ஒருவரையும் விடமாட்டார் ஜெயம் ரவி மனைவி.. சண்டைக்கு காரணம் இதானாம்.. பிரபலம் இப்படி சொல்றாரே?

சென்னை: கோலிவுட்டில் கடந்த சில நாட்களாகவே ஹாட் டாபிக்காக ஓடிக்கொண்டிருப்பது ஜெயம் ரவி - ஆர்த்தி விவகாரம்தான். இருவருக்கும் சமீபமாக பிரச்னை ஓடிக்கொண்டிருக்கிறது. எனவே இருவரும் விரைவில் விவாகரத்து செய்யவிருக்கிறார்கள் தொடர்ந்து பேசப்படுகிறது. ஆனால் இருவரும் அமைதியாக இருக்கிறார்கள். சூழல் இப்படி இருக்க இந்த விவகாரம் குறித்து பிரபல சினிமா பத்திரிகையாளர் அந்தணன் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருக்கிறார்.

தமிழ் சினிமாவில் எந்த கிசுகிசுவிலும் சிக்காமல் இருந்தவர் ஜெயம் ரவி. தான் உண்டு, தனது குடும்பம் உண்டு, வேலை உண்டு என்று இருப்பவர். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான சைரன் திரைப்படம் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது. அவரது மாமியார் தயாரித்திருந்த அந்தப் படம் முதலுக்கு மோசமில்லை என்ற நிலையில் கடந்து சென்றது. பெரிய ஹிட் இல்லாவிட்டாலும்; நஷ்டம் எதுவும் இல்லை என்ற நிம்மதியோடு இருந்தார்கள் ஜெயம் ரவியும், அவரது மாமியாரும்.

Jayam Ravi Aarthi Anthanan

ஆர்த்தியுடன் சண்டை?: சூழல் இப்படி இருக்க கடந்த சில நாட்களாகவே ஒரு பிரச்னை பேசப்படுகிறது. அதாவது ஜெயம் ரவிக்கும் அவரது மனைவி ஆர்த்திக்கும் வாக்குவாதமாக ஆரம்பித்த மனஸ்தாபம் இப்போதும் பெரும் சண்டையில் வந்து நிற்கிறது என்றும்; கூடிய சீக்கிரமே இரண்டு பேரும் விவாகரத்து முடிவை அறிவிக்கவிருக்கிறார்கள் என்று தகவல் வெளியாகி ரசிகர்களை ஷாக் ஆக்கியது. ஆனால் சம்பந்தப்பட்ட இரண்டு பேருமே இதுவரை அமைதியாகத்தான் இருக்கிறார்கள்.

என்ன காரணம்: ஆனால் இருவருக்குமான சண்டைக்கு இதுதான் காரணம் என பல யூகங்கள் பலரால் கிளப்பிவிடப்படுகின்றன. அதன்படி, அடுத்த படத்துக்கு தனது மாமியாரிடம் 25 கோடி ரூபாய் சம்பளமாக ஜெயம் ரவி கேட்டதாகவும்; ஆனால் அதற்கு சுஜாதா (ரவியின் மாமியார்) ஒத்துக்கொள்ளவில்லை; அதனால் சண்டை என ஒருதரப்பினரும்; சுஜாதா ஒரு மகனை வளர்த்துவருகிறார். அவருக்கும் ரவிக்கும் ஆரம்பித்த ஈகோ பிரச்னை இப்போது ரவி - ஆர்த்தி சண்டையாக மாறியிருக்கிறது என்று ஒருதரப்பினரும் தொடர்ந்து கூறுகிறார்கள்.

அந்தணன் ஷேரிங்ஸ்: இந்நிலையில் சினிமா பத்திரிகையாளர் அந்தணன் இந்த விஷயம் குறித்து தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், "ஜெயம் ரவிக்கும் ஆர்த்திக்கும் இடையேயான பிரச்னையில் ஜெயம் ரவி சம்பளம் கேட்டதுதான் முக்கிய காரணம் என்பதெல்லாம் இரண்டாவதுதான். அங்கிருந்து அவர் வெளியே வருவதற்குத்தான் 25 கோடி ரூபாயை சம்பளமாக கேட்டார் ரவி. உண்மையில் ஜெயம் ரவி மீது அவரது மனைவி ஆர்த்திக்கு எப்போதுமே சந்தேகம் வரும்.

எல்லோருக்கும் ஃபோன்: ஜெயம் ரவிக்கு ஆர்த்தி அடிக்கடி ஃபோன் செய்வார். அவர் எடுக்கவில்லை என்றால் ரவி ஷூட்டிங்கில் இருக்கும் இயக்குநர், கேமராமேன், துணை இயக்குநர் என ஒரு ஆளைக்கூட விட்டு வைப்பதில்லை. எல்லோருக்கும் ஃபோன் போட்டு ரவியை பற்றி கேட்டுக்கொண்டிருப்பார். யாரும் எடுக்கவில்லை என்றால் உடனே ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு கிளம்பிவிடுவார். இப்படித்தான் அவரது மனைவி போய்விட்டார். அதேபோல் அவுட்டோர் ஷூட்டிங் என்றாலும் திடீரென ஷூட்டிங் ஸ்பாட்டில் வந்து நிற்பார். ஜெயம் ரவியை வேவு பார்ப்பது போல் இருந்தது. அதை ஜெயம் ரவியால் ஒருகட்டத்தில் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதனால்தான் இந்தப் பிரச்னையே ஆரம்பித்தது" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X