப்பதில்லை. அப்போது திமுக ஆட்சி. கருணாநிதிதான் முதலமைச்சர். அந்த சமயத்தில் உச்சத்தில் இருந்த ஒரு சேனலில் உச்சத்தில் இருந்த அதிகாரியின் உதவியை சௌந்தர்யாவுக்கு கடன் கொடுத்தவர் நாடுகிறார்.
ரவுடிகள் அட்டூழியம்: அந்த உயர் அதிகாரி பெரிய செல்வாக்கில் இருந்தவர். கருணாநிதி அவரை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. அந்த அதிகாரியும் அவருடன் இருந்த ஒருவரும் ஆட்களை அனுப்பி சௌந்தர்யா அலுவலகத்தில் இருந்த பொருட்களை எல்லாம் அடித்து நாசம் செய்துவிட்டார்கள். இது ரஜினிக்கு பெரிய ஷாக். நம் மகளுக்கே இப்படி ஒரு நிலைமையா என்று நொந்துபோனார். வெளியே சொல்லவும் முடியாத நிலைமையில் அமைதியாக அதை கடந்துவிட்டார்.
ஜெவுடன் சந்திப்பு: நிலைமை இப்படி இருக்க திமுக ஆட்சி மறைந்து அதிமுக ஆட்சி வந்தது. முதலமைச்சராக பொறுப்பேற்ற ஜெயலலிதாவை நேரில் சந்தித்து ரஜினி வாழ்த்து தெரிவித்தபோது; இந்த விவகாரத்தை பற்றி சொன்னார். உடனே ஜெயலலிதா அந்த உயர் அதிகாரி உள்ளிட்டோரை கைது செய்து ஸ்டேஷனில் ஜட்டியோடு அமர வைத்தார். இதற்கு ரஜினிதான் காரணம். அதனால்தான் ஜெயலலிதாவுடன் மோதலில் இருந்த ரஜினி ஒருகட்டத்தில் அவரை தைரிய லட்சுமி என்று புகழ்ந்தார்" என்றார்.


Click it and Unblock the Notifications











