தனுஷ் - ஐஸ்வர்யா டைவர்ஸ் விஷயம்.. சிம்புவ ஏன் இதுல இழுக்குறீங்க.. போட்டுத்தாக்கிய பிரபலம்

சென்னை: தனுஷும், ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவும் காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். கிட்டத்தட்ட 20 வருடங்கள் சுமூகமாக போய்க்கொண்டிருந்த அவர்களது திருமண வாழ்க்கை இப்போது பிரிவில் நிற்கிறது. இரண்டு பேரையும் சேர்த்து வைக்க எவ்வளவோ முயற்சிகள் நடந்தாலும் தற்போது அவர்கள் விவாகரத்து கேட்டு நீதிமன்ற படிகள் ஏறியிருப்பதாக கூறப்படுகிறது. நிலைமை இப்படி இருக்க இந்த விவகாரத்தில் சிம்புவின் பெயரையும் சிலர் இழுத்துவிட்டனர். இந்தச் சூழலில் பத்திரிகையாளர் அந்தணன் பல விஷயங்களை பேசியிருக்கிறார்.

காதல்கொண்டேன் படத்தின்போது ஏற்பட்ட அறிமுகம் நாளடைவில் தனுஷுக்கும், ஐஸ்வர்யாவுக்கும் காதலாக மாறியது. பிறகு இருவீட்டார் சம்மதத்துடன் அவர்கள் திருமணம் செய்துகொண்டார்கள். அவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். ஆனால் திடீரென்று சில வருடங்களுக்கு முன்பு இருவரும் திருமண வாழ்க்கையிலிருந்து வெளியே வந்தனர். அதனையடுத்து அவர்களை சேர்த்துவைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எப்படியாவது தனுஷும், ஐஸ்வர்யாவும் சேர்ந்துவிடுவார்கள் என்றே பலரும் கருதினர்.

Journalist Anthanan Talks about Dhaush Aishwarya issue here are details

விவாகரத்து: ஆனால் யாரும் எதிர்பார்க்காதவிதமாக தங்களுக்கு விவாகரத்து வேண்டும் என்று கேட்டு நீதிமன்றம் சென்றிருப்பதாக கூறப்படுகிறது. சூழல் இப்படி இருக்க இந்த விவாகரத்து விஷயத்தில் சிம்புவின் பெயரையும் சிலர் இழுத்துவிட்டனர். ஏனெனில் ஏற்கனவே சிம்புவும், ஐஸ்வர்யாவும் காதலித்ததாக ஒரு தகவல் பல வருடங்களுக்கு முன்பு ஓடியது நினைவுகூரத்தக்கது. இந்நிலையில் பத்திரிகையாளர் அந்தணன் இந்த விவகாரம் குறித்து சமீபத்தில் தனியார் யூட்யூப் சேனலுக்கு பேட்டி அளித்தார்.

அந்தணன் பேட்டி: அந்தப் பேட்டியில் பேசிய அந்தணன், "ஐஸ்வர்யா இப்போது இரண்டு குழந்தைகளுக்கு தாய் என்ற நிலையில் இருக்கிறார். எல்லோருக்கும் கடந்த காலம் ஒன்று உண்டு. அதனை இப்போது கிளறுவது எல்லாம் அசிங்கம். வேண்டாத வேலை. ஐஸ்வர்யாவுக்கும் சிம்புவுக்கும் இடையேயான காதல் என சொல்லப்படுவது டீன் ஏஜில் வந்தது. ஆனால் வயது முதிர்ச்சி அடையும்போது எது சரி, எது தவறு என்பது தெரியவரும். சினிமாவில் எத்தனையோ பேருக்கு காதல் திருமணம் நடந்திருக்கிறது. இருந்தாலும் அதிலிருந்து வெளியேறி வேறு வாழ்க்கையை சிலர் வாழ்ந்திருக்கிறார்கள், மீண்டும் இணைந்திருக்கிறார்கள்.

பெரிய விஷயம் கிடையாது: சினிமா துறையை பொறுத்தவரை காதல் அவ்வளவு பெரிய விஷயம் எல்லாம் கிடையாது. அதனால் அவரது முன்னாள் காதலை பிடித்து தொடங்கிக்கொண்டு நீங்கள் ஏன் அந்த உறவிலிருந்து வெளியே வந்தீர்கள் என்று கேள்வி கேட்க முடியாது. வெளியே இருப்பவர்களின் வாழ்க்கையில் நடக்கும் விஷயங்கள் சினிமாவில் இருப்பவர்கள் வாழ்க்கையில் நடப்பதைவிட அதிகம்.

முன்பு போல் இல்லை: சிம்பு முன்பு போல் எல்லாம் கிடையாது. இன்று இருக்கக்கூடிய பக்குவமும், அறிவும் அவருக்கு அன்று இல்லை. சிம்புவுடன் இப்போது பேசினால் தத்துவார்த்தமாக பேசுவார். எனக்கு தெரிந்து தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்தில் பழி வாங்கும் எண்ணம் எல்லாம் சிம்புவுக்கு கிடையாது. அவர் அப்படி நினைத்திருந்தால் ஹன்சிகாவை பழி வாங்கியிருக்கலாம். ஆனால் அவர்களது காதல் முறிந்து பிறகு ஹன்சிகா மோத்வானி குறித்து சிலம்பரசன் அசிங்கமாக பேசியது கிடையாது. அதேபோல் நயன்தாராவையும் அவர் எங்கும் தவறாக பேசியதில்லை" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X