நாங்க சொன்னது பொய்யா?.. உதயநிதியே சொல்லியிருக்காரே.. அஜித் பட இயக்குநரை விளாசிய அந்தணன்
சென்னை: மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் விடாமுயற்சி திரைப்படம் பிப்ரவரி 6ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் உருவாகியிருக்கும் அந்தப் படம் கண்டிப்பாக ஹிட்டடிக்கும் என்கிற நம்பிக்கையில் ஏகே ரசிகர்கள் இருக்கிறார்கள்.முதலில் ஜனவரி 10ஆம் தேதி ரிலீஸாவதாக இருந்த விடாமுயற்சி சில காரணங்களால் தள்ளிப்போனது. இந்தச் சூழலில் மகிழ் திருமேனி குறித்து பிரபல பத்திரிகையாளர் அந்தணன் தெரிவித்திருக்கும் விஷயம் ட்ரெண்டாகியிருக்கிறது.
அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு திரைப்படம் போட்டியாக களமிறங்கிய விஜய்யின் வாரிசு படத்தைவிட நல்ல ரெஸ்பான்ஸை பெற்றது. அந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது தனது அடுத்த படத்தில் நடிக்க கமிட்டானார் அஜித்குமார். முதலில் விக்னேஷ் சிவன் அந்தப் படத்தை இயக்குவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அவர் படத்திலிருந்து வெளியேறினார். அவரது வெளியேறலுக்கு பிறகு மகிழ் திருமேனி இயக்குவதற்காக வந்தார். படத்துக்கு விடாமுயற்சி என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.

ஷூட்டிங்கில் தாமதம்: படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜானில் தொடங்கியது. முதலில் நீரவ் ஷா இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவாளராக கமிட்டானார். பிறகு அவருக்கு பதிலாக ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவாளராக கமிட்டானார். சூழல் இப்படி இருக்க ஆர்ட் டைரக்டர் மிலன் உயிரிழந்தார். இப்படி பல பல காரணங்களால் படத்தின் ஷூட்டிங் தாமதமானது. ஒருகட்டத்தில் படம் ட்ராப்பாகிவிடும்; லைகா நிறுவனத்துக்கு பொருளாதார நெருக்கடி வந்துவிட்டது என்றெல்லாம் விரும்பத்தகாத தகவல்கள் வந்துகொண்டிருந்தன.
டீசர், ட்ரெய்லர்: ஆனால் அப்படியெல்லாம் எதுவும் இல்லை என்று அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா, படத்தில் நடித்திருக்கும் அர்ஜுன் உள்ளிட்டோர் தெரிவித்தார்கள். இதனையடுத்து அதனை உறுதிப்படுத்தும் விதமாக படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், நடித்திருப்பவர்கள் தொடர்பான போஸ்டர்கள் எல்லாம் வெளியாகின. மேலும் திடீரென எந்த வித முன்னறிவிப்பும் இன்றி படத்தின் டீசரை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தது படக்குழு. அதனைத் தொடர்ந்து ட்ரெய்லரும் வெளியானது.
தள்ளிப்போன ரிலீஸ்: தொடர்ந்து படத்திலிருந்து இரண்டு பாடல்கள் வெளியாகின. இரண்டுக்குமே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. படத்தின் ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் கண்டிப்பாக விடாமுயற்சி பந்தயம் அடிக்கப்போவது உறுதிதான் என்று கூறிவருகிறார்கள். படமானது முதலில் ஜனவரி 10ஆம் தேதி ரிலீஸாவதாக இருந்தது. ஆனால் தவிர்க்க முடியாத சில காரணங்களால் படத்தின் ரிலீஸ் பிப்ரவரி 6ஆம் தேதிக்கு தள்ளிப்போயிருக்கிறது. இதற்கிடையே விடாமுயற்சி திரைப்படம் இத்தனை காலம் தாமதமானதற்கு மகிழ் திருமேனிதான் காரணம். அவர் ஷூட்டிங்கை ரொம்பவே ஸ்லோவாக நடத்திவிட்டார் என்று தகவல்கள் வெளியாகின.
அந்தணன் பதிவு: அந்தத் தகவல்களின்படி வலைப்பேச்சு டீமும் தங்களது வீடியோவில் பேசியிருந்தார்கள். அதற்கு மகிழ் திருமேனி எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இந்நிலையில் வலைப்பேச்சு அந்தணன் தனது எக்ஸ் தள பக்கத்தில் கலகத் தலைவன் படத்தின் ஷூட்டிங்கை மகிழ் தாமதமாக நடத்தினார் என உதயநிதி ஸ்டாலின் பேசும் வீடியோவை பகிர்ந்து, "விடாமுயற்சி திரைப்படம் லேட் ஆனதற்கு மகிழ் திருமேனியும் ஒரு காரணம்னு வலைப்பேச்சுல சொன்னதற்கு விளக்கம் கொடுப்பதாக நினைத்து எங்களை வசை பாடியிருந்தார் மகிழ். அவருக்கு கலகத்தலைவன் நிகழ்வில் உதயநிதி கொடுத்த சர்டிபிகேட்தான் நமது பதில்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











