Ajith - அவர் உயரத்துக்கு காசை வைங்க.. ஏ.ஆர்.முருகதாஸை உருவ கேலி செய்தாரா அஜித்?.. பிரபலம் சொன்ன சீக்ரெட்
சென்னை: அஜித் இப்போது விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார். கடைசியாக அவர் நடித்த துணிவு திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்ததன் காரணமாக அதே உற்சாகத்தோடு அடுத்த படத்திலும் கமிட்டாகியிருக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்க மகிழ் திருமேனி படத்தை இயக்குகிறார். படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்துவருவது குறிப்பிடத்தக்கது. முதல் ஷெட்யூல் அஜர்பைஜானில் நடந்து முடிந்திருக்கிறது.
அஜித் நடிப்பில் கடைசியாக துணிவு திரைப்படம் சூப்பர் ஹிட்டானது. இதனையடுத்து விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார் அவர். தடையறத்தாக்க, மீகாமன், தடம், கலகத்தலைவன் போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இந்தப் படத்தை இயக்கிவருகிறார். திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்டோர் இந்தப் படத்தில் கமிட்டாகியிருக்கின்றனர். அஜர்பைஜானில் படத்தின் ஷூட்டிங் தொடங்கி ரொம்பவே மும்முரமாக நடந்துவருகிறது. அஜித்தும் முழு ஒத்துழைப்பை கொடுத்துவருகிறார்.
என்ன கதை?: இப்படத்தில் அஜித்தும், திரிஷாவும் கணவன் மனைவியாக நடிக்கிறார்கள் என்றும்; அவர்கள் இருவரும் ஒரு வேலை சம்பந்தமாக வெளிநாடு செல்வார்கள் அப்போது திரிஷா கடத்தப்பட்டுவிடுவார். அவரை அஜித் மீட்பதுதான் ஒன்லைன் என்கிறார்கள் கோலிவுட்டினர். மகிழ் திருமேனி திரைக்கதை அமைப்பதில் கில்லாடி என்பதால் கண்டிப்பாக பக்கா ஆக்ஷன் படம் விறுவிறுப்பான திரைக்கதையுடன் ரெடி என்று இப்போதே கூறிவருகிறார்கள் அஜித்தின் ரசிகர்கள்.
அடுத்த லொக்கேஷன் எங்கே?: அதேபோல் அஜர்பைஜான் ஷெட்யூல் முடிந்ததைத் தொடர்ந்து அடுத்தக்கட்டமாக எங்கு ஷூட்டிங் நடக்கும் என்று கேள்வி எழுந்தது. அதன்படி ஒன்று சென்னையில் செட் போட்டு படமாக்குவார்கள் இல்லை ஹைதராபாத் ராமோஜி பிலிம் சிட்டிக்கு செல்வார்கள் என்று கூறப்படுகிறது. படத்தை ஏப்ரல் அல்லது மே மாதத்தில் திரைக்கு கொண்டு வர மகிழ் திருமேனி முழு மூச்சோடு வேலை செய்துவருவதாகவும் ஒரு பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது.
அடுத்த படம்: விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங்கே இன்னும் முடியாத சூழலில் அஜித்தின் அடுத்தப் படம் குறித்த தகவல் கடந்த சில வாரங்களாக பரவிவருகிறது. அதன்படி திரிஷா இல்லனா நயன் தாரா, அன்பானவன் அடங்காதவன் அசராதவன், மார்க் ஆண்டனி ஆகிய படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்தின் 63ஆவது படத்தை இயக்குவார் என்று கூறப்பட்டது. அதுமட்டுமின்றி இந்தப் படத்துக்கான பூஜையும் சமீபத்தில் நடந்து முடிந்ததாகவும் இன்று அதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல் ஒன்று ஓடியது. ஆனால் இதுவரை எந்த அறிவிப்பும் வரவில்லை.

அந்தணன் வீடியோ: இந்நிலையில் அஜித் குறித்து பிரபல பத்திரிகையாளர் அந்தணன் பேசியிருக்கும் விஷயம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில், "தீனா படத்தின் வெற்றிக்கு பிறகு அஜித்தும், ஏ.ஆர்.முருகதாஸும் மீண்டும் ஒரு படத்தில் இணையவிருந்தனர். அப்போது அந்தப் பட தயாரிப்பாளரிடம் ஏ.ஆர்.முருகதாஸுக்கு எவ்வளவு சம்பளம் என்று அஜித் கேட்டார். ஏனெனில் தீனா படத்துக்கு சில லட்சம் ரூபாய்தான் சம்பளமாக கொடுக்கப்பட்டிருந்தது முருகதாஸுக்கு.
ஒரு கோடி ரூபாய் சம்பளம்: அஜித் இப்படி கேட்டதும் முருகதாஸுக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் என்று சொல்லியிருக்கிறார்கள். அதற்கு அஜித்தோ நக்கலாக சிரித்துக்கொண்டே, அந்த ஒரு கோடியை அடுக்கி வையுங்கள். ஏ.ஆ.முருகதாஸ் அதைவிடவும் உயரமாக இருந்தால் கொடுங்கள் என்று சொல்லியிருக்கிறார். அஜித் உண்மையிலேயே நல்ல மனிதனாக இருந்திருந்தால் தனக்கு ஹிட் கொடுத்த இயக்குநர் வளர வேண்டும் என்றுதான் நினைத்திருப்பார். ஆனால் அவர் அப்படி செய்யாமல் எதற்கு இவ்வளவு சம்பளம் என்று கேட்டிருக்கிறார். இதிலிருந்தே அவருடைய உண்மையான முகம் தெரிகிறது. இவரைத்தான் ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள்" என்றார்.


Click it and Unblock the Notifications











