பாலகிருஷ்ணா காலில் விழுந்தால் எந்த தொல்லையும் இல்லை.. பிரபலம் சொன்ன ஷாக் தகவல்
சென்னை: தெலுங்கு திரையுலகில் ஃபேமஸான நடிகராக வலம் வந்துகொண்டிருப்பவர் பாலகிருஷ்ணா. பாலைய்யா என்று ரசிகர்களால் அழைக்கப்படும் அவர் செய்யும் செயல் ஒவ்வொன்றும் சர்ச்சையை சந்திப்பவை. அதேபோல் அவரது படங்களில் வரும் காட்சிகளும் கடுமையான ட்ரோலுக்கு உள்ளாகுபவை. சூழல் இப்படி இருக்க கடந்த மாதம் நடந்த கேங்ஸ் ஆஃப் கோதாவரி படத்தின் ப்ரோமோஷனில் அஞ்சலியிடம் அவர் நடந்துகொண்ட விதம் பெரும் சர்ச்சையை சந்தித்தது.
என்டிஆரின் ஆறாவது மகனான பாலகிருஷ்ணாவும் தனது தந்தையின் வழியில் பயணித்து சினிமாவில் நடிகரானார். என்டிஆர் இயக்கிய தத்தம்மா கலா என்ற படத்தின் மூலம் 1974ஆம் ஆண்டு மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் பாலகிருஷ்ணா. அதன் பிறகு தொடர்ந்து பல படங்களில் நடித்தவர் 1983ஆம் ஆண்டுவரை கதாநாயகனாக அறிமுகமாகாமல் இருந்தார்.

ஹீரோ பாலகிருஷ்ணா: இந்தச் சூழலில் சந்தானபாரதி - பி.வாசு இணைந்து தெலுங்கில் இயக்கிய சாகசமே ஜீவிதம் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் பாலகிருஷ்ணா. அந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார். சாகசமே ஜீவிதம் படம் பெரும் வரவேற்பைப் பெற்றதால் அடுத்தடுத்த வருடங்களில் தொடர்ந்து கதாநாயகனாக அறிமுகமானார். அந்தவகையில் 1985ஆம் ஆண்டு மட்டும் அவர் நடிப்பில் மொத்தம் ஆறு படங்கள் வெளியாகின.
தொடர்ந்து ஹீரோதான்: அவர் நடித்த படங்கள் வெற்றி தோல்வி என மாறி மாறி ரிசல்ட்டுகளை கொடுத்தன. தோல்வி படங்கள் வந்தாலும் பாலகிருஷ்ணாவுக்கென்று ரசிகர்கள் கூட்டம் பெருகியது. இதன் காரணமாக நூறு படங்களுக்கும் மேல் ஹீரோவாக நடித்துவிட்டார் பாலகிருஷ்ணா. கடைசியாக பகவந்த் கேசரி என்ற படம் வெளியானது.இதற்கிடையே அரசியலில் என்ட்ரி ஆகி தெலுங்கு தேசம் கட்சியின் எம்பியாகவும் இருக்கிறார் அவர்.
சர்ச்சைகளின் நாயகன்: கதாநாயகனாக அவர் பிரபலமடைந்த அளவுக்கு சர்ச்சைகளில் சிக்கியும் பிரபலம் அடைந்தார். ஒரு படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் தன்னுடைய காலணியை அணிவிக்க சொல்லி உதவியாளர் ஒருவரை அடித்தது, தன்னுடன் செல்ஃபி எடுக்க வருபவர்களின் மொபைல் ஃபோன்களை தட்டிவிடுவது, பட விழா ஒன்றில் தொடர்ந்து அழைப்புகள் வந்ததால் தன்னுடைய மொபைல் ஃபோனை அசிஸ்டெண்ட்டிடம் மேடையில் இருந்தபடி தூக்கி எறிந்தது என அவரது ஒவ்வொரு செயல்பாடும் அதகளமாகத்தான் இருக்கும்.
அதேபோல் பிக்பாஸ் 7ல் கலந்துகொண்ட விசித்திரா சொன்ன விஷயமும் பாலகிருஷ்ணாவை மையப்படுத்தியே இருந்தது. கடந்த மாதம்கூட அஞ்சலியிடம் மேடையில் நடந்துகொண்ட விஷயம் உச்சக்கட்ட கண்டனம் பெற்றது. ஆனால் அது பெரிய விஷயம் இல்லை என்கிற தொனியில் அஞ்சலி விளக்கமளித்திருந்தார்.
அந்தணன் பேட்டி: இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் அந்தணன் தனியார் யூட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில், “பாலகிருஷ்ணாவுடன் நயன் தாரா இதுவரை 4 படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் அவருக்கு அஞ்சலிக்கு நடந்தது போல் நடந்தது இல்லை. பாலகிருஷ்ணாவை பொறுத்தவரை தன்னை மதித்து நடந்துகொள்ள வேண்டும். படப்பிடிப்புக்கு சென்றவுடன் அவரது காலில் விழுந்து வணங்கிவிட்டால் எல்லாம் முடிந்துவிட்டது. அதற்கு பிறகு அவரிடமிருந்து எந்த டார்ச்சரும் இருக்காது. நீங்கள் நிம்மதியாக நடிக்கலாம்” என்றார்.


Click it and Unblock the Notifications











