விஜய் சந்தித்தால் ஆயுள் கூடும்.. கராத்தே ஹுசைனி விஷயத்தில் நன்றி கெட்டுவிட்டார்கள்.. பிரபலம் ஓபன்
சென்னை: கராத்தே மாஸ்டரான ஷிஹான் ஹுசைனிக்கு ரத்த புற்றுநோய் வந்திருக்கிறது. அதுதொடர்பாக அவரே தனியார் யூடியூப் சேனல்களுக்கு பேட்டி கொடுத்த பிறகுதான் அந்த விஷயம் வெளியில் தெரிய ஆரம்பித்தது. அந்தப் பேட்டியில் அவர் தான் இன்னும் கொஞ்ச நாட்கள்தான் வாழ்வேன் என்று கூறி விஜய் மற்றும் பவன் கல்யாண் ஆகியோரிடமும் கோரிக்கையையும் வைத்தார். சூழல் இப்படி இருக்க அவரை விஜய் இன்னமும் வந்து சந்திக்காத நிலையில் பிரபல பத்திரிகையாளர் அந்தணன் பேசியிருக்கும் விஷயம் ட்ரெண்டாகியிருக்கிறது.
கராத்தே ஹுசைனி என்று அழைக்கப்படுபவர் ஷிஹான் ஹுசைனி. கராத்தே மட்டுமின்றி வில்வித்தை போன்ற விளையாட்டுக்களையும் பலருக்கு கற்றுகொடுத்தவர். அவரிடம் கற்றுக்கொண்டவர் இந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் மிகப்பெரிய வெர்றியை பெற்று அடையாளப்பட்டிருக்கிறார்கள். அதன் காரணமாக பலருக்கும் அவர் குரு ஸ்தானத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் சினிமாவிலும் பல பணிகளை செய்திருக்கிறார். கே.பாலசந்தர்தான் புன்னகை மன்னன் திரைப்படத்தில் அவரை அறிமுகப்படுத்தினார்.
பத்ரியில் ஹுசைனி: புன்னகை மன்னன் திரைப்படத்துக்கு பிறகு ஹுசைனி ஒரு சில படங்களில் நடிக்க செய்தார். மேலும் அந்தப் படங்களில் வேறு சில பணிகளையும் செய்து தன்னை திரைத்துறையில் தக்க வைத்துக்கொண்டார். இருப்பினும் அவருக்கு பெரிய வெளிச்சம் எதுவும் கிடைக்காமல் இருந்தது. அப்படிப்பட்ட நிலையில்தான் அவர் பத்ரி படத்தில் நடித்தார். அதில் விஜய் மற்றும் ரியாஸ் கானுக்கு கோச்சராக வருவார். முக்கியமாக பத்ரி க்ளைமேக்ஸுக்கு முன்னதாக ஒரு பாடலில் விஜய்க்கு இவர்தான் ட்ரெய்ன் செய்வார். அதன்மூலம் ஓரளவுக்கு ஃபேமஸ் ஆனார்.

உண்மையிலும் குரு: படத்தில் மட்டுமின்றி உண்மையிலும் விஜய்க்கு இவர் குருவாக இருந்ததாக சொல்லப்படுவதுண்டு. அதேபோல் பவன் கல்யாணுக்கும் ஹுசைனிதான் கராத்தே குரு என்பது குறிப்பிடத்தக்கது. பெரிய திரையில் மட்டுமின்றி சின்னத்திரையிலும் தோன்றிய அவர்; தனியார் சேனல் ஒன்றில் தோன்றில் தொலைக்காட்சி மூலமும் கராத்தே பயிற்சி அளித்தார். அதேபோல் அதிரடி சமையல் என்கிற பெயரிலும் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் அவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரத்த புற்றுநோய்: இப்படிப்பட்ட சூழலில் அவருக்கு ரத்த புற்றுநோய் வந்திருக்கிறது. அதற்கான சிகிச்சையில் அவர் இப்போது இருந்தாலும் இன்னும் சில நாட்கள்தான் உயிரோடு இருப்பேன் என்று அவரே சொல்லியிருக்கிறார். சமீபத்தில் யூடியூப் சேனல்களுக்கு அளித்த பேட்டியை வைத்துதான் அவருக்கு இப்படி ஒரு நிலைமை வந்திருப்பதாக அனைவரும் தெரிந்துகொண்டார்கள். அதனைத் தொடர்ந்து பலரும் அவர் நலம் பெற வேண்டிக்கொண்டிருக்கின்றனர். உதவிகளும் வர தொடங்கியிருக்கின்றன. மேலும் அவர் விஜய் வீட்டுக்கு ஒரு வில்வித்தை வீரர், வீராங்கனையை உருவாக்க வேண்டும் என்று கோரிக்கையும் வைத்திருக்கிறார்.
அந்தணன் பேட்டி: இந்நிலையில் பிரபல பத்திரிகையாளரான அந்தணன் இந்த விவகாரம் குறித்து ஒரு வீடியோவில் பேசுகையில், "கராத்தே ஹுசைனியை 2கே கிட்ஸுக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால் 90ஸ் கிட்ஸுக்கு தெரியும். விஜய், பவன் கல்யாண் போன்றோருக்கு கராத்தே பயிற்சி அளித்தவர். அவர்கள் மட்டுமின்றி பலருக்கும் அளித்திருக்கிறார். இப்போது அவருக்கு ரத்த புற்றுநோய் வந்திருக்கிறது. விஜய் வந்து தன்னை சந்திக்க வேண்டும் என்று ஹுசைனி ஆசைப்படுகிறார். அப்படி விஜய் வந்து சந்தித்தால் கண்டிப்பாக தனது ஆயுள் கூடும் என்று அவர் நினைக்கிறார் என்று தெரிகிறது.
நன்றி கெட்ட திரையுலகம்: ஹுசைனி தமிழ் சினிமாவில் பெரிய பங்காற்றியிருக்கிறார். அதாவது ஒருகாலத்தில் திருட்டு விசிடி புழக்கம் அதிகமாக இருந்தது. அதனை தடுப்பதற்கு ஹுசைனி தனது டீமோடு உழைத்தவர். பல படங்களின் விசிடிக்கள் வராமல் இருந்ததற்கு ஹுசைனிதான் காரணம். ஆனால் இப்போது அவர் இந்த நிலைமையில் இருக்கும்போது திரையுலகில் இருப்பவர்கள் சென்று சந்தித்திருக்க வேண்டும். அவர் விஷயத்தில் தமிழ் திரையுலகம் நன்றி கெட்டுப்போய்விட்டது" என்றார்.


Click it and Unblock the Notifications