சூர்யாவுக்கு ஜோதிகாவால் வந்த சோதனையா?.. புறநானூறு பிரச்னைக்கு காரணம் இதுவா?.. அந்தணன் ஷேரிங்ஸ்

சென்னை: சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்குவதாக இருக்கும் படம் புறநானூறு. ஏற்கனவே இவர்கள் இருவரும் இணைந்த சூரரைப் போற்று திரைப்படம் மெகா ஹிட்டாகி தேசிய விருதை தட்டி சென்றது. மீண்டும் அவர்கள் இணைவதாக வந்த அறிவிப்பு ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்தது. ஆனால் அந்த அறிவிப்புக்கு பிறகு படத்தின் நிலை என்னவென்று தெரியவில்லை. மேலும் இந்தப் படம் ட்ராப்பாகிவிட்டதாகவும் ஒரு பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தச் சூழலில் பத்திரிகையாளர் அந்தணன் ஒரு விஷயத்தை பேசியிருக்கிறார்.

சூர்யா இப்போது கங்குவா படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே அவரும், சுதா கொங்கராவும் இணையவிருக்கிறார்கள் என்ற அறிவிப்பு வெளியானது. படத்துக்கு புறநானூறு என்றும் பெயர் வைக்கப்பட்டது. இதில் துல்கர் சல்மான் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். சூரரைப் போற்று படத்துக்கு பிறகு சூர்யாவும், சுதாவும் இணைவதால் இந்தப் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. ஆனால் இந்தப் படம் ட்ராப்பாகிவிட்டதாக கடந்த சில மாதங்களாகவே ஒரு பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது.

Journalist Anthanan Reveals Unknown Information About Suriya And Jyothika

பிரச்னைக்கான காரணம்: இந்நிலையில் பத்திரிகையாளர் அந்தணன் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருக்கிறார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், "புறநானூறு கதையை சூர்யாவிடம் சுதா கொங்கரா சொல்லியபோது அப்போதைய சூழல் வேறு மாதிரி இருந்தது. அந்த சமயத்தில் ஹிந்தியில் நடிக்க வேண்டும் என்ற ஆசையெல்லாம் சூர்யாவுக்கு இல்லை. ஜோதிகாவும் சூர்யாவுடன் சென்னையில்தான் வசித்துவந்தார். ஆனால் இப்போது ஜோதிகா ஹிந்தி படத்தில் நடிக்க ஆசைப்பட்டு மும்பை சென்றதன் விளைவுதான் புறநானூறு படத்தில் ஏற்பட்டிருக்கும் பிரச்னைக்கு காரணம்.

ஹிந்தி எதிர்ப்பு: அதாவது புறநானூறு படத்தில் ஹிந்தி எதிர்ப்பை மையப்படுத்தி கதை அமைக்கப்பட்டிருப்பதாக பேசப்படுகிறது. கதையை கேட்ட ஜோதிகா தரப்பு கதையில் இருக்கும் வீரியத்தை குறையுங்கள் என்று சொல்லியிருக்கிறது. அதற்கு சுதா கொங்கரா தயாராக இல்லை. இன்னொரு தகவல் என்னவென்றால், சுதா கொங்கராவின் அனுமதி இல்லாமல் இன்னொரு இயக்குநரிடம் புறநானூறு ஸ்க்ரிப்ட்டை கொடுத்து படிக்க சொன்னதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் கோபமான சுதா கொங்கரா சூர்யாவின் விவாதம் செய்ததாகவும் ஒரு தகவல்.

வாடிவாசல் நிலை: வாடிவாசல் படத்தை பொறுத்தவரை சூர்யா அந்தப் படத்தில் இதுவரை நடிக்கவில்லை என்று சொல்லவில்லை. சூர்யா விலகிவிட்டதாக வெற்றிமாறனும் சொல்லவில்லை. ஆனால் வெற்றிமாறனே வெளியேறுவார் என்றும் சூர்யாவும்; சூர்யாவே வெளியேறுவார் என்று வெற்றிமாறனும் எதிர்பார்த்திருக்கிறார்கள். அதற்கு காரணம் அமீர்தான். அமீர் மீது சூர்யாவுக்கு ஆரம்பத்திலிருந்தே ஒரு வெறுப்பு. அதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.

அமீர் நிச்சயம் இருப்பார்: இந்த நிலையில் வாடிவாசல் படத்தில் அமீர் நிச்சயமாக நடிப்பார் என்று வெற்றிமாறன் அறிவித்துவிட்டார். அமீருடன் இணைந்து பணியாற்ற சூர்யாவுக்கு துளிக்கூட விருப்பமில்லை என்பதுதான் உண்மை. இன்னொன்று இந்தக் கதையை சிரஞ்சீவியின் மகனான ராம்சரணிடமும் வெற்றிமாறன் கூறியிருக்கிறார். ஆனால் ராம்சரணுக்கு அந்தக் கதையில் பெரிய உடன்பாடு இல்லை. ராம்சரணிடம் இந்தக் கதையை வெற்றிமாறன் சொன்னதாக ஒரு தகவல் சூர்யாவின் காதுகளுக்கு சென்றபோது அவர் ரொம்பவே வருத்தப்பட்டாராம்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X