மஞ்சு வாரியர் முக்கியம்.. உதவி இயக்குநர்கள் முக்கியமில்லையா?.. வெற்றிமாறனுக்கு அந்தணன் கேள்வி!

சென்னை: விடுதலை 2 படத்தின் ஷூட்டிங் ஏற்கனவே 4 ஆண்டுகளாக நடைபெற்று பட்ஜெட்டை தாண்டி எங்கேயோ போய் விட்டது என்கிற பதட்டத்துடனே ஆடியோ லாஞ்சுக்கு வெற்றிமாறன் வந்திருப்பார் போல அதனால் தான் அதிகமாக பேச முடியவில்லை என ஆரம்பத்திலேயே மொத்தமாக அனைவருக்கும் நன்றி சொன்னார். ஆனால், அதன் பின்னர், ஒவ்வொருத்தர் பெயரை சொல்லி நன்றி தெரிவித்து வந்த நிலையில், கடைசியில் அந்த இடத்தில் அவர் கடுப்பாகி மைக்கை போட்டு விட்டு போயிருக்க வேண்டிய அவசியமில்லை என அந்தணன் பேசியுள்ளார்.

சூரியை ஹீரோவாக வைத்து பாரதிராஜாவை வாத்தியார் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கலாம் என நினைத்திருந்த வெற்றிமாறனுக்கு விஜய் சேதுபதி உள்ளே வந்த உடனே அவரையும் ஒரு ஹீரோவாக்கி 2வது பாகமாக படத்தை நீட்டியிருக்கிறார்.

vetrimaaran anthanan viduthalai 2

2ம் பாகம் படங்கள் என்றாலே தொடர்ந்து சரியாக போகாத நிலை சமீப காலமாக உருவாகி வரும் நிலையில், விடுதலை 2 அந்த விஷயத்தை மாற்றும் என சினிமா வட்டாரத்தில் பலர் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

மஞ்சு வாரியரை மறந்த வெற்றிமாறன்: சூரியை காமெடியன் தானே நீ உன்னை ஹீரோவாக்கியதே வெற்றிமாறன் தான் என இளையராஜா பேசியது ஒரு பக்கம் பஞ்சாயத்தாக மாறிய நிலையில், வெற்றிமாறன் கடுப்பாகி போனது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இசை வெளியீட்டு விழாவிலேயே படத்தின் ஹீரோயின் மஞ்சு வாரியரை மறந்து விட்டாரே வெற்றிமாறன் என்று நினைத்த அவரது உதவியாளர்கள் ஓடோடி வந்து மஞ்சு வாரியர் பெயரை சொல்ல, புரமோஷனுக்கு வராத நிலையில், மஞ்சு வாரியரையே மறந்து விட்டோமே என்று சொன்ன வெற்றிமாறன் வெறும் 3 நாட்கள் தான் அவங்களையும் நடிக்க கூப்பிட்டேன். அதன் பின்னர், அவருடைய கதாபாத்திரமும் பெரிதாகி விட்டது என்றார். அசுரன் படத்தில் பணியாற்றிய மஞ்சு வாரியர் இந்த படத்திலும் அசத்தியுள்ளார் என்று பாராட்டினார்.

குடும்பத்தை மறக்கல: நிகழ்ச்சிக்கு வந்த தனது அம்மா, மனைவி உள்ளிட்ட குடும்பத்தினரை மறக்காமல் நினைவுகூர்ந்து மேடையில் வெற்றிமாறன் நன்றி தெரிவித்து பேசினார். மஞ்சு வாரியரை மறந்தாலும் உதவியாளர் காதில் வந்து சொன்னதுமே அவரைப் பற்றி பேசினார். அப்படியே உதவியாளர்கள் பெயர்களையும் சொல்லியிருந்தால் பிரச்சனையே கிடையாதே என்றும் அதை சொல்ல அவருக்கு என்ன தயக்கம் என்றும் உதவி இயக்குநர்களின் அதிக பட்ச ஆசையே இதுபோன்ற நிகழ்ச்சிகளில் இயக்குநர் தங்களை பெயர் சொல்லி பாராட்டுவார்கள் என்பது தானே என அந்தணன் வெற்றிமாறனின் செயலை கண்டித்து பேசியுள்ளார்.

விஜய் சேதுபதி சரியல்ல: நடிகர் விஜய் சேதுபதி ரசிகர்களை பார்த்து டேய் என்று பேசுவதெல்லாம் சரி கிடையாது என்றும் ரொம்ப திமிராக மாறிவருகிறார். பதிலுக்கு ரசிகர்களும் விஜய் சேதுபதியை பார்த்து டேய்ன்னு சொன்னா சும்மா இருப்பாரா என்றும் விடுதலை 2 இசை வெளியீட்டு விழாவே ஒரு சர்ச்சை விழாவாக மாறிவிட்டது என அந்தணன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசியுள்ளார்.

விடுதலை 2 வெற்றி பெறுமா?: விடுதலை 2 முதல் பாகத்திற்கு பாராட்டுக்கள் கிடைத்தாலும், பாக்ஸ் ஆபிஸில் பெரிய கலெக்‌ஷன் இல்லை. பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள விடுதலை 2 படம் கல்லா கட்டுமா என்பது டிசம்பர் 20ம் தேதி படம் வெளியானால் தான் தெரியும் என்கின்றனர். இளையராஜாவின் இசை, வெற்றி மாறனின் இயக்கம் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர், பவானி ஸ்ரீ, சேத்தன், ராஜீவ் மேனன், கெளதம் மேனனின் நடிப்பு என படம் சிறப்பாகவே இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X