தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து.. காரணமே நயன்தாராதானாம்.. குண்டை தூக்கி போட்ட பிரபலம்

சென்னை: நடிகர் தனுஷும், ரஜினிகாந்த்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவும் விவாகரத்து பெறும் முடிவில் இருக்கிறார்கள். அவர்கள் தாக்கல் செய்த விவாகரத்து மனு குறித்தான தீர்ப்பு இன்னும் சில நாட்களில் வரவிருக்கிறது. எந்த மாதிரியான தீர்ப்பு வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள். இதற்கிடையே தனுஷுக்கும், நயனுக்கும் மோதலும் உருவாகியிருக்கிறது. இந்தச் சூழலில் தனுஷ் குறித்து பிரபல பத்திரிகையாளர் அந்தணன் பேசியிருக்கும் விஷயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தனுஷும் ஐஸ்வர்யாவும் காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். அவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். கடந்த 2004ஆம் ஆண்டு இரண்டு பேருக்கும் திருமணம் நடைபெற்றது. பிறகு இருவரும் சுமூகமாக வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருந்தனர். ஆனால் சில வருடங்களுக்கு முன்பு அவர்கள் பிரிவதாக அறிவித்தார்கள். இருந்தாலும் அவர்கள் இரண்டு பேரையும் எப்படியாவது சேர்த்து வைத்துவிட வேண்டும் என்பதில் இரு குடும்பத்தினரும் உறுதியாக இருந்தார்கள்.

dhanush aishwarya nayanthara

ரஜினியின் ஆர்வம்: அந்தவகையில் ரஜினிகாந்த்தும் அவர்களை சேர்த்து வைப்பதற்கு ரொம்பவே ஆர்வம் காட்டினார். ஏனெனில் தனக்கும் வயதாகிவிட்டது; பேரன்களும் வளர்ந்துவிட்டார்கள். இந்த மாதிரியான நேரத்தில் இவர்களது விவாகரத்து தேவையில்லாதது என்று அவர் நினைத்ததாகவும்; தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறப்பட்டது. அதுமட்டுமின்றி தனுஷ் குடும்பத்தினரும் இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் சொல்லப்பட்டது.

விவாகரத்து மனு: ஆனால் இரண்டு பேருமே குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து மனுவை தாக்கல் செய்தார்கள். முதலில் மனு இரண்டு தடவை விசாரணைக்கு வந்தபோது இருவருமே ஆஜராகவில்லை. அதன் காரணமாக மீண்டும் அவர்கள் இணைவார்கள் என்று சொல்லப்பட்டது. மேலும் இருவரும் சேர்ந்து வாங்கிய வீட்டில்தான் இனி வசிப்பார்கள் என்றும் தகவல்கள் கசிந்தன. ஆனால் யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்டாக சில நாட்களுக்கு முன்பு விவாகரத்து வழக்கு விசாரணைக்கு இருவரும் ஆஜரானார்கள்.

அந்தணன் பேட்டி: இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு இன்னும் சில நாட்களில் வரவிருக்கிறது. இந்நிலையில் அந்தணன் தனியார் யூட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில், "நயன்தாரா மீது தனுஷ் ஏற்கனவே கோபத்தில்தான் இருந்தார். ஏனெனில் நானும் ரௌடிதான் படத்தில் நயனும், விக்னேஷ் சிவனும் நடந்துகொண்டது அப்படி. அதற்கு பிறகு ஆவணப் படத்துக்காக வீடியோக்களையும் தனுஷிடம் அவர்கள் நேரடியாக கேட்காமல் தனுஷின் மேனேஜரை வைத்து குறுக்கு வழியில் சென்றார்கள்.

நயன் வைத்த ட்விஸ்ட்: ஒருகட்டத்தில் இந்த விவகாரம் தொடர்பாக நயனும், தனுஷும் சந்திப்பதாக இருந்தது. அப்போது நயனோ நான் உங்கள் ஆஃபிஸுக்கு வரமாட்டேன். நீங்கள் என் ஆஃபிஸுக்கு வாருங்கள் என்று கூறினார். இதனால் மேற்கொண்டு கடுப்பான தனுஷ் அத்தோடு விட்டுவிட்டார். அதற்கு பிறகுதான் தனுஷை தாக்கி நயன்தாரா கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். தனுஷ் இந்த சந்தர்ப்பத்துக்காகத்தான் காத்திருந்தார்.

நயன் காரணம்: இதற்கிடையே தனுஷும், ஐஸ்வர்யாவும் இப்போது விவாகரத்து கேட்டு நிற்கிறார்கள். அதற்கு காரணமே நயன்தாராவை தனுஷ் காதலித்தார். நயனும் தனுஷை காதலித்ததாக சொல்லப்பட்டது. தனுஷுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் வந்த பிரச்னையில் முதல் விதையை போட்டதே நயன்தாராதான். இது திரைத்துறையில் பலருக்கும் தெரிந்த ஒன்றுதான்" என்றார். முன்னதாக Nayanthara Beyond The Fairy tale என்ற ஆவணப் படத்தில் நானும் ரௌடிதான் பட ஃபுட்டேஜை பயன்படுத்தும் விவகாரத்தில் தனுஷுக்கும் நயனுக்கும் மோதல் உருவானது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X