பா. ரஞ்சித் ஷூட்டிங்கில் ஸ்டண்ட் கலைஞர் மரணம்.. விபத்தில்லை கொலையாம்.. பிரபலம் இப்படி சொல்லிட்டாரே

சென்னை: தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான பா.ரஞ்சித் இப்போது வேட்டுவம் படத்தை இயக்கிவருகிறார். இப்படத்தில் அட்டகத்தி தினேஷ், கலையரசன் உள்ளிட்டோர் நடித்துவருகிறார்கள். படத்தின் ஷூட்டிங் மும்முரமாக நடந்துவரும் நிலையில்; சண்டை கலைஞர் மோகன் ராஜ் பரிதாபமாக விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு திரைத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராக இருந்து அட்டகத்தி படத்தில் இயக்குநராக அறிமுகமானர் பா. ரஞ்சித். முதல் படத்திலேயே பெரிய பெயரை பெற்ற அவர்; அடுத்ததாக கார்த்தியை வைத்து மெட்ராஸ் படத்தை இயக்கினார். இப்படமும் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. தொடர்ந்து அவர் இயக்கிய படங்கள் வெற்றியை பெற்றன. அதேபோல் சமூகத்தில் ஆரோக்கியமான விவாதத்தையும் கிளப்பக்கூடியவை.

ரஞ்சித்தின் அடுத்த படம்: கடைசியாக விக்ரமை வைத்து தங்கலான் படத்தை இயக்கிய ரஞ்சித் இப்போது வேட்டுவம் படத்தை இயக்கிவருகிறார். இதில் அட்டகத்தி தினேஷ், கலையரசன் உள்ளிட்டோர் நடித்துவருகிறார்கள். இந்தப் படம் எந்த மாதிரியான ஜானரில் உருவாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. மேலும் ரஞ்சித் இந்தப் படத்தையும் கண்டிப்பாக ஒரு ஹிட் படமாகத்தான் கொடுப்பார் எனவும் ரசிகர்கள் ஆவலோடு இருக்கிறார்கள்.

Journalist Anthanan Slams Pa Ranjith for Stunt Master Mohan Raj Death in Vettuvam Shooting Spot

விபத்தில் மரணம்: இந்தப் படத்தின் ஷூட்டிங் மும்முரமாக நடந்துவருகிறது. அதில் சமீபத்தில் ச்ண்டை காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. கார் சேசிங் சீன் ஷூட் செய்தபோது சண்டை பயிற்சியாளர் மோகன் ராஜ் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அதுதொடர்பான வீடியோக்கள் வெளியாகி பெரிய அதிர்ச்சியை உண்டாக்கியது. படக்குழுவின் அலட்சியம்தான் இந்த விபத்துக்கு காரணம் என்று ஒருதரப்பினர் கடுமையான கண்டனங்களை முன்வைத்துவருகிறார்கள்.

ரஞ்சித்தின் ட்வீட்: இந்த விவகாரம் குறித்து பா.ரஞ்சித் தனது எக்ஸ் பக்கத்தில் இரங்கலோடு கூடிய விளக்கத்தில், "நாங்கள் அனைத்துவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்திருந்தாலும் மோகன் ராஜை இழந்திருக்கிறோம். அனைவரும் பெருமைப்பட்ட மனிதர் இப்போது இல்லை. மோகன் ராஜின் இழப்புக்கு நாங்கள் இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். அவர் என்றும் நினைவில் நிலைத்திருப்பார்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அந்தணன் பேட்டி: இந்நிலையில் இந்த விஷயம் குறித்து பிரபல பத்திரிகையாளரான அந்தணன் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "மோகன் ராஜ் தொடர்பான வீடியோவை பார்த்ததும் இது விபத்தில்லை கொலை வழக்காக பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்று நினைக்கும் அளவுக்கு எனக்கு கோபம் வந்தது. ஏனெனில் ஒரே தவறை திரும்ப திரும்ப செய்துகொண்டிருக்கிறார்கள். இந்தியன் 2விலும் இப்படித்தான் ஒரு விபத்து நடந்தது.

சங்கம் கேட்டிருக்க வேண்டும்: வேட்டுவம் படத்தில் ஸ்டண்ட் காட்சிகளை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள் என்று ஃபெப்சிக்கு தெரிந்திருக்கும். உடனே அந்த சங்கத்தின் தலைவர் படக்குழுவை கூப்பிட்டு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்திருக்கிறீர்களா என்று கேட்டிருக்க வேண்டும். சண்டை காட்சிகளை மெத்தனமாக எடுக்கும்போது அதே தவறைத்தானே செய்கிறார்கள். அந்த வீடியோவை பார்க்கும்போதெல்லாம் பகீர் என்றிருக்கிறது. ஒரு ஆளை உயிரோடு உள்ளே உட்கார வைத்து இந்த மாதிரி காட்சிகளை எடுக்க வேண்டாமே. அதையெல்லாம் நினைக்கும்போது வருத்தமாக இருக்கிறது. இப்போதுதான் அவ்வளவு தொழில்நுட்பம் வந்துவிட்டது. அதை வைத்து படமாக்கியிருக்கலாம்" என்றார். அந்தணனின் இந்தப் பேட்டி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.

More from Filmibeat

Read more about: pa ranjith
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X