ஏ.ஆர்.ரஹ்மானுக்கே விவாகரத்து பற்றி தெரியாதா?..இசை புயல் வீட்டில் இப்படி ஒரு புயலா?..அந்தணன் ஷேரிங்ஸ்
சென்னை: இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் அவரது மனைவி சாய்ரா பானுவும் விவாகரத்து செய்வதாக நேற்று அறிவித்தனர். இதனையடுத்து இந்திய திரையுலகமே அதிர்ச்சியடைந்தது. இருவருக்கும் ஏன் விவாகரத்து என்பது குறித்து பலரும் பல விஷயங்களை யூகங்களாக சொல்லிவருகின்றனர். இருந்தாலும் ரஹ்மான் வீட்டில் இப்படி ஒரு புயலா என்ற அதிர்ச்சி ரசிகர்களிடம் இருக்கத்தான் செய்கிறது. இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் அந்தணன் இந்த விஷயம் குறித்து பேசியிருக்கிறார்.
இசை புயல், மொசார்ட் ஆஃப் மெட்ராஸ், ஆஸ்கார் தமிழன் என பல செல்ல பெயர்களோடு அழைக்கப்படுபவர் ஏ.ஆர்.ரஹ்மான். ரோஜா படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான அவர் தொடர்ந்து தமிழ், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் தனது திறமையை நிரூபித்து இந்திய அளவில் குறுகிய காலத்திலேயே ஃபேமஸான இசையமைப்பாளராக மாறினார். அதனையடுத்து ஹாலிவுட்டுக்கு சென்று அங்கும் இசையமைத்து கோல்டன் குளோப், கிராமி, ஆஸ்கார் உள்ளிட்ட விருதுகளை வாங்கினார்.

ரஹ்மானின் குடும்பம்: அவர் கடந்த 1995ஆம் ஆண்டு சாய்ரா பானுவை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு கதிஜா, ரஹிமா என்ற இரண்டு மகள்களும், அமீன் என்ற மகனும் இருக்கிறார்கள். கிட்டத்தட்ட 29 வருடங்கள் ரஹ்மானும், சாய்ராவும் இணைந்து வாழ்ந்துவந்த சூழலில் திடீரென நேற்று இரவு சாய்ரா பானு ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில், 'ஏ.ஆர்.ரஹ்மானை விட்டு பிரிவதாக’ தெரிவித்திருந்தார். அது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சூழலில்; சாய்ரா அறிக்கை வெளியிட்ட சிறிது நேரத்தில் ரஹ்மானும் அந்த விவாகரத்தை உறுதி செய்தார்.
அந்தணன் ஷேரிங்ஸ்: இந்நிலையில் இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் சூழலில் பிரபல பத்திரிகையாளர் அந்தணன் வீடியோ ஒன்றில் பேசியிருக்கிறார். அந்த வீடியோவில், “ஏ.ஆர்.ரஹ்மானுக்கு திரைத்துறையில் க்ளீன் பாய் என்ற இமேஜ் இருக்கிறது. அது திரைத்துறையில் வெகு சிலருக்குத்தான் இருக்கிறது. இந்த விவாகரத்து செய்தியை பார்க்கும்போது இசை புயல் வீட்டில் இப்படி ஒரு புயலா என்றுதான் எனக்கு தோன்றியது.
காதல் திருமணம்: ஏ.ஆர்.ரஹ்மானுக்கு Arranged Marriage என்றுதான் எல்லோரும் நினைப்பார்கள். ஆனால் அது உண்மையில்லை. தர்காவுக்கு அவர் அடிக்கடி செல்லும்போது சாய்ரா பானுவை பார்த்திருக்கிறார். இரண்டு பேரும் அப்போது பழகியிருக்கிறார்கள். அந்த சமயத்தில்தான் இரண்டு பேருக்குமான காதல் மலர்ந்தது. ஆனால் தனது காதலை பானுவிடம் ரஹ்மான் சொல்லவில்லை. கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் இருக்கும். அதற்கு பிறகுதான் காதலை இரண்டு பேரும் வெளிப்படுத்தினார்கள்.
ரஹ்மானுக்கே தெரியாது: இரண்டு பேரின் வீட்டு சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. இரண்டு பேரும் நன்றாகத்தான் வாழ்ந்துவந்தார்கள். இப்போது விவாகரத்து என்கிறார்கள். தனக்கு விவாகரத்து நோட்டீஸ் வரும் என்று ரஹ்மானுக்கே தெரியாது என்றும்; அதுவே பெரிய அதிர்ச்சியை அவருக்கு கொடுத்தது என்றும் நாம் விசாரித்தவரை சொல்கிறார்கள். இருந்தாலும் 29 வருடங்கள் கழித்து இவர்கள் பிரிந்திருக்கிறார்கள். அதனை வெளியில் இப்போது அவர்கள் சொல்லியிருக்க வேண்டியதில்லை என்றே தோன்றுகிறது. இன்றைய இளம் தலைமுறையினருக்கு வழிகாட்டியாக இருந்திருக்க வேண்டியவர்கள் இப்படி செய்திருக்கக்கூடாது” என்றார்.


Click it and Unblock the Notifications











