வைரமுத்துவை திட்ட கங்கை அமரனுக்கு யோக்கியம் இருக்கா?.. பிரபலம் இந்த கிழி கிழிக்கிறாரே ப்பா
சென்னை: தமிழ் சினிமாவின் மூத்த கலைஞர்களில் ஒருவர் கங்கை அமரன். கரகாட்டக்காரன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியிருக்கும் அவர் ஏகப்பட்ட படங்களுக்கு இசையமைக்கவும் செய்திருக்கிறார்; பாடல்களும் எழுதியிருக்கிறார். மேலும் சில படங்களில் தலை காட்டவும் செய்திருக்கிறார். இப்போது சினிமாவிலிருந்து ஒதுங்கியிருக்கும் அவர் சமீபத்தில் தனியார் யூடியூப் சேனலில் பேசுகையில் வைரமுத்துவை தாக்கி பேசியிருந்தார்.
இசைஞானி இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன். ராஜாவுடன் சேர்ந்து திரைத்துறைக்குள் வந்த அவர் பிறகு படங்கள் இயக்க தொடங்கினார். அதன்படி அவர் இயக்கிய கரகாட்டக்காரன் திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அதில் இடம்பெற்ற காட்சிகளும், பாடல்களும் இன்றுவரை உயிரோட்டமாகவே இருக்கின்றன. இயக்குநராக மட்டுமின்றி பாடலாசிரியர், இசையமைப்பாளர், நடிகர் என பன்முகங்களை கொண்டிருப்பவர் அவர்.
மகன்களும் பிரபலம்: அவருக்கு மொத்தம் இரண்டு மகன்கள். அவர்களில் மூத்த மகன் வெங்கட் பிரபு இயக்குநராக வெற்றியடைந்திருக்கிறார். பிரேம்ஜி அமரனும் நடிகர், இசையமைப்பாளர் என தனது பாதையில் வெற்றிகரமாக சென்றுகொண்டிருக்கிறார். பிரேம்ஜிக்கு கடந்த வருடம்தான் திருமணம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வெங்கட்டின் படங்களுக்கு அவ்வப்போது கங்கை அமரன் பாடல்களும் எழுதுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசியலில் கங்கை: வயோதிகம் காரணமாக இப்போது அவர் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருக்கிறார். அதேசமயம் அரசியலில் பிஸியாக இருக்கிறார். பாஜகவில் ஐக்கியமாகியிருக்கும் அவர்; எப்படியோ தனது சகோதரர் இளையராஜாவையும் அந்தக் கட்சிக்குள் கொண்டுவந்துவிட்டார். இதற்கிடையே அவ்வப்போது ராஜாவுடன் கங்கை அமரனுக்கு மோதல்களும் எழுந்த வரலாறு உண்டு. இந்நிலையில் சமீபத்தில் தனியார் யூடியூப் சேனல் நடத்திய சின்மயி ஃபேன்ஸ் மீட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் அமரன்.

வைரமுத்து மீது தாக்குதல்: அந்த நிகழ்ச்சியில் சின்மயி - வைரமுத்து விவாகரம் குறித்து பேசிய அவர், "வைரமுத்து மிகச்சிறந்த கவிஞர் என்பதை நான் ஒத்துக்கொள்கிறேன். ஆனால் அவர் நல்ல மனிதர் இல்லை. நாங்கள் எல்லாம் நண்பர்கள்தான். அவர் நண்பராக இருந்தார் என்பதால் அவர் செய்த தவறை நான் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியுமோ. ஒரு பெண்ணாக தனக்கு நடந்த பிரச்னைகளை பேசும் சின்மயிக்கு ஆதரவு கொடுக்க வேண்டும்" என்றார். மேலும் கிண்டல் செய்யும் தொனியில் அவர் சின்மயியிடம், 'வைரமுத்து எவ்வளவு நல்லவர். அவரை போய் நீங்கள் இப்படி சொல்லலாமா' என்றும் பேசினார்.
வெளுத்த அந்தணன்: அவரது இந்தப் பேச்சு புதிய விவாதத்தை கிளப்பியிருக்கிறது. இவர் ஏன் சம்பந்தமே இல்லாமல் இந்த விவகாரத்துக்குள் வருகிறார் என்றெல்லாம் பலர் கேள்வி எழுப்புகிறார்கள். அந்தவகையில் பிரபல பத்திரிகையாளரான அந்தணன் வெளியிட்டிருக்கும் வீடியோவில், "சின்மயி தனக்கு நடந்த கொடுமைகளை பற்றி பேசுவதற்கு அத்தனை உரிமையும் இருக்கிறது. அதேசமயம் அவர் இந்தப் பிரச்னைக்கு ஒரு தீர்வை கண்டுபிடிக்க வேண்டும். நீதிமன்றம் சென்று இந்த விஷயத்தை முடிக்க வேண்டும்.
கங்கை அமரன் யோக்கியமா?: ஆனால் அந்த நிகழ்ச்சியில் சம்பந்தமே இல்லாமல் கங்கை அமரன் வந்து வைரமுத்துவை திட்டிக்கொண்டிருக்கிறார். முதலில் அவர் வைரமுத்துவை திட்டுவதற்கு முன்பு யோசிக்க வேண்டும். அவர்கள் எல்லாம் பெரிய யோக்கியவான்களா என்ன?. அந்த செட்டில் யாரெல்லாம் என்ன செய்தார்கள் என்பது இப்போதுவரை திரைத்துறையில் பலருக்கும் தெரியும். பிரபல கவிஞரின் மகள் வாழ்க்கை சின்னாபின்னமானது யாரால் என்பது கங்கை அமரனுக்கு தெரியும். இப்படி போற வரவங்களை அழைத்து வந்து வைரமுத்துவை திட்ட வைப்பதற்கு பதிலாக; இந்த விஷயத்தில் சின்மயி தீர்வு கண்டால்தான் நன்றாக இருக்கும்" என்றார்.


Click it and Unblock the Notifications











