ரஜினியின் கூலி பாடல்.. அனிருத் அவசியமே இல்லை.. சன் பிக்சர்ஸின் பிளான் இதுதான்.. பிரபலம் ஓபன்
சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் கூலி திரைப்படம் மிகப்பெரிய ஹைப்பை பெற்றிருக்கிறது. படத்திலிருந்து இதுவரை மொத்தம் மூன்று சிங்கிள்கள் வெளியாகியிருக்கின்றன. நேற்று வெளியான மூன்றாவது சிங்கிளான பவர் ஹவுஸ் பாடல் சூப்பர் ஸ்டார் ரசிகர்களிடையே பெரிய வைபை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் பிரபல பத்திரிகையாளரான அந்தணன் வெளியிட்டிருக்கும் வீடியோ ட்ரெண்டாகியிருக்கிறது.
லோகேஷ் கனகராஜ் கமல் ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கி முடித்தவுடேனேயே ரஜினியையும் இயக்குவார் என்று பேச்சு அடிபட்டது. ஆனால் விஜய்யை வைத்து லியோ படத்தை இயக்க சென்றுவிட்டார். பிறகு ஒருவழியாக ரஜினி - லோகேஷ் கூட்டணி இணைகிறது என்ற அறிவிப்பு வெளியானது. அதுமட்டுமின்றி சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை பிரமாண்டமாக தயாரிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
கூலியில் குவிந்த நட்சத்திர பட்டாளம்: இதில் ரஜினியுடன் அமீர் கான், சத்யராஜ், நாகார்ஜுனா, உபேந்திரா, சௌபின் சாஹிர், ஸ்ருதி ஹாசன் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். படமானது ஆகஸ்ட் 14ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. கண்டிப்பாக விக்ரம் படம் போல் இந்தப் படத்தையும் லோகி மெகா ப்ளாக் பஸ்டராக கொடுப்பார் என்ற நம்பிக்கை திரைத்துறையில் இருக்கிறது. அதிலும் 1000 கோடி ரூபாய் வசூலிக்கும் என்ற பேச்சும் ஓடுகிறது.

மூன்று சிங்கிள்கள்: படத்திலிருந்து இதுவரை மூன்று சிங்கிள்கள் வெளியாகியிருக்கின்றன. முதல் சிங்கிள் Chikkidu, இரண்டாவது சிங்கிள் மோனிகா ஆகிய பாடல்கள் சுமாரான வரவேற்பையே பெற்றது. அதனை கேட்ட ரசிகர்கள்; இந்தப் பாடல்களில் வழக்கமான அனிருத்தின் வைப் மிஸ் ஆகிவிட்டதாக வருத்தப்பட்டார்கள். இப்படிப்பட்ட நிலைமையில்தான் மூன்றாவது சிங்கிளான பவர் ஹவுஸ் நேற்று வெளியானது.
செம வைப் போங்க: இந்தப் பாடலில் முதல் இரண்டு பாடல்களில் மிஸ் ஆன வைப் கிடைத்துவிட்டதாக கூறி பாடலை கொண்டாடிவருகிறார்கள் ரசிகர்கள். ஜெயிலர் படத்தின் ஹுக்கும் பாணியில் இந்தப் பாடல் அமைந்திருந்தாலும்; அதுபோன்றே மெகா ஹிட்டாகும் என்றும் கணிக்கவும் பட்டிருக்கிறது. இந்நிலையில் இந்தப் பாடல் குறித்து பிரபல பத்திரிகையாளர் அந்தணன் ஒரு வீடியோவில் பேசியிருக்கிறார்.
அந்தணன் பேச்சு: அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில், "பவர் ஹவுஸ் பாடலை அறிவு எழுதியிருக்கிறார். ரஜினியை ரசிக்காத ஒருவரால் இப்படி வரிகளை எழுத முடியாது. அனிருத்தின் இசையும் நன்றாக இருக்கிறது. இந்த ஜெனரேஷனுக்கான இசையை அனிருத் கொடுக்கிறார். இன்றைய இளைஞர்களின் நாடி, நரம்புகளை பிடித்து உலுக்குகிறார். இப்படி யோசிப்பதற்கே தனியாக ஒரு தைரியம் வேண்டும். இப்பாடலில் பல வரிகள் புரிகின்றன. ரஜினியின் பெருமையை சொல்லும் ஒவ்வொரு வரியையும் நமக்கு புரியும்படி கொடுத்திருக்கிறார்.
ரஜினி மிரட்டிட்டார்: ஒருபக்கம் ரஜினிகாந்த் இந்தப் பாடலில் அனைவரையும் மிரட்டி, சுருட்டி போட்டுவிட்டு; இனிமேல் என்னால் எதையும் செய்ய முடியாது என்பது போல் செய்துவிட்டார். அவர் சும்மா நடந்து வந்தாலே தெறிக்கிறது. அனிருத்தும் மிக அருமையாக இருக்கிறார். ஆளே பயங்கர ஸ்டைலாக மாறியுள்ளார். அவரை நடிகனாக சன் பிக்சர்ஸ் நிறுவனமே முன்னிலைப்படுத்துகிறது. இந்தப் பாடலில் அனிருத் வர வேண்டிய அவசியமே இல்லை. இருந்தாலும் அவரும், லோகேஷும் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார்கள். எனவே அனிருத்தை ஒரு நடிகராக மக்கள் மனதில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பதிய வைத்துவிட்டது" என்றார்.


Click it and Unblock the Notifications











