Ajith - பெரும் கடன் தொல்லை.. உதவி கேட்ட ராஜ்கிரண்?.. உறவை துண்டித்த அஜித்?.. வெளியான சீக்ரெட்

அஜித்குஜ்மார் இப்போது விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார். அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அவர் நடிக்கவிருப்பதாகவும் ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது. விடாமுயற்சியை பொறுத்தவரை அஜர்பைஜானில் ஷூட்டிங் முடிந்துவிட்டது. தற்போது அடுத்தக்கட்ட ஷூட்டிங்கிற்காக வேறு லொக்கேஷன் தேடும் பணியில் படக்குழு ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்தச் சூழலில் அஜித் குறித்து பத்திரிகையாளர் அந்தணன் பேசியிருக்கும் விஷயம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கோலிவுட்டின் டாப் நடிகர்களில் ஒருவரான் அஜித் இதுவரை 61 படங்களில் நடித்திருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. அந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே தன்னுடைய 62ஆவது படத்தில் நடிக்க கமிட்டானார் அஜித். அதனை முதலில் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்து பிறகு மகிழ் திருமேனி உள்ளே வந்தார்.

Journalist Anthanan Reveals Unknown Side From Ajith

விடாமுயற்சி: அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த மே மாதம் படத்தின் பெயர் விடாமுயற்சி என அறிவிக்கப்பட்டது. அதற்கு பிறகு எந்த அப்டேட்டும் படத்திலிருந்து வரவில்லை. இருந்தாலும் படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜானில் ஜோராக நடந்து முடிந்தது. அனிருத் இசையமைக்கிறார். அஜர்பைஜானில் ஷூட்டிங் முடிந்து தற்போது அடுத்த லொக்கேஷன் தேடும் பணிகளில் படக்குழு ஈடுபட்டுள்ளது.

அந்தணன் வீடியோ: இந்நிலையில் பத்திரிகையாளர் அந்தணன் வீடியோ ஒன்றில் அஜித் குறித்து பேசியிருக்கிறார். அந்த வீடியோவில் பேசியிருக்கும் அவர், "மனோரமா இறப்புக்கு பிறகுதான் இனி துக்க நிகழ்வுகளுக்கு செல்ல வேண்டாம் என்ற முடிவை அஜித் எடுத்ததாக தெரிகிறது. ஏனெனில் மனோரமா இறப்புக்கு மூட்டில் அடிப்பட்டிருந்தபோதும் அஜித் சென்றிருந்தார். அப்போது அவரை பார்த்த ரசிகர்கள் ஆர்வக்கோளாறில் அங்கிருந்து அவரை செல்ல முடியாத இம்சையை கொடுத்துவிட்டார்கள்.

இன்னொரு உண்மை: அதனால்தான் அவர் பிரபலங்களின் இறப்புக்கு செல்வது கிடையாது. அஜித்தின் கேரக்டரை பற்றி இன்னொரு உண்மையை சொல்கிறேன். அதாவது கிரீடம் படத்தில் நடித்தபோது அஜித்துக்கும், ராஜ்கிரணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நெருங்கியே பழகினார்கள். ஏனெனில் ராஜ்கிரணின் குணம் அஜித்துக்கு ரொம்பவே பிடித்துவிட்டது. ஒருகட்டத்தில் அவரை அஜித்குமார் தன்னுடைய அப்பா போலவே பார்த்துக்கொண்டார். அந்த அளவுக்கு நெருக்கம்.

வீட்டுக்கும் செல்வார்: பொதுவாக மற்றவர்களின் வீடுகளுக்கு சென்று பழகுவதும் அஜித்குமாருக்கு பிடிக்காது. ஆனால் அவருக்கு மிகவும் நெருக்கமானவர்கள் என்றால் அவர்களது வீட்டுக்கு உரிமையோடு சென்று அவர்களோடு பேசியிருந்துவிட்டு வந்ருவார். அப்படித்தான் ராஜ்கிரணையும் வைத்திருந்தார். அவருக்கு ராஜ்கிரணை பார்க்க வேண்டும் என்றால் நேராக ராஜ்கிரணின் வீட்டுக்கோ இல்லை அவர் இருக்கும் படப்பிடிப்புக்கோ சென்றுவிடுவார் அஜித். அப்படித்தான் அவர்களது உறவு சென்றுகொண்டிருந்தது.

ராஜ்கிரணுக்கு கடன்: அப்படியான ஒரு சந்திப்பில் அஜித்திடம் ராஜ்கிரண் கோரிக்கை ஒன்றை வைத்தார். அதாவது ஒரு சமயத்தில் ராஜ்கிரண் கடன் தொல்லையில் இருந்தார். வட்டியும் கட்டிக்கொண்டிருந்தர். அப்போது அஜித் தனக்கு ஒரு படம் செய்துகொடுத்தால் அந்தக் கடனில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்று முடிவெடுத்தார். அதனையடுத்து அஜித்திடமும் , நீங்கள் எனக்கு ஒரு படம் செய்துகொடுக்க முடியுமா என்று கேட்டிருக்கிறார். அதனையடுத்து உடனடியாக ராஜ்கிரணுடனான தொடர்பை முற்றிலும் துண்டித்துவிட்டார். ஏனெனில் தன்னிடம் நெருக்கமாக இருப்பவர்கள் தன்னிடமிருந்து எதையும் எதிர்பார்க்கக்கூடாது என்று நினைப்பார் அவர்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X