நித்தியானந்தா பேச்சை தனுஷ் கேட்டிருப்பார்..ரவி மோகன் - ஆர்த்தி விஷயத்தில் சுசித்ராவை வெளுத்த பிரபலம்
சென்னை: ரவி மோகன் - ஆர்த்தி விவகாரம் பூதாகரமாக மாறியிருக்கிறது. தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் திருமணத்துக்கு கெனிஷாவுடன் ரவி வந்ததை அடுத்து முதலில் ஆர்த்தி பிறகு ரவி அவரைத் தொடர்ந்து ஆர்த்தியின் தாய் சுஜாதா, மீண்டும் ஆர்த்தி என அறிக்கை போர் நடந்தது. இந்தச் சூழலில் இன்று நீதிமன்றத்தில் ஆர்த்தியும், ரவியும் ஆஜரானார்கள். அப்போது தனக்கு ஜீவனாம்சமாக மாதம் 40 லட்சம் ரூபாய் வேண்டும் என்று ஆர்த்தி தரப்பு கோரிக்கையை முன்வைத்தது. இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் அந்தணன் ரவி - ஆர்த்தி விஷயம் குறித்து பேசியிருக்கிறார்.
தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் திருமணத்துக்கு கெனிஷாவுடன் ரவி வந்ததை அடுத்து ஆர்த்தி ஒரு அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில் தனது தரப்பு நியாயங்களையும், மகன்கள் குறித்தும் எமோஷனலாக பேசியிருந்தார். அதனைப் படித்து பார்த்த பலரும் ஆர்த்தியின் பக்கம் நிற்க ஆரம்பித்தார்கள். முன்னதாக இந்தப் பிரச்னை ஆரம்பித்தபோது பலரும் அவருக்கு எதிராக இருந்தார்கள் என்பது நினைவுகூரத்தக்கது. ஆர்த்திக்கு ஆதரவு அலை பெருகும் என்று ரவியும் எதிர்பார்க்கவில்லை.
ரவியின் அறிக்கை: ஆர்த்தியைத் தொடர்ந்து அறிக்கை வெளியிட்டிருந்த ரவி மோகன்,'தன்னை அவர்களது குடும்பம் ஒரு பொன்முட்டையிடும் வாத்தாகத்தான் பார்த்தது. கடன்களுக்கு பொறுப்பேற்க வைக்கப்பட்டேன். தந்தை, தாய்க்கு பணம் அனுப்பக்கூடவிடவில்லை. கெனிஷாதான் எனது வாழ்க்கையில் வந்த ஒளி. இதுவரை நான் முதுகில் குத்தப்பட்டேன். இப்போது நெஞ்சில் குத்தப்படுகிறேன்' என்று பேசியிருந்தார். தொடர்ந்து சுஜாதாவும், ஆர்த்தியும் மீண்டும் அறிக்கை வெளியிட்டார்கள்.

நீதிமன்றத்தில் ஆஜர்: சூழல் இப்படி இருக்க ரவிக்கும் ஆர்த்திக்கும் இடையே மத்தியஸ்த பேச்சுவார்த்தை முடிவடைந்ததை அடுத்து இன்று அவர்கள் இரண்டு பேரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்கள். அப்போது தன்னுடைய மகன்களுக்காக மாதம் 40 லட்சம் ரூபாய் ரவி மோகன் ஜீவனாம்சமாக வழங்க வேண்டும் என்று ஆர்த்தி கோரிக்கை வைத்தார். இதுகுறித்து ரவி மோகன் பதிலளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு வழக்கு விசாரணையை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது நீதிமன்றம்.
அந்தணன் என்ட்ரி: இதற்கிடையே ரவி - ஆர்த்தி விவகாரத்தில் தனுஷை கோர்த்துவிட்டார் பின்னணி பாடகி சுசித்ரா. அதாவது தனுஷும், ஆர்த்தியும் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை பகிர்ந்து வரம்பு மீறி பேசியிருந்தார். அதுமட்டுமின்றி ரவிக்கு அவர் முழு சப்போர்ட்டையும் கொடுத்திருந்தார். இந்நிலையில் பிரபல பத்திரிகையாளரான அந்தணன் நடந்துகொண்டிருக்கும் விஷயங்கள் குறித்து சில விஷயங்களை பேசியிருக்கிறார்.
வீடியோ: இதுதொடர்பாக அந்தணன் பேசியிருக்கும் வீடியோவில், "ரவி மாதிரி ஒரு நடிகர் இந்த இடத்துக்கு வந்திருப்பது சாதாரண விஷயமில்லை. அவர் நம்ம வீட்டு பிள்ளையாக இருந்து வளர்ந்தவர். அவருக்கென்று தனி மார்க்கெட் இருக்கிறது. இப்படி இருக்கும்போது இந்த குடும்ப பிரச்னைகளை கொஞ்சம் பக்குவமாக கையாண்டிருக்கலாமோ என்று எனக்கு தோன்றுகிறது.இந்த விஷயத்தை பற்றி பேசுவதற்கு சங்கடமாகவும் இருக்கிறது. ஆனால் இப்போது பேச வேண்டிய தேவை இருக்கிறது.
சுசித்ராவுக்கும் தனுஷுக்கும் பிரச்னை: ரவி விஷயத்தில் சுசித்ராவோ தனுஷை இழுத்து விட்டிருக்கிறார். பொதுவாக ஒரு நபர் பார்ட்டியோ, காதலோ ஒரு நாளைக்கு கொஞ்சம் நேரம்தான் அதற்காக செலவழிப்பார். ஆனால் தனுஷை எல்லா விஷயத்திலும் சிலர் இழுக்கும்போது அவர் என்ன 24 மணி நேரமும் இதே வேலையையா செய்வார்?.. ஒரு நியாயம் வேண்டாமா?.. அவர் பிஸியான நடிகர், தயாரிப்பாளர், கவிஞர், பாடகர், இயக்குநராக இருக்கிறார். சுசித்ராவுக்கும் தனுஷுக்கும் ஏதோ ஒரு தீராத பிரச்னை இருக்கிறது.
ஒருகாலத்தில் சிம்பு, தனுஷ், ஆர்யா, விஷால், ஆர்யா உள்ளிட்டோரெல்லாம் கூடி அட்டகாசம் செய்தார்கள்தான். ஆனால் இப்போது அவர்கள் எல்லாம் சரியாகிவிட்டார்கள். ஆனால் எப்போதோ தனுஷ் நடந்துகொண்டதை இந்த விஷயத்தில் கொண்டு வைப்பது சரியல்ல. நித்தியானந்தா ஒரு பேச்சில், 'என்னை நேசிப்பவர்களையே என்னால் நேசிக்க முடியவில்லை. பிறகு என்னை வெறுப்பவர்களை எப்படி என்னால் வெறுக்க முடியும்' என்று குறிப்பிடுவார். அவர் பேசியதை தனுஷ் கேட்டிருப்பார் போல. அதனால்தான் அவர் கண்டுகொள்ளாமல் போகிறார்போல" என்றார்.


Click it and Unblock the Notifications











