இப்போதும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.. டைவர்ஸில் அந்த ஸ்டைல்.. தனுஷ் - ஐஸ்வர்யா பற்றி பிரபலம் ஓபன்
சென்னை: ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை தனுஷ் காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். கடந்த 2022ஆம் ஆண்டு முதல் தனியாக வாழ்ந்துவரும் தனுஷும், ஐஸ்வர்யாவும் இப்போது சட்டப்பூர்வமாக விவாகரத்து கேட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விண்ணப்பித்திருப்பதாக கூறப்படுகிறது. சூழல் இப்படி இருக்க அவர்களது விவாகரத்து குறித்து பிரபல பத்திரிகையாளர் அந்தணன் வீடியோ ஒன்றில் பேசியிருக்கிறார்.
காதல் கொண்டேன் படத்தை பார்த்து தனுஷுடன் பழக ஆரம்பித்த ஐஸ்வர்யா பிறகு அவரை காதலித்தார். இருவீட்டார் குடும்பத்தின் சம்மதத்துடன் கடந்த 2004ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். யாத்ரா, லிங்கா இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். சுமூகமாக போய்க்கொண்டிருந்த அவர்களது திருமண வாழ்க்கை கடந்த 2022ஆம் ஆண்டு பிரிவை சந்தித்தது. இப்போது அவர்கள் சட்டப்பூர்வமாக விவாகரத்து வேண்டி குடும்பநல நீதிமன்றத்தில் விண்ணப்பித்திருக்கின்றனர். இந்தச் சூழலில் இந்த விவகாரம் குறித்து பத்திரிகையாளர் அந்தணன் ஒரு வீடியோவில் பேசியிருக்கிறார்.

அந்தணன் பேச்சு: இதுகுறித்து அந்தணன் பேசுகையில், "தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா ஒரு இயக்குநராக இருந்தாலும் அவரால் ஒரு காலகட்டத்தில் வீட்டு வாடகைக்கூட கட்ட முடியாத நிலைமையே இருந்தது. தனுஷின் சிறு வயது காலங்கள் அனைத்துமே வறுமையாலும், கஷ்டத்தாலும் நகர்ந்தவையே. அப்படி ஒரு சூழ்நிலையில் இருந்து தனுஷ் படிப்படியாக வளர்ந்து ஒரு நடிகராக மாறி ரஜினி விட்டுக்கு மருமகனாக மாறுவது என்பதெல்லாம் சினிமாவில் மட்டுமே நடக்கக்கூடியது. ஆனால் அது நிஜத்தில் நடந்தது.
பொறாமை: ரஜினி வீட்டு மருமகனாக தனுஷ் மாறியபோது பெரும்பான்மையான பிரபலங்கள் பொறாமையுடனும், எரிச்சலுடனும் பார்த்தார்கள். ஆனால் தனுஷின் நில நலம்விரும்பிகள், பையன் சரியான இடத்துக்குத்தான் சென்றிருக்கிறார் என்று நினைத்தார்கள். இப்படி இருந்த தனுஷ் இன்று இப்படி ஒரு விவாகரத்து முடிவை எடுத்திருக்கிறார் என்றால் அதன் பின்னால் என்ன காரணம் இருக்கிறது என்பதை நான் சில பேரிடம் விசாரித்தேன். அப்போது அவர்கள் கூறியது அதிர்ச்சியை கொடுத்தது.
எல்லாமே ஒரு ஏற்பாடு: ஆம் இந்த விவாகரத்தே ஒரு ஏற்பாடுதான் என்று சொல்கிறார்கள். நேற்றுவரைகூட தனுஷும், ஐஸ்வர்யாவும் ஃபோனிலும், வாட்ஸ் அப்பிலும் நன்றாகவே பேசிக்கொண்டிருந்தார்கள். தனுஷ் வாங்கியிருக்கும் பல கோடி ரூபாய் சொத்துக்களை மனைவியின் பெயரையும் இணைத்துதான் வாங்கியிருக்கிறார். இப்போது விவாகரத்து ஆனாலும் பரவாயில்லை சொத்துக்கள் அப்படியே இருக்கட்டும் என்று கூறிவிட்டாராம். 2கே கிட்ஸ் மத்தியில் இப்போது சிச்சுவேஷன்ஷிப் என்ற ரிலேஷன்ஷிப் இருக்கிறது.
சிச்சுவேஷன்ஷிப் என்றால்?: அதாவது தன்னுடன் பயணிக்கும் நபர் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் பயணிக்கலாம். தன்னிடம் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் சுதந்திரம் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் ஒருமுறை பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டால் உடனே விலகிவிட வேண்டும். இவர்கள் விவாகரத்தும் இந்த சிச்சுவேஷன்ஷிப் என்ற பெயரில்தான் நடந்திருப்பதாக சொல்லப்படுகிறது. இதனை தனுஷின் நெருங்கிய வட்டாரத்தினர் என்னிடம் கூறினர்.
இயல்பான சூழ்நிலை: அவர்களின் மகன்களும் இருதரப்பினர் வீட்டாருடன் சகஜமாக பேசுகிறார்கள். சென்றும் வருகிறார்களாம். அந்த மகன்களுக்கு அம்மாவும், அப்பாவும் பிரிந்துவிட்டார்கள் என்ற ஒரு நினைப்பே வரவில்லையாம். அந்த அளவுக்கு இயல்பாக சூழ்நிலை இருக்கிறது. அவர்களும் அப்படியே நடந்துகொள்கிறார்கள்" என்றார்.


Click it and Unblock the Notifications











