கூலி.. மயக்க நிலைக்கு சென்ற சூப்பர் ஸ்டார்.. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு பறந்த ஹெலிகாப்டர்.. என்ன நடந்தது?

சென்னை: ரஜினிகாந்த் கடைசியாக கெஸ்ட் ரோல் ஏற்று லால் சலாம் படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் படுதோல்வியை சந்தித்து ரஜினியின் ரசிகர்களை சோகத்தில் தள்ளியது. இப்போது அவர் வேட்டையன் படத்தில் நடித்திருக்கிறார். அக்டோபர் மாதம் படம் ரிலீஸாகவிருக்கிறது. இதனையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடிக்கவிருக்கிறார். படத்தின் டைட்டில் டீசர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

வேட்டையன் படத்தை முடித்துவிட்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த். சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. படத்தின் டைட்டில் டீசர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி பிரமாண்ட வரவேற்பை பெற்றது. கண்டிப்பாக இந்தப் படம் ரஜினியின் கரியரில் பெஸ்ட்டாக அமையும் என்று அவரது ரசிகர்கள் கூறுகின்றனர். கூலி என்ற பெயரில் தமிழில் சரத்குமாரும், ஹிந்தியில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனும் ஏற்கனவே படத்தில் நடித்திருக்கின்றனர்.

Journalist Anthanan Shares Unknown Details about Amitabh s Coolie Movie Shooting

அந்தணன் பேட்டி: இந்தச் சூழலில் அமிதாப் பச்சன் நடித்த கூலி படத்தில் நடந்த சம்பவம் குறித்து பத்திரிகையாளர் அந்தணன் வீடியோ ஒன்றில் பேசியிருக்கிறார். அவர் பேசுகையில், “தமிழில் வெளியான கூலி திரைப்படத்தை பொறுத்தவரை சரத்குமார் ஹீரோவாக நடித்திருந்தார். அந்தப் படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அமிதாப் பச்சன் கூலி என்கிற பெயரில் ஹிந்தியில் நடித்திருந்தார். அந்தப் படத்தின் ஷூட்டிங்கில் அவர் மிகப்பெரிய விபத்து ஒன்றை சந்தித்தார்.

என்ன நடந்தது?: படத்தின் ஷூட்டிங் கர்நாடகாவில் நடந்துகொண்டிருந்தது. ஒரு சண்டைக்காட்சி படமாக்கப்பட்டது. அப்போது ஃபைட் மாஸ்டர் அமிதாப் பச்சனை எட்டி உதைக்க வேண்டும். அமிதாப் அருகில் இருக்கக்கூடிய நாற்காலியில் விழ வேண்டும். டேக் சென்றுகொண்டிருந்தபோது அமிதாப் பச்சனை ஃபைட் மாஸ்டர் கொஞ்சம் ஓங்கி மிதித்துவிட்டார். அமிதாப் நேராக சென்று அந்த சேரில் விழுந்தார். ஆனால் அந்த சேரின் ஏதோ ஒரு இடம் கூர்மையாக இருந்திருக்கிறது. அந்த கூர்மையான பகுதி அமிதாப்பின் விலா எலும்பில் குத்திவிட்டது.

மயக்க நிலையில் அமிதாப்: அதன் காரணமாக அமிதாப் பச்சன் மயக்க நிலைக்கு சென்றுவிட்டார். மொத்த படக்குழுவும் அதிர்ச்சியாகிவிட்டது. அப்போது பெரிய அளவிலான மருத்துவ வசதிகள் இருந்தாலும் போக்குவரத்து வசதி உடனடியாக இல்லை. உடனே விஷயத்தை கேள்விப்பட்ட கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் தனியாக ஒரு ஹெலிகாப்டரை ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு அனுப்பி வைத்து அமிதாப்பை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வைத்தார்.

ஒருமாதம் சிகிச்சை: இந்த விபத்தால் மும்பையில் கிட்டத்தட்ட ஒரு மாதம் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பின்னர் அவர் மீண்டும் ஷூட்டிங்கில் கலந்துகொண்டார். படம் மிகப்பெரிய ஹிட்டடித்தது. சினிமாவைப் பொறுத்தவரை டைட்டில் ரொம்ப ரொம்ப முக்கியமானதாக, சென்ட்டிமென்ட் நிறைந்ததாக பார்க்கப்படும். ஏற்கனவே இந்த டைட்டிலில் வந்த படங்களில் நெகட்டிவ்வான விஷயங்கள் அரங்கேறி இருக்கும். எனவே இந்தப் படப்பிடிப்பு சம்பந்தமான வேலைகளை படக்குழு கவனமாக கையாள வேண்டும். லோகேஷை பொறுத்தவரை, சரத்குமார் நடிப்பில் வெளியான கூலி படம் வெற்றி பெறவில்லை. அதனால் இந்தப் படத்தை வெற்றி பெற வைக்க வேண்டும் என்று உழைப்பார்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X