பெரிய மன்னர் பரம்பரையா?.. ஜிபி முத்துவைவிட உங்களுக்கு கம்மிதான்.. நயன்தாராவை விளாசிய பிரபலம்

சென்னை: லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு உயிர், உலக் என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். திருமணமான பிறகும் தொடர்ந்து நடித்துவரும் அவர்; அடுத்ததாக ராக்காயி என்ற படத்தில் நடித்துவருகிறார். சூழல் இப்படி இருக்க சில நாட்களுக்கு முன்பு அவர் அளித்த ஒரு பேட்டியில் வலைப்பேச்சு டீமை பற்றி கடுமையாக விமர்சனம் செய்து பேசியிருந்தார்.

நயன்தாராவுக்கு என்று தமிழ்நாடு முழுவதும் ஏகப்பட்ட பேர் ரசிகர்களாக இருக்கிறார்கள். நடிப்பு, கிளாமர் என அனைத்திலும் சக்கைப்போடு போடும் அவரை ரசிகர்கள் லேடி சூப்பர் ஸ்டார் என்றும் அழைக்கிறார்கள். இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து லிவிங் டூ கெதரில் இருந்துவிட்டு சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு உயிர், உலக் என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். அவர்களை வாடகை தாய் மூலம் பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

nayanthara anthanan valaipechu

நடிப்பில் பிஸி: திருமணமான பிறகு பொதுவாக நடிப்பிலிருந்து நடிகைகள் ஒதுங்குவதுதான் வழக்கம். ஆனால் நயன் தொடர்ந்து நடித்துவருகிறார். அப்படி அவர் ஹிந்தியில் நடித்த ஜவான் திரைப்படம் மெகா ஹிட்டானது. தமிழில் அவர் நடித்த அன்னபூரணி திரைப்படம் சுமாரான வரவேற்பையே பெற்றது. அடுத்ததாக அவர் மண்ணாங்கட்டி, ராக்காயி ஆகிய படங்களில் கமிட்டாகியிருக்கிறார். மேலும் மலையாளம், கன்னட மொழியிலும் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார்.

சர்ச்சைகள்: நயன் என்றாலே சர்ச்சைகள் என்று இன்னொரு அர்த்தம் உண்டு. ஆனால் திருமணத்துக்கு பிறகு பெரிதாக எந்த சர்ச்சையிலும் அவர் சிக்கவில்லை. ஆனால் தன்னை பற்றிய ஆவணப் படம் ரிலீஸின்போது மீண்டும் சர்ச்சை வளையத்துக்குள் வந்தார் அவர். நானும் ரௌடிதான் படத்தின் ஃபுட்டேஜையும், சில பாடல் வரிகளையும் பயன்படுத்துவதற்கு தனுஷிடம் அனுமதி கேட்க; அதற்கு அவர் மறுத்துவிட்டார். பிறகு அந்தப் பிரச்னை வளர்ந்து வளர்ந்து தற்போது நீதிமன்றத்தில் வழக்காக இருக்கிறது.

நயன் பேட்டி: அந்த சர்ச்சை முடிந்த சூழலில் இப்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் அவர். அதாவது சமீபத்தில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், ''தன்னை பற்றி மூன்று குரங்குகள் (வலைப்பேச்சு டீம்) பேசி பேசியே சம்பாதித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கெட்டதை மட்டும் பார்ப்பார்கள், கேட்பார்கள், பேசுவார்கள்'' என்று தெரிவித்தார். அது மிகப்பெரிய பேசுபொருளாகிவிட்டது. நயனின் இந்தப் பேச்சுக்கு வலைப்பேச்சு டீமும் பதிலடி கொடுத்தது.

அந்தணன் பேட்டி: இந்நிலையில் வலைப்பேச்சு அந்தணன் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ""நயன்தாரா முதலில் ஃப்ளாப்பான ஹீரோயின் என்பதை ஒத்துக்கொள்ள வேண்டும். ஜிபி முத்து சம்பந்தமான வீடியோ போட்டால் வரும் வியூஸைவிடவும் நயன் பெயரை வைத்து வீடியோ போட்டால் வரும் வியூஸ் கம்மிதான். ஏன் அவர் ஆங்கில ஊடகத்துக்கு ஒரு பேட்டி அளித்தாரே. அந்தப் பேட்டிக்கூட வெறும் மூன்று லட்சம் வியூஸ்தான் போயிருக்கிறது.

மன்னர் பரம்பரையா?: தான் ஒரு மன்னர் பரம்பரை. தனது நாற்காலியை யாரும் அசைத்துக்கூட பார்க்க முடியாது என்று அவர் நினைத்துக்கொண்டிருக்கிறார். ஆனால் அதெல்லாம் ஒன்றுமே இல்லை. தரம் தாழ்ந்து அவர் எங்களை பேசியிருக்கிறார். இத்தனைக்கு எங்களுக்கும் அவருக்கும் எந்தவிதமான தனிப்பட்ட பிரச்னையும் இல்லை. எங்கள் வேலை என்னவென்றால் இங்கே என்ன தவறுகள் நடக்கிறதோ அதை சுட்டிக்காட்டுவதுதான். அவர் ஒவ்வொரு படத்துக்கும் போடும் அக்ரீமெண்ட்டில் தனது பெயருக்கு முன்னால் லேடி சூப்பர் ஸ்டார் என்று போட வேண்டும் என்று கண்டிஷனும் போடுகிறார்"" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X