8 பேர் மீது கார் ஏற்றியிருப்பார்.. பூமிகாவுடன் கிசுகிசு.. ஸ்ரீகாந்த் பற்றிய பல மேட்டர்களை சொன்ன அந்தணன்!
சென்னை: ஒரு காலத்தில் ஸ்ரீகாந்தின் மேனேஜர் போல இருந்தவர் தான் பத்திரிகையாளர் அந்தணன். ஆனால், ஸ்ரீகாந்தை பார்த்து 20 வருடங்களுக்கு மேல் ஆகி விட்டதாக தனது புதிய வீடியோவில் பேசியுள்ள அந்தணன், ஆரம்ப காலக்கட்டத்தில் அவர் சந்தித்த பல பிரச்னைகள் குறித்தும், இப்போது அவர் சிக்கியுள்ள பிரச்னை குறித்தும் வெளிப்படையாக பேசியுள்ளார்.
2002ம் ஆண்டு வெளியான ரோஜாக்கூட்டம் படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானாவர் தான் நடிகர் ஸ்ரீகாந்த். முதல் படமே அவருக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. தொடர்ந்து, ஏப்ரல் மாதத்தில், மனசெல்லாம், பார்த்திபன் கனவு என வரிசையாக வெற்றிப் படங்களை கொடுத்து வந்த ஸ்ரீகாந்த் அதன் பின்னர், தோல்வியை சந்திக்கத் தொடங்கினார்.

ரொம்பவே ஆச்சாரமான குடும்பத்தில் இருந்து வந்த ஸ்ரீகாந்த் நடிக்கவே வந்திருக்கக் கூடாது என்றும் ஆரம்பத்தில் அவர் தொடர்பாக வந்த கிசுகிசுவை பார்த்து விட்டு அவருடைய அம்மா, அப்பா எல்லாம் ரொம்பவே வருத்தப்பட்டாங்க. ஆனால், இதெல்லாம் சாதாரணம் தான், நடிகராக வேண்டும் என்றால் பல சவால்களை சந்திக்க வேண்டும் என்றேன் என்றார்.
பலரும் பேச சொன்னார்கள்: நடிகர் ஸ்ரீகாந்துக்கு பக்க பலமாக ஆரம்ப காலக்கட்டத்தில் இருந்தவர் தான் பத்திரிகையாளர் அந்தணன். போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் சிக்கிய ஸ்ரீகாந்த் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், பலரும் ஸ்ரீகாந்த் குறித்து பேசுங்கள் என என்னை தொடர்பு கொண்ட நிலையில், இந்த வீடியோவை வெளியிடுகிறேன் என அந்தணன் தற்போது வெளியிட்டுள்ள வீடியோ தீயாக பரவி வருகிறது.

8 பேர் மீது காரை ஏற்றியிருப்பார்: ரோஜாக்கூட்டம் படம் வெளியான புதிதில் புதிதாக லேன்சர் கார் ஒன்றை வாங்கி தனது நண்பருடன் சென்னை முழுவதும் நள்ளிரவில் ரேஸ் ஓட்டினார். அப்போது, திடீரென ஒரு நபர் குறுக்கே அந்த நேரத்தில் வந்துவிட அவரை இடித்து விடக் கூடாது என இளையராஜா ஸ்டூடியோவுக்கு அருகே இருந்த எலக்ட்ரிக் ஷாப்பில் காரை விட்டு, அந்த கார் மறுபுறம் வந்து போஸ்ட் ஒன்றின் மீது இடித்து மோதி நின்றது. அதன் அருகே, பிளாட்பாரத்தில் பலர் படுத்து உறங்கிக் கொண்டிருந்தனர். நல்லவேளை அந்த இடத்தில், போஸ்ட் இல்லை என்றால் அப்போதே 8 பேர் மீது காரை ஏற்றி பெரிய சிக்கலில் சிக்கியிருப்பார். இன்னொரு முறையும் அவருக்கு கார் விபத்து ஏற்பட்டு, உதட்டில் கிளாஸ் பீஸ் எல்லாம் சொருகி, தீவிர சிகிச்சைக்குப் பிறகு மீண்டு வந்தவர் தான் ஸ்ரீகாந்த் என்றார்.
பூமிகாவுடன் கிசுகிசு: அப்போது வண்ணத்திரை பத்திரிகையில் ஸ்ரீகாந்த் நடிகை பூமிகாவுடன் காரில் ஏறி எங்கே சென்றார் என்கிற கேள்வியுடன் ஒரு செய்தி வந்ததை பார்த்துவிட்டு, என்னப்பா இப்படியெல்லாம் ரொம்ப மோசமாக எழுதுறாங்க என அவரது பெற்றோர்கள் என்னிடம் புலம்பித் தவித்தார்கள். அப்படியொரு ஆச்சாரமான குடும்பத்தில் இருந்து வந்த ஸ்ரீகாந்த், இன்றைக்கு தகாத நபர்களுடன் சேர்ந்துக் கொண்டு பல விஷயங்களை செய்திருப்பது அவரை விட அவரது குடும்பத்தையும் பெற்றோர்களையும் தான் ரொம்பவே பாதிக்கும் என்றார். சில வருடங்கள் முன்பாக ஸ்ரீகாந்தின் தந்தையை திருப்பதியில் பார்க்கும் போது, அங்கே அபார்ட்மெண்ட் வாங்கி செட்டிலாக காரணமே தினமும் திருப்பதி ஏழுமலையான் கோயிலை வீட்டில் இருந்தே பார்ப்பதற்காகத்தான் அங்கே வீடு வாங்கியதாக கூறினார் என்றார் என அந்த தகவலையும் ஷேர் செய்துள்ளார்.
யாருமே உதவ முன் வரவில்லை: பொதுவாக இதுபோன்ற தவறான விஷயங்களை பிரபலங்கள் செய்து மாட்டிக் கொண்டால், அவரை காப்பாற்ற சில தயாரிப்பாளர்களோ, இயக்குநர்களோ, நெருங்கிய நண்பர்களோ சில முயற்சிகளையாவது மேற்கொள்வார்கள். ஆனால், ஸ்ரீகாந்தை காப்பாற்ற யாருமே முன் வரவில்லை. செய்த தவறுக்கு அவர் தண்டனை அனுபவிக்கட்டும் என விட்டு விட்டனர் என்றும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











