இப்தார் நோன்பை இழிவுப்படுத்திய விஜய்?.. அவர்கள் எல்லாம் போதையில் இருந்தார்களாம்.. விளாசிய பிரபலம்
சென்னை: விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கியிருக்கிறார். கட்சி தொடங்கியதிலிருந்து அரசியல் களத்தில் பிஸியாக இருக்கும் அவர் ஒருபக்கம் ஜன நாயகன் படத்தின் ஷூட்டிங்கிலும் படு பிஸியாக இருக்கிறார். இந்தப் படம்தான் அவரது கடைசி படம் என்று சொல்லப்படுகிறது. சூழல் இப்படி இருக்க சமீபத்தில் இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் அவர். இந்நிலையில் அவரை பிரபல பத்திரிகையாளர் அந்தணன் கடுமையாக விமர்சனம் செய்து பேசியிருப்பது விஜய்யின் ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
தமிழ்நாடு அரசியல் களத்தில் விஜய்யின் தலைமையில் தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சி புதிதாக முளைத்திருக்கிறது. கடந்த சில வருடங்களாகவே விஜய் அரசியலுக்கு வருவார் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. அதன்படியே கடந்த வருடம் பிப்ரவரி மாதம் கட்சியை தொடங்கினார் விஜய். கட்சி ஆரம்பித்ததிலிருந்து தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசை கடுமையாகவும்; மத்தியில் ஆளும் பாஜக அரசை மென்மையாகவும் விமர்சித்துவருவதாக பலரும் கூறிவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷூட்டிங்கில் பிஸி: அரசியல் களத்தில் பிஸியாக இருக்கும் விஜய் மறுபக்கம் ஜன நாயகன் படத்தின் ஷூட்டிங்கிலும் பிஸியாக இருக்கிறார். அந்தப் படத்தை ஹெச்.வினோத் இயக்க; பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு உள்ளிட்ட பலர் நடித்துவருகிறார்கள். அனிருத் இசையமைப்பில் கேவிஎன் நிறுவனம் படத்தை தயாரித்துவருகிறது. படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. விரைவில் ஷூட்டிங்கை முடித்து இந்த வருடத்துக்குள் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
திமுக Vs தவெக: இதற்கிடையே கட்சியின் முதல் மாநாட்டில் தொடங்கி; கடைசியாக விஜய் தெரிவித்த மகளிர் தின வாழ்த்துவரை திமுகவை கடுமையாக விமர்சனம் செய்துவருகிறார். இதனைப் பார்த்த திமுகவினரோ, பாஜகவின் கைகூலிதான் தமிழக வெற்றிக் கழகம்; அதன்காரணமாகத்தான் அவர் தங்களை தொடர்ந்து அட்டாக் செய்துவருகிறார் என்று கூறுகிறார்கள். ஆனால் விஜய்யின் தொண்டர்களோ, அதெல்லாம் இல்லை; தங்கள் தலைவர் ஆளும் அரசின் குறைபாடுகளைத்தான் சுட்டிக் காண்பிக்கிறார். அதனை திமுகவினரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதனால்தான் தவெகவை பாஜகவின் கைகூலி என்று சொல்வதாக பதிலடி கொடுத்துவருகிறார்கள்.
இப்தார் நோன்பில் விஜய்: சூழல் இப்படி இருக்க விஜய் சமீபத்தில் சென்னையில் நடந்த இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதனைப் பார்த்த திமுகவினர் கடுமையாக விமர்சனம் செய்ய ஆரம்பித்தார்கள். அதாவது, துப்பாக்கி, பீஸ்ட் போன்ற படங்களில் இஸ்லாமியர்களை வில்லன்களாக சித்தரித்துவிட்டு; அரசியல் என்று வந்தவுடன் போலி உணர்வுடன் இப்தார் நோன்பில் பங்கேற்றிருக்கிறார் என்று ஓபனாகவே பேசினார்கள். இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் வலைப்பேச்சு அந்தணன் விஜய் குறித்து ஒரு வீடியோவில் சரமாரியாக பேசியிருக்கிறார்.

அந்தணன் பேச்சு: அவர் பேசிய அந்த வீடியோவில், "விஜய் பங்கேற்ற இப்தார் நோன்பு நிகழ்ச்சி போல் வேறு எந்த இப்தார் நோன்பு நிகழ்ச்சியையும் நான் பார்த்ததில்லை. எத்தனையோ தலைவர்கள் இப்தார் நோன்பு திறந்திருக்கிறார்கள். எங்கேயும் தங்களுடைய கண்ணியத்தை அவர்கள் இழந்ததே இல்லை. ஆனால் விஜய் இந்த இப்தார் நோன்புக்கு வந்தார். வரும்போதே தேர்தல் பரப்புரைக்கு வேனில் வருவது போன்று கையை ஆட்டிக்கொண்டே வந்தார். தொப்பி வேறு அணிந்திருந்தார்.
தொண்டர்கள் போதையில்: அதுமட்டுமின்றி தலைவா என்று இஸ்லாமியர் அல்லாதவர்கள் எல்லாம் கூச்சலிட்டார்கள். மசூதிக்குள்ளும் அவர்கள் புகுந்துவிட்டார்கள். சிலர் குடித்துவிட்டு வேறு வந்ததாக சொல்கிறார்கள். காலை முதல் மாலைவரை எச்சில்கூட விழுங்காமல் நோன்பு இருக்கும்போது இப்படி சம்பந்தமில்லாதவர்கள் நுழைந்து அந்த இடத்தின் புனிதத்தன்மையையே மாசுபடுத்தியதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்" என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.


Click it and Unblock the Notifications











